தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். அத்தகைய தமிழ் நீடுவாழ்க!’ என உளங்கனிந்து பெருமிதத்தில் விம்மி வாழ்த்தும் புலவர் யார்?….
View More தமிழன்னையின் அணிகலன்கள்Tag: மணிமேகலை
பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31
மேற்சொன்ன நான்கு வகையான நெறிகளின் வழியே நடந்து மனத்தில் உள்ள இருள் நீங்கப் பெறவேண்டும். எவ்வித முன்பின் முரண் வாக்குகள் கூறாமல் தெளிவான அறவுரைகள் மூலம் அறவண அடிகள் மணிமேகலையின் மனதில் ஞானதீபம் ஒன்றை ஏற்றிவைத்தார்.
மணிமேகலை தவக்கோலம் பூண்டு அறவணஅடிகளின் அறவுரைகளைக் கேட்டு பிறப்பிற்குக் காரணமான துன்பங்கள் நீங்கவேண்டி நோன்பிருக்கத் தொடங்கினாள்.
View More பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30
ஒருவன் கழுதை ஒன்றையும், கணிகை ஒருத்தியையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கிறான். சிலநாள் சென்று அவன் கழுதையை மட்டும் பார்க்கும்போது அங்கே கணிகையும் வந்திருப்பாள் என்ற அனுமானத்திற்கு வரமுடியுமா? முடியாது. ஏனென்றால் நெருப்பு இல்லாத இடத்தில் புகையில்லை என்று மேற்கோள் காட்ட்டப்படும் அந்த எதிர்மறை உடன்நிகழ்ச்சியாகிய வெதிரேகம் (வியதிரேகம்) பொருளின் இருப்பைச் சாதிக்கும் என்றால் நாய்வால் இல்லாத கழுதையின் பிடரி மயிரைக் கண்டவன் அது நாய்வாலோ அல்லது நரி வாலோ என்று மயங்குகிறான். அங்கு இரண்டுமே இல்லை என்று தெளிகிறான். அவனே வேறொரு இடத்தில் வால் ஒன்றைக் கண்டு இது நாய்வால் இல்லை என்று துணிந்தால் நரிவாலும் இல்லை என்று துணியலாமா? கூடாது.
View More தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை
தன்முன் நிற்பது பதின்பருவத்தில் பருவவேறுபாட்டில் ஆண்களின் கோரப் பார்வைக்குத் தப்பி ஓடியொளிந்த ஒரு சாதாரணப் பெண்ணாக விளங்கிய அந்த மணிமேகலையல்லள், இவள் புதியவள், புத்த நெறியில் தன்னைக் கரைத்துக்கொண்டவள், அனைவரும் கைகூப்பித் தொழும் பெண்தெய்வமாக விளங்குபவள்,அவள் மீது கவிந்திருந்த கணிகையின் மகள் என்ற நிழல் முற்றிலும் விலகி புத்தஞாயிறின் கிரணங்கள் பூரணமாகப் பொலியத் தொடங்கிவிட்டது. இனி அவள் என் மகள் இல்லை. நான்தான் மணிமேகலையின் தாய்!
View More மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதைமணிமேகலை 28 — சமயக்கணக்கர் திறம் கேட்ட காதை
ஒரு பொருளின் உண்மைத் தன்மையை அறிய மொத்தம் பத்து அளவைகள் நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டுள்ளன. அந்த அளவைகள் காட்சி (தர்சனம்), கருதல் (அனுமானம்), உவமம், ஆகமம், அருத்தாபத்தி, இயல்பு, ஐதிகம், அபாவம், மீட்சியால் உணரும் ஒழிவறிவு, மற்றும் தோன்றி உளதாகும் சம்பவம் என்ற பத்துமே அந்த அளவைகளாகும்.
View More மணிமேகலை 28 — சமயக்கணக்கர் திறம் கேட்ட காதைவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27
“மணிமேகலா! இது தொன்மையான ஊர். பல்வேறு சமய அறிஞர்கள் நிறைய இருப்பார்கள். உன்னை வாதத்திற்கு அழைப்பார்கள். அவர்கள் கூறுவதைச் செவிமடுத்துக் கேட்டுக்கொள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, நீ சார்ந்த புத்த சமய வாதங்களில் உள்ள மெய்ப்பொருளை நிறுவி, அவர்கள் சொன்ன எவற்றிலும் மெய்ப்பொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்து. உனக்கு வெற்றி உண்டாகட்டும்.”
View More வஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை — மணிமேகலை 26
அவளேதான் ஒருமுறை புகார் நகரம் வந்து, உங்கள் சோழமன்னன் நெடுங்கிள்ளியின் மையலுக்கு ஆட்பட்டு அவனுடன் சேர்ந்து ஒரு ஆண் மகவை ஈன்றாள். பிறகு அந்தப் பச்சிளம் குழந்தையுடன் நாகநாடு திரும்பினாள். குழந்தையுடன் வந்தவள், தினமும் கடல் கரையில் கப்பல் ஏதாவது வருகிறதா என்று காத்திருப்பாள்.
View More ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை — மணிமேகலை 26ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25
இந்த உடம்பின்கண் தோன்றும் பொய், களவு, காமம் என்ற மூன்றும் தீவினையாகும். நமது வாய்மொழியில் தோன்றுவது நான்கு. அவை பொய், குறளை எனப்படும் நிந்தனைச் சொற்கள், கடுஞ்சொல் மற்றும் பயனற்ற சொற்கள் என்பவையாகும். மனதில் தோன்றும் மூன்று ஆசை, கோபம், மயங்குதல் என்பவையாகும். மேற்சொன்ன பத்தும் தீயவழிகளாகும். நன்கு கற்றறிந்தோர் இந்தப் பத்தின் வழி செல்லமாட்டார்கள். அப்படிச் சென்றார்களாயின் விலங்குநிலை, பேய்நிலை அல்லது நரகநிலை அடைந்து மனத்தளவில் துன்பங்களை அனுபவிப்பார்கள்.. நல்வினை எதுவென்று கேட்டால் மேற்கூறிய பத்து வினைச் செயல்களையும் தவிர்த்து, நல்லொழுக்கத்தின்கண் நின்று, தானங்கள் செய்து, மனிதர், தேவர் மற்றும் பிரம்ம நிலைகளை எய்தி இன்புற்று இருத்தலாகும்…
View More ஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25சிறைவிடு காதை – மணிமேகலை 24
என்னுடைய அந்தபுரத்தில் மணிமேகலை என்ற பெண் ஒருத்தி இருக்கிறாள். உன்னை ஒருவருக்கும் தெரியாமல் அவள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லச் சொல்கிறேன். நீ அங்குள்ள அந்தப்புர மகளிரின் கண்களில் பட்டுக்கொண்டிருப்பதுதான் உன் வேலை. பிறகு நல்ல சமயம் பார்த்து, ‘மணிமேகலை கண்சாடை காட்டித் தன்னுடைய இளம் முலைகள் இரண்டையும் உன்னுடைய அழகிய மார்பில் பொருந்தும்படி என்னுடன் கூடினாள்’ என்று மற்றவர்களிடம் கூறவேண்டும். இதற்கு வெகுமதி ஒரு கிழி நிறை பொன் கழஞ்சு. இது அரச கட்டளை. செய்ய மறுத்தால் தண்டிக்கப்படுவாய்.
View More சிறைவிடு காதை – மணிமேகலை 24சிறை செய்த காதை — மணிமேகலை 23
விலக்கப்படவேண்டியவை ஐந்து என்று உலகில் உண்மைப் பொருளை நோக்கி ஆய்வுசெய்து உணர்ந்த ஆன்றோர்கள் கூறுகின்றனர். கள், பொய், களவு, கொலை மற்றும் காமமாகும். இவற்றுள் காமம் மற்ற நான்கையும் தனக்குள் கொண்டதாகும். காமத்தை நீக்கியவர்கள் மற்ற குற்றங்களை நீக்கியவர்களாவர். காமத்தை ஒழித்தவர்களே நிறைந்த தவமுடையவர்கள். காமத்தை நீக்காதவர்கள் பொறுக்கவியலாத துயரை அடைவார்கள்.
View More சிறை செய்த காதை — மணிமேகலை 23