மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

அருணகிரிநாதரைப் போல மற்றொரு மேதமையை வேறெங்கும் காணமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வேறெந்த மொழியில் பிறந்திருந்தாலும் கொண்டாடியிருப்பார்கள். தமிழ் மக்களோ அவரை பத்தோடு பதினொன்று என்பது போல பார்க்கிறார்கள்… வாழ்க்கையின் ஒருவித உள்ளீடற்ற தன்மையை சொல்லி இப்படி பிறந்து வாழ்ந்து முதுமையடைந்து நோயுற்று மரணமடையப் போகிற நான் அந்த முடிவுக்கு முன் உன் கிருபையை பெறுவேனா என கேட்கிறார். அடுத்த பகுதியை பாருங்கள்..

View More மனதிற்கு வலிமை தந்த ஒரு திருப்புகழ்

வாரியாரின் திருப்புகழ் குரு

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் அறிவு அவரது திருப்புகழமிர்தம் என்கிற பத்திரிகை மூலமும், பல தொகுதிகளாக இருக்கும் திருப்புகள் விரிவுரை நூல்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அத்தனை திராவிடப்பதர்களும் தெய்வத் தமிழுக்கு செய்த தீமையை அனலில் இட்ட பஞ்சாக அழிக்கும் வலிமை சுவாமிகளின் திருப்புகழ் விரிவுரைக்கு உண்டு.இப்படிப்பட்ட மகானின் திருப்புகழ் குரு மதுரை பிரம்மஸ்ரீ திருப்புகழ் சுவாமி ஐயர்…

View More வாரியாரின் திருப்புகழ் குரு

கந்தரலங்காரம்: ஒரு தியானம்

வள்ளிமணாளன் எனக்கு ஒன்று உபதேசித்தான். யார்? தேனென்றும் பாகென்றும் உவமிக்கொணா மொழியுடைய தெய்வவள்ளியின் கோன். ஆனால் அவர் உபதேசித்ததை எப்படிச் சொல்வது? என்னவென்று சொல்லிப் புரியவைப்பது? வான் என்று சொல்லலாமா? இல்லை. காற்று என்று சொல்லலாமா? இல்லை. தீ, நீர் மற்றும் மண் என்றெல்லாம் சொல்ல முடியாது. சரி. தான் மற்றும் நான் என்று சொல்லித் தெரிவிக்க முடியுமா? ம்..ம் இல்லை…

View More கந்தரலங்காரம்: ஒரு தியானம்

செவ்வேள்: மூன்று தரிசனங்கள்

கவி அனுராகம் என்ற அழகிய சொல்லால் காதலை, அன்பைக் குறிக்கிறார். காதலின் நிறம் சிவப்பு என்பது கவிமரபு. எனவே, வள்ளியுடன் கூடி மகிழும் அருளையும், பக்தர்களின் மீது பொங்கும் கருணையின் அருளையும் இணைத்து அழகுறக் கூறினார்… செவ்வான் என்பது அந்திவானம். இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட பொழுதான சந்தியா எனப்படும் அந்தி நேரம், வேதமரபில் லயத்தின், ஞானத்தின், உள்ளுணர்வின் குறியீடாக அறியப்படுகிறது… போர்க்களம் செந்நிறமாகுமாறு அசுரர்களைக் கொன்று அழித்து, இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினையும், சிவந்த தந்தங்களையுடைய யானையையும், கழன்று விழும் தோள்வளையும் உடையவன் சேயோன் முருகன். அவனது இக்குன்றத்தில், இரத்த நிறத்தில் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப் பூத்திருக்கின்றன…

View More செவ்வேள்: மூன்று தரிசனங்கள்

முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்

இனியும் வாழ்வானென் ? என்ற வேகத்தில் தான் கோபுரமேறினார் நம் அருணகிரி வள்ளல். மடுவில் வீழ்ந்தாரை மேலேற்ற கைகொடுப்பது குமரன் தொழில். ஆனபடியாலே நம் ஸ்வாமியை கருணை கண்களால் நோக்கி, அருளும் கரங்களால் தாங்கி, முக்தியெனும் திருவடியால் தீண்டி என்றும் மீளா அடிமை கொண்டான்… முத்தமை” என்பவள் நம் ஸ்வாமியை ஈன்றளித்த மாதரசியின் பெயர் என்றும், அவள் பெயர் கொண்டே நம் ஸ்வாமி பாடினார் என்பதொரு நம்பிக்கை உண்டு. மேலும் இந்தப்பாடலில் மூன்று பேரின் வாசகங்கள் உள்ளதென்றொரு சூக்ஷும கருத்தும் உள்ளது… சூரனை எதிர்த்து ஸுப்ரஹ்மண்யன் செய்த யுத்தம், ஆணவத்தை எதிர்த்து, குருவருளால் கிடைத்த ஞான வாள் கொண்டு ஒவ்வொரு ஆன்மாவும் செய்ய வேண்டிய யுத்தம். அது மிகவும் கோரமானது. க்ரூரமானதும் கூட..சிவா விஷ்ணு ஸ்வரூபமான ஞானஸ்கந்தனின் கைவேல் நம்முள் தினமும் போர் தொடுக்கட்டும்…

View More முத்தைத்தரு.. : திருப்புகழ் விளக்கம்