இசையால் தோய்த்து எடுத்திருக்கிறார் இந்தப் புதினத்தை. தி.ஜா.வின் எழுத்துக்களை, கற்பனையை ஸ்வரமாக்கி வரமாக்கி வைத்திருக்கிறார்.. பாபுவை கண்டுபிடித்த யமுனா அவனுடன் இணையும் பொழுது வரும் வயலின் கூட்டம், மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை கமகத்துடன் கமகமவென்று இசை வாசனை வீசைசெய்வது தெய்வீகம்… இளையராஜாவின் இசை – தி.ஜானகிராமனின் மோகமுள்ளுக்கு கிடைத்த பாக்கியம், “பொன்னியின் செல்வன்” தவறவிட்ட மகுடம்…
View More மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்Tag: பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வை
ஒருவகையில் பொன்னியின் செல்வன் ஒரு “தமிழ் ஹாரி பாட்டர்” போல. சோழ சாம்ராஜ்ய வரலாற்றில் நிலவிய குழப்பத்தைக் களமாக்கி, ஒரு மாபெரும் காவியத்தன்மை கொண்ட நாவலை சிந்தித்தது கல்கியின் கூர்மையான வரலாற்று பிரக்ஞையையும், ஒரு கதாசிரியராக அவரது கற்பனை வளத்தையும் காட்டுகிறது.. ஒட்டுமொத்தமாக படம் சுவாரஸ்யமாக, ரசிக்கும்படியாக இருந்தது. சிற்சில போதாமைகள் தவிர்த்து பெரிய குறைகள், சொதப்பல்கள் எதுவும் இல்லை. இந்தப் படத்தின் முக்கியமான ஒரு குறை என்றால், இந்த மூன்று பாத்திரங்களைத் தவிர்த்து மற்றவைஅவ்வளவு சரியாக வெளிப்படவில்லை என்பது தான்…
View More பொன்னியின் செல்வன் பாகம்-1: திரைப்பார்வைசென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்
பகவத்கீதை ஏன் உலகிலேயே மோசமான புத்தகம், இந்துமதத்தை அழித்து ஒழிப்பதே நமது நோக்கம் போன்ற பிரசாரங்களை வேறுவேறு தலைப்புகளில் சொல்லும் விதவிதமான புத்தகங்கள் கணிசமான அரங்குகளில் இருந்தன. இதற்கு நடுவில், வாசிப்பின்பத்தையும் அறிவுத் தேடலையும் மையப் படுத்தி நல்ல புத்தகங்களை விற்கும் அரங்குகளும் ஆங்காங்கே தென்பட்டன..”புத்தகங்களில் நான் பொன்னியின் செல்வனாக இருக்கிறேன்” என்று மிஸ். தமிழ்த்தாயின் கீதை கட்டாயம் சொல்லக்கூடும். அந்த அளவுக்கு சின்னதும் பெரிசுமாக விதவிதமான அளவுகளில், விதவிதமான அட்டைப்படங்களுடன் பொ.செ. வீற்றிருந்தது… சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு. அது தொடர்ந்து இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய வீச்சுடன் நடப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம்…
View More சென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்