கோவை புத்தகக் கண்காட்சி 2010

இப்படிப் பல விஷயங்களில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலும், பபாஸி கோட்டை விட்டது விளம்பர விஷயத்தில். கோவை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, புத்தகக் கண்காட்சி நடக்கும் கொடீசியா அரங்கம் கிட்டத்தட்ட 12 கிமீ தொலைவில் உள்ளது. நான் பேருந்தில் சென்று வந்தேன். நான்கு முறை சென்று வந்தபோதும், ஒரு தடவைகூட புத்தகக் கண்காட்சி பற்றிய ஓர் அறிவிப்பைக் கூடப் பார்க்கவில்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குதிரையிலேயே சவாரி செய்துவிடலாம் என நினைத்திருப்பார்கள் போல. நான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு அரங்குக்குள் செல்லவில்லை. நான் கேள்விப்பட்டவரை, அங்கேயும் புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்பு எங்கேயும் இல்லை. இதனால் நிறையப் பேருக்குப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றதே தெரியாமல் போய்விட்டது… கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அதன் கோவை வாசகர்களுக்குத் தனியே கடிதம் அனுப்பியிருந்தோம்…

View More கோவை புத்தகக் கண்காட்சி 2010

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது. மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

அள்ளக் குறையாத அமுதம் – 3

மனிதன் அறிந்த மிகப்பெரிய இன்பம் எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் மேற்கண்ட கேள்விக்கும் பதில் தெரியும். ஒருவன் துறவியாகவோ, ஞானியாகவோ, ஓரினச் சேர்க்கையாளனாகவோ இல்லாத பட்சத்தில் மனிதன் தன் புலன்களால் அறியும் மிகப்பெரும் இன்பம் பெண்ணுடனே சேருகிற இன்பம்தான். சரியா?

View More அள்ளக் குறையாத அமுதம் – 3

அள்ளக் குறையாத அமுதம் – 1

மழைக்காலத்தில் ஒருநாள் இரவு வெகு நேரம் கழித்து நெடுந்தூரம் நடந்து களைத்த வழிப்போக்கர்கள் வந்தனர். அவர்கள் ஆபுத்திரனிடம் “எங்களுக்குப் பசியாக இருக்கிறது. உணவு கிடைக்குமா?” என்று கேட்டனர். மற்றவர்களின் பசியைப் பார்க்கப் பொறுக்காத ஆபுத்திரனுக்கு மிகவும் துக்கமாகப் போய்விட்டது. அவனுடைய பிட்சைப் பாத்திரம் அலம்பிக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. என்ன செய்வது?

View More அள்ளக் குறையாத அமுதம் – 1