காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான பாரம்பரியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம், கீழவெண்மணி படுகொலை, மரிச்சபி படுகொலை, சிலைத்திருட்டு, தலித் அரசியல் என இந்திய அரசியல், வரலாற்றுக் களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட முக்கியமான நூல்களின் சாராம்சமானது இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது…
View More காஷ்மீர் முதல் ஈழம் வரை – புத்தக அறிமுகம்Tag: புத்தகம்
வீர சாவர்க்கரின் “பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – ஓர் அறிமுகம்
“பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – வீர சாவர்க்கர், தமிழில் பத்மன். இந்த…
View More வீர சாவர்க்கரின் “பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – ஓர் அறிமுகம்ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்பு
தமிழ்நாட்டின் நினைவிலேயே ஏறக்குறைய விலகிவிட்டிருந்த “திருநெல்வேலிப் புரட்சி”யையும் அதன் முக்கியப்புள்ளியான வாஞ்சிந்தாதனின் வீர வரலாற்றையும் குறித்து பல்லாண்டு கால உழைப்பைச் செலுத்தி, ஆதாரங்களைத் திரட்டி அதன் அடிப்படையில் மிகச்சொற்பமான புனைவுத்தன்மை சேர்த்து ரகமி எழுதிய நூல் இது. அச்சில் இல்லாதிருந்த இந்த நூலை, இந்த சுதந்திரப் பவள விழா ஆண்டில் பாரதி நூலகம், மறுபதிப்பு செய்துள்ளது. அதே பழைய எழுத்துருவில், படங்களுடன் சேர்த்து வெளியிருப்பது மிகச் சிறப்பு..
View More ரகமியின் வீர வாஞ்சி: மறுபதிப்புசுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்
நூலின் தலைப்பில் குறிப்பிட்ட பேசுபொருளை விளக்குவதோடு கூட, பொதுவாக கிறிஸ்தவ மதம் குறித்த இந்துக்களின் விமர்சனங்களையும், கிறிஸ்துவ மத வரலாற்றில் உள்ள சர்ச்சைகள், விவிலியத்தில் உள்ள சில விஷயங்கள் ஆகிய பலவற்றையும் முன்னும் பின்னுமாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர். அந்த விதத்தில், கிறிஸ்தவ மதப்பிரசாரங்களை எதிர்கொள்வதற்கும் எதிர்ப்பதற்கும் விழிப்புணர்வு கொண்ட இந்துக்களுக்கு உதவக் கூடிய கையேடு என்ற அளவிலேயே இந்த நூலைக் கருதலாம்…
View More சுவாமி விவேகானந்தர் – மிஷனரி மோதல்: புத்தக அறிமுகம்இந்துக்களுக்கு இத்தனை தெய்வங்கள் ஏன்?
சாதாரண மனிதர்களுக்கு பனி என்பது ஒரே விதமாக வெண்மையாகவே தென்படும். எனவே ‘பனி’ என்றால் எல்லா பனியும் ஒன்றே என்று எண்ணுவோம். ஆனால் பனியோடு அதிக சமீபத்தில் வாழும் துருவப் பிரதேசவாசிகளான எஸ்கிமோக்களுக்கு பனியில் பல ரகங்களைத் தெரியும்.
பனியில் 48 விதங்கள் இருப்பதாக அவர்களின் விஞ்ஞானம் தெரிவிக்கிறது. அத்தனை வித பனிகள் பற்றிய ஆழ்ந்த அறிவு அவர்களுக்கு ஏற்படக் காரணம் பனியோடு அவர்களுக்குள்ள அருகாமையும், நெருக்கமுமே. அதைப்போல ‘ஒன்றே கடவுள்!’ என்று உணர்ந்து நிரூபித்து விளக்கிய போதிலும் கடவுளோடு அதிக நெருக்கமும் முழுமையான அனுபவமும் பெற்ற காரணத்தால் இறைவனை அனேக வித தேவதைகளின் வடிவத்தில் ஹிந்து தர்மம் தரிசிக்க முடிந்தது. விவரிக்கவும் முடிந்தது. கடவுளோடு அப்படி ஒரு நெருங்கிய, நித்தியத் தொடர்பு கொண்ட உண்மையான தெய்வ தரிசனம் ஹிந்துக்களுடையது…
ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்
ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். இந்த சூழலில், சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு அரசியல் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் B.R.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக. எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது…
View More ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்மாயப்பெருநதி: புத்தக அறிமுகம்
ஒரு நல்ல நாவலை வாசிப்பது ஒரு நதிக்குள் மூழ்கித் திளைப்பதைப் போல. கொஞ்சம் மூழ்கித் திளைக்கையில் இன்னொரு உலகுக்கு நம்மை அழைத்துச்செல்லும். மாயப்பெருநதி நாவலில் இரண்டு உலகங்களுக்கு. வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் இரு கதைகளின் அடிநாதமாக அவைகளை இணைக்கும் ஒரு சரடாக, தன் முன் நிகழும் சம்பவங்களின் சாட்சியாக, கதாபாத்திரங்களின் உணர்வலைகளை சுழற்றியடித்துக் கொண்டே தாமிரபரணி ஓடுகிறது.. ஹரன்பிரசன்னாவின் முதல் நாவல் இது. ஆனால் முதல் நாவலிலேயே நம்மைத் தன் எழுத்தால் கட்டிப் போடுகிறார்…
View More மாயப்பெருநதி: புத்தக அறிமுகம்சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்
இந்த பாரத மண்ணுக்கு , அதன் விடுதலைக்கு , அதன் நெடிய பண்பாட்டுக்கு – தன்னுடைய உடல் , பொருள் மற்றும் வளமான எதிர்காலம் முதலியனவற்றை ஆகுதியாக அளித்த மகத்தான ஒரு செயல் வீரரின் தியாகத்தை என்னுடைய எழுத்திலே கொண்டு வர இயலாது என்ற அவநம்பிக்கையை இந்த நூல் என்னுள் தோற்றுவித்தது.. அருமையான இந்த நூலினை எழுதியவர் விக்ரம் சம்பத். பன்முகத் திறன்கள் பெற்ற ஆளுமையுள்ள ஒரு வரலாற்று அறிஞர் . இந்த நூலில் ஏரளாமான தரவுகள் / ஆவணங்கள் கொண்டு அற்புதமான இதனை வடிவமைத்து உள்ளார்.. பிரிட்டிஷ் காலனிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, சாவர்க்கரை மிகவும் துன்புறுத்தி விட்டது . இந்தக் கொடுமை “ மகாத்மா ” காந்திக்கும் “ பண்டித ” நேருவுக்கும் கூட நிகழவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக இரு ஆயுள் தண்டனைகள் பெற்ற ( 50 ஆண்டுகள் ) சாவர்கர் ஒரு கைதி என்ற முறையிலும் , ஓர் ஹிந்து என்ற முறையிலும் , ஓர் சித்பவன் பிராமணர் என்ற முறையிலும் எவ்வாறு தன்சிறைவாசத்தை எதிர்கொண்டார் ?…
View More சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
இக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்… என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும் சிறுவர்களும் அடையவேண்டும் என்பதே என் ஆசை. அந்த ஆசைக்கு நியாயத்தை இக்கதைகளில் செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்…
View More மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு
தமிழகத்தை வாழ்விக்க வந்த தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 – 1985). சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி – சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு’ என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது. மூன்று பாகங்களாக, 1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் விரிவாக இந்த நூல் விளக்குகிறது…
View More சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு