கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட கந்தபுராணத்தை இலங்கை சைவ தமிழர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்துவரும் மரபு உண்டு. ஆனால் நவீன வாழ்வியல் இப்புராண படன மரபை பெரிதும் சிதைத்து விட்டது. இப்பொழுதெல்லாம் புராண படனம் சடங்காகவே சில இடங்களில் நடைபெறுகிறது. இம்மரபை மீளெழுச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்… எனவே, பொருத்தமான 700 பாடல்களை கதை ஓட்டத்திற்கேற்ப தொகுத்து, சப்தசதி என்ற எண்ணிக்கை அடிப்படையில் தேவி மகாத்மிய வடிவிலேயே, இதனை உருவாக்கலாம் என கருதினேன். கந்த மான்மியம் என்று தமிழ் மரபுகேற்ப அதற்கு பெயரிடலாம் என்றும் கருதினேன்…

View More கந்த மான்மியம்: 700 பாடல்களில் கந்தபுராணம் முழுமையும்

கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு

முருகனின் விரத நாட்களில் கந்தபுராணம் முழுவதும் 10,500க்கும் மேல் உள்ள பாடல்களை பாராயணம் செய்துவந்தனர் நமது முன்னோர்கள். இன்றைய நிலையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் உள்ள பாடல்களை பாராயணம் செய்வது அரிதாக உள்ளது. எனவே கந்தபுராண பாராயணத்தை மீள் எழுச்சி செய்யும் நோக்கில் அனைவரும் பாராயணம் செய்வதற்கு வசதியாக 351 பாடல்களாக சுருக்கி, கலிதோஷம் போக்கும்கந்தபுராணம் என்ற இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது…

View More கலிதோஷம் போக்கும் கந்தபுராணம்: நூல் வெளியீடு

கந்தரலங்காரம்: ஒரு தியானம்

வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை…

View More கந்தரலங்காரம்: ஒரு தியானம்

கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு

எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது… நேர்மறையானதொரு எதிர்வினையாக பாரதி தமிழ்ச் சங்கம் ஜூலை 19 மாலை 6:00 மணிக்கு இணையம் வாயிலாக நடத்திய நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்தனர்…

View More கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு

கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு

பல அச்சுப் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் காணப்படும் கந்தர் சஷ்டி கவசம் நூற்பிரதியில் பல்வேறு பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதைக் கண்ணுற்ற கவிப்பெருஞ்சுடர் ஹரி கிருஷ்ணன் அவர்கள், “கண்ணுக்குத் தெரிந்த பிழைகளைக் களைந்து கூடுமானாவரை பிழையற்ற பதிப்பாக ஒன்றை இணையத்துக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று ஃபேஸ்புக் மூலம் முன்னெடுத்து, சைவ அறிஞர் ஜாவா குமார் மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் இந்தத் திருந்திய வடிவத்தை வழங்கியிருக்கிறார். இதனை நமது வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்…

View More கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு