ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் சுதர்ஷன்ஜி அவர்கள் வழிகாட்டுதலிலும், சங்கத்தின் மூத்த பிரசாரகர் இந்திரேஷ் குமார் அவர்களின் அயரா உழைப்பாலும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (முஸ்லிம் தேசிய பேரவை) என்ற அமைப்பு 2002ம் வருடம் உருவாகியது. கடந்த 12 ஆண்டுகளாக தேசபக்தியும் இந்தியப் பண்பாட்டு உணர்வும் கொண்ட முஸ்லிம் சமுதாய மக்களிடையே சிறப்புற செயல்பட்டு வளர்ந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பசுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த அமைப்பு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. கீழ்க்கண்ட கட்டுரையில் இந்த அமைப்பு கடந்து வந்த பாதையையும் அதன் செயல்பாட்டுத் திட்டங்களையும் விவரிக்கிறார் இந்திரேஷ் குமார்…
View More முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்Tag: முஸ்லிம் பெண்கள்
கன்னியின் கூண்டு – 3
இஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள்….. முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத கோபத்துடன் வாழ்கிறது அச்சமூகம்…. முஸ்லிம்கள் தங்களையும், தங்களின் பெண்களையும் அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து விடுதலையடைந்து வெளியே வரவேண்டுமென்றால், அவர்கள் தங்களின் சுய விமரிசனத்தையும், குரான் சொல்லும் சட்ட திட்டங்ககளையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். இந்தச் செயலைச் செய்வதற்கு இன்று மேற்குலகில் வாழும் 15 மில்லியன் முஸ்லிம்களே சரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், மேற்கத்திய நாட்டில் வசிக்கும் ஒரு முஸ்லிம் அவரது மதத்தின் உட்கட்டமைப்பைப் பற்றி ஆராய்ந்தால் அவருக்கு எந்த மேற்கத்திய நாடும் சிறைத் தண்டனையோ அல்லது இஸ்லாமிய நாடுகளைப் போல மரண தண்டனையோ வழங்கும் என்றும் அஞ்சவேண்டியதில்லை….
View More கன்னியின் கூண்டு – 3கன்னியின் கூண்டு – 2
இஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் காரணமாக அப் பெண்கள் எப்போதும் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள்… தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்… இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து வெட்டி எடுத்து விட்டு று நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை. இந்த முறை ஏறக்குறைய முப்பது இஸ்லாமிய நாடுகளில், எகிப்து, சோமாலியா, சூடான் உட்பட்ட, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது…கருத்தடையும், கருக்கலைப்பும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு நடத்துவதும், கணவன் அறியாமல் கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் அன்றாடம் நடக்கிறது….
View More கன்னியின் கூண்டு – 2கன்னியின் கூண்டு – 1
அயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர் எழுதிய ”கன்னியின் கூண்டு” என்ற நூல் இஸ்லாமியப் பெண்களீன் நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது…. எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம்…. ஆண்களை பொறுப்பற்றவனாகவும், எதிர்பாராத நடவடிக்கைகள் கொண்டவனாகவும், அச்ச மூட்டும் பேயைப் போன்றவனாகவும், தெருவில் நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் சுய கட்டுப்பாட்டை இழந்து நடப்பவர்களாகவும் சித்தரிக்கிறது….
View More கன்னியின் கூண்டு – 1