கன்னியின் கூண்டு – 2

இஸ்லாமியப் பெண்களின் நிலை குறித்து அயான் ஹிர்ஸி அலி எழுதிய The Caged Virgin புத்தகத்திலிருந்து எடுத்தெழுதப்பட்ட கட்டுரையின் இரண்டாம் பகுதி.

மூலம்: அயான் ஹிர்ஸி அலி
தமிழில்: அ. ரூபன்

<<  முந்தைய பகுதி

தொடர்ச்சி…

எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம். ஆக இஸ்லாமில் பிரச்சினைகள் பெண்ணுக்கேயன்றி ஆணுக்கு அல்லவே அல்ல.

மிக இளவயதிலிருந்தே இஸ்லாமியப் பெண்கள் சந்தேகத்துடனேயே நடத்தப்படுகிறார்கள். தங்கள் குடும்பத்திற்கும், சுற்றத்திற்கும் நம்பிக்கையற்றவர்களாக வாழ்வது அவர்களுக்கு துன்பத்தையே வரவழைக்கும் என்று இளவயதிலேயே அப்பெண்கள் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

இதனை வலியுறுத்துவதற்காக, எனக்கும் அகமது என்பவருக்கும் நடந்த ஒரு சிறு உரையாடலை இங்கு தருகிறேன். அகமதிற்கு திருமணமாகி குழந்தைகள் உண்டு. தனது கடந்த காலத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றாமல், மது அருந்தியும், பல பெண்களுடன் தகாத உறவு கொண்டதுடன், இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்து கவலையேதும் இல்லாமல் வாழ்ந்த ஒரு மனிதன். சில வருடங்களுக்கு முன்பு மனம் திருந்தி, மீண்டும் இஸ்லாமில் இணைந்து, குரானைப்படித்து அதன்படியே வாழ்வதுடன் மட்டுமல்லாமல் அவரது மகளையும் இஸ்லாமிய முறைப்படியே வளர்த்தும் வருகிறவர்.

purdahநான் பார்க்கும் போது அவரது ஏழு வயது மகள் உடலை மூடும் ஹிஜாப் அணிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன் நான் அவரிடம் சொன்னேன், ‘ அகமது, எனக்கு இஸ்லாம் குறித்து நன்றாகத் தெரியும். ஒரு பெண் வயதுக்கு வரும்வரை ஹிஜாப் அணிய வேண்டியதில்லையே….” என்றேன்.

“ஆம்; அது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவள் சிறிய வயதிலிருந்தே அதனை அணியப் பழகினால் எதிர்காலத்தில் அது இயற்கையாகத் தெரியும்” என்று சொன்ன அகமது, தொடர்ந்து “இங்கு கோடைகாலத்தில் நெதர்லாந்துப் பெண்கள் உடலை மறைக்கும் உடைகளை அணிவதில்லை. அதனால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன….” என்றார்.

அகமது அப்படி நிகழ்ந்த விபத்துகள் பலவற்றையும் பார்த்திருக்கிறார். ஒரு நாள் சாலையில் ஒரு டிரக் எதிரில் வந்த டிரக்குடன் மோதிவிட்டது. அதில் ஒரு டிரக் டிரைவர் சாலையைப் பார்த்து ஓட்டாமல், வெளியில் சென்ற ஒரு கவுன் அணிந்த பெண்ணின் கால்களைப் பார்த்து ஓட்டியதால்தான் அந்த விபத்து ஏற்பட்டது என்று சத்தியம் செய்தார் அகமது. இனிமேலும் இப்படியான விபத்துகள் நடக்காமலிருக்க வேண்டுமானால் நெதர்லாந்துப் பெண்கள் உடலை மூடும் ஆடையை அணிய வேண்டும் என்பது அகமதின் வாதம்.

இஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக இஸ்லாமியப் பெண்கள் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள். ஆண்களின் கண்களில் படாமல் அசாதாரண வாழ்க்கை வாழவே முடியாத காரியம் என்பதால், தாங்கள் ஏதோ தவறாகச் செய்து கொண்டிருப்பதான எண்ணம் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வெளியில் எங்கு செல்வது, என்ன செய்வது போன்ற முடிவைக் கூட எடுக்கக்கூட சுதந்திரமற்றவளான இஸ்லாமியப் பெண் நாளடைவில் அவளது உள் மனச் சுதந்திரத்தையும் இழந்து தவிக்கிறாள். அவளது வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் பிறரால் தீர்மானம் செய்யப்படுவது பரிதாபமே.

என்னுடைய அத்தை ஒரு நாள் ஒரு இறைச்சித் துண்டை வீட்டுக்கு வெளியே எறிந்தாள். சிறிது நேரத்தில் அதன்மீது வகை தொகையற்ற ஈக்களும், எறும்புகளும் மொய்க்க ஆரம்பித்தன. உடனே அத்தை சொன்னாள், ” ஆண்கள் இந்த ஈ, எறும்புகளைப் போன்றவர்கள். ஒரு பெண்ணைக் கண்டதும் அவர்களால் தங்களின் காம உணர்வைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது” என்று.

********

இஸ்லாமிய சமுதாயங்களில் பெண்களின் கன்னித்தன்மையைப் பாதுகாக்க பலவித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சொன்னேன். ஒரு பெண் வயதிற்கு வருமுன் அவளை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைப்பது அதிலொன்று. தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்.

இதனை ஆதரிக்கும் விதமாக குரான் பெண்களை நோக்கி, “வீட்டிற்குள்ளேயே அமைதியாக அடைந்திரு; எந்தவிதமான பகட்டுத்தனத்தையும் காட்டாமல்” என்பதுடன், வீட்டிற்கு வெளியே செல்லும் இஸ்லாமியப் பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிய ஆடையை அணிந்து, தங்களின் பார்வையை நிலத்தில் தாழ்த்தி அடக்கமுடன் நடக்கச் சொல்கிறது.

சாதாரண ஆடை அணிகலன்களையன்றி பகட்டான ஆடையணிகளை அணிந்து தங்களின் அழகினை வெளிக்காட்டாமலும், தங்களின் முகத்திரையை விலக்கி அவர்களின் அழகை அவர்களின் கணவனுக்கும், அவர்களது தகப்பன்களுக்கும், தகப்பன்களுக்கு தகப்பன்களுக்கும், அவர்களது மகன்களுக்கும், அவளது கணவனின் மற்ற மகன்களுக்கும், அவளது சகோதரர்களுக்கும் அல்லது அவர்களின் மகன்களுக்கும், பெண் உறவினர்களுக்கும், அவரது வலது கைக்குச் சொந்தமானவர்களுக்கும் (அடிமைகள்), உடல் தேவையற்ற ஆண் வேலைக்காரர்களுக்கும், உடலுறவு பற்றி அறியாத சிறுவர்களுக்கும் மட்டுமே ஒரு இஸ்லாமியப் பெண் தனது முகத்தைக் காட்டலாம் என்கிறது குரான்.

இஸ்லாமியப் பெண்ணின் கன்னித் தன்மையைக் காக்கும் இரண்டாவது முறை, உறவினரல்லாத ஆண், பெண்களை தனித்தனியே பிரித்து அவர்களை வெவ்வேறு வீடுகளில் தங்க வைப்பது. இதுவும் வீட்டுச் சிறைக்க்கு ஒப்பானதே. இந்த முறை சவூதி அரேபியாவில் அதிகம் பின்பற்றப்பட்டாலும், இரான், பாகிஸ்தான், சூடான், ஏமன் போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து பெண்ணின் கிளிட்டொரியஸ், உள் மற்றும் வெளி லாபியா மற்றும் பிறப்புறப்பின் உள் சுவர்களை சுரண்டியெடுத்துவிட்டு, பின்னர் அவளது கால்களை ஒட்டித் தைத்துவிடுவது. சிறு நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை.

இந்த முறை ஏறக்குறைய முப்பது இஸ்லாமிய நாடுகளில், எகிப்து, சோமாலியா, சூடான் உட்பட்ட, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கொடுமையான முறை பற்றி குரானில் சொல்லப்படாவிட்டாலும், தங்களின் பெண்கள் வீட்டுச் சுவருக்கு வெளியே சென்று தங்களின் குடும்பத்திற்கு அவமான ஏற்படுத்துவதை தவிர்க்கிறது என்ற காரணத்தினாலேயே பரவலாக நடைமுறையில் இருக்கிறது. ஒரு பழங்குடி முறையாக ஆரம்பித்த இந்தச் செயல் இன்று ஒரு மதச் சடங்காகவே மாறியிருக்கிறது.

முகம்மது நபியின் காலத்திலேயே இந்த முறை இருந்ததைச் சுட்டிக்காட்டும் இஸ்லாமிய கல்வியாளர்கள், முகம்மது நபி அதனைத் தடை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். இப்படியாக விவாறு “தைக்கப்படுதல்” ஒரு பெண் தன்னுடைய கற்பை ஒருபோதும் இழக்க முடியாத சாத்தியத்தைத் தருகிறது.

 ******

ஒரு முஸ்லிம் பெண்ணின் மீதான அவ நம்பிக்கை அவளது திருமண நாளில், முதலிரவின் போது உச்சம் பெறுகிறது. மணமான இந்த முஸ்லிம் பெண் கன்னியா, இல்லையா? என்பது அனைவரின் மனதிலும் இழையோடும் ஒரு கேள்வி. ஆண்களும், பெண்களும் இரண்டறக் கலந்து வாழாத சமூகமாக இல்லாமல் இருப்பதால், ஒரு முஸ்லிம் ஆணுக்கு ஒரு பெண்ணினைக் குறித்தான இயற்கையான புரிதல் எதுவும் இருப்பதில்லை. எனவே தனக்குத் தேவையான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க அவன் அவனது குடும்பத்தினரையே சார்ந்து இருக்கிறான். அந்தப் பெண் ஒரு உண்மையான கன்னியா இல்லையா என்பதனை அவர்களே அவனுக்குக் கண்டுபிடித்து அறிவிக்கிறார்கள்.

இதன்படி, திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்தே அறிந்திராத ஒரு ஆணும் பெண்ணும் முதலிரவு அறையில் உடலுறவு கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திலாகிறார்கள். அந்தப் பெண் அச்சத்திலும், அருவருப்பிலும் அஞ்சி நடுங்கி ஒதுங்கினாலும் அவள் அவனுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதுபோலவே அந்த ஆணுக்கு விருப்பமில்லாவிட்டாலும், அவனது ஆண்மையை நிரூபிக்க அவன் அவளுடன் உடலுறவு கொண்டாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பைப் பார்ப்பதற்காக படுக்கையறைக்கு வெளியே காத்து நிற்ப்பார்கள். எனவே இந்தக் கட்டாய உடலுறவு ஒருவகையில் இஸ்லாமிய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வன் புணர்ச்சியேயன்றி வேறல்ல.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் புரிந்து கொள்வது என்பது சிறிய விஷயமில்லை. ஆனால் இஸ்லாமியத் திருமணம் அவ நம்பிக்கையில் துவங்கி, வன் புணர்ச்சியில் முடிகிறது. இதே அவ நம்பிக்கையும், வன் புணர்ச்சியும் அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டு தொடர்கதையாகிறது.

the_caged_virgin_coverவெளி நாடுகளில் வசிக்கும் பல இளம் இஸ்லாமியப் பெண்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்கிறார்கள். இருப்பினும் அவர்களது குடும்பத்தாரால் வலியுறுத்திச் சொல்லப்படும் “கன்னித் தன்மை” குறித்தான அச்ச உணர்வும் அவர்களைத் தொடர்கிறது. அவர்களுக்கு திருமணம் நடந்து முதலிரவில் வெவ்வேறு விதமான தந்திரோபாயங்களைக் கடைப்பிடித்து, தங்கள் பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அல்லது மருத்துவ முறைப்படி தங்கள் கன்னித்திரையை மீண்டும் தைத்துக் கொள்ளுகிறார்கள்.

திருமணத்திற்குப் பின் ஒரு முஸ்லிம் ஆணுக்கு அவனது மனைவியின் மீதான சந்தேகம் குறைவதற்குப் பதில் அதிகரிக்கிறது. அவள் கணவன் அவளுடனான திருமண நாளில் அவளின் கன்னித்திரையைக் கிழித்து, ரத்தம் வருவதைக் கண்டு அவளின் கன்னித்தன்மையை உறுதி செய்து கொள்கிறான். ஆனால் இதற்கு அப்புறம் அவள் வெளியார் யாருடனாவது உறவு கொண்டால் அதனை எப்படிக் கண்டுபிடிப்பது? எனவே அவன், அவனது மனைவி வேறொருவருடன் உறவு கொள்வதைத் தடுக்க ஒரே வழி அவளை வீட்டினுள் பூட்டி வைப்பதுதான். இனிமேல் அவள் அவனது அனுமதியில்லாமல் ஒரு அடி கூட வெளியில் எடுத்து வைக்க முடியாது. இது அல்லாவினால் அவனுக்கு அளிக்கப்பட்ட கட்டளை. அவ்ன் மனைவி அதற்கு அடங்கிப் போய்த்தான் தீரவேண்டும்.

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியப் பழமைவாதியான இமாம் அல்-கஸாலி, “ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணியாக அறியப்படுபவள் ஒருபோதும் தன் கணவனின் அனுமதியில்லாமல் வீட்டை விட்டுப் போகமாட்டாள். பழைய, படோடபமற்ற துணிகளையே அணிந்து கொள்வாள். உடலை மிக சுத்தமாக வைத்துக் கொண்டு, அவள் கணவன் அவளை எப்போது படுக்கைக்கு அழைத்தாலும் அதற்குத் தயாரகவே இருப்பாள்” என்று இஸ்லாமியப் பெண்களைப் பற்றிச் சொல்கிறார்.

அதாகப்பட்டது, ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணி கணவனுக்குக் கட்டுப்பட்டு அவனின் அடிமையைப் போலவே இருக்க வேண்டும். அல்லா அருளிய குரான் இன்னும் ஒரு படி மேலே போய், “ஆண்கள் பெண்களைப் பாதுகாத்து அவர்களைப் பராமறிப்பவர்கள். ஏனென்றால் அல்லா ஆண்களுக்கு பெண்களை விடவும் வேறொரு “வலிமையை” வழங்கி அவர்களுக்குத் துணையாக இருக்கச் செய்திருக்கிறான். எனவே ஒரு நல்ல முஸ்லிம் பெண்ணானவள் அவளது கணவன் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அல்லா எதனைக் காப்பாற்றி வைக்கச் சொல்கிறானோ அதனைக் காப்பாற்றிப் பாதுகாக்கும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவனானவன், தனது நம்பிக்கைக்கு விரோதமாக நடக்கும் பெண்ணை தன்னிடமிருந்து முதலில் விலக்கி வைக்க வேண்டும்; பின்னர் அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளாமல், அவளை மெதுவாக அடிக்க வேண்டும்…..” என்கிறது.

சுன்னி முஸ்லிம்களால் இறைதூதர் முகமது நபிக்கு இணையாக மதிக்கப்படுகிற கலிஃபா உமர் அல்-கத்தாப் இட்ட ஒரு கட்டளையின்படி, ஒரு பெண் பொய் சொன்னதாக நான்கு சாட்சிகள் சொன்னால், அவளுக்கு முன்னூறு கசையடிகள் கொடுக்க வேண்டும். அந்தக் கட்டளை “பரிவுடன்” இந்தக் கசையடிகள் மூன்று நாட்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. கசையடிகளால் உண்டான புண் மேலும் பெரிதாகமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

அதே சமயம், முஸ்லிம் பெண்களும் மானுடர்களே. அவர்களும் அவ்வப்போது கதைகளை உருவாக்கி உலவவிடுவதில் சமர்த்தர்களே. உதாரணமாக, குரான் மாதவிடாய் உள்ள பெண்ணுடன் உறவு கொள்வதை மறுக்கிறது. ஒருவகையில் இது பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் ஏற்பாடாகவும் உரு மாறியிருக்கிறது.

கணவனுடன் உறவு கொள்ள விருப்பம் இல்லாத, பல குழந்தைகளைப் பெற்று நைந்து போன உடலில் இன்னொரு குழந்தையைச் சுமக்கும் வலிவு இல்லாத ஒரு பெண் தன் கணவனிடம் தான் மாதவிடாய் ஆகியிருப்பதாக கதை சொல்லுதல் சகஜம். ஏறக்குறைய மேற்கத்திய உலகப் பெண்ணின் “தலைவலிக்கு” ஒப்பானது இது எனலாம்.

கருத்தடையும், கருக்கலைப்பும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு நடத்துவதும், கணவன் அறியாமல் கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் அன்றாடம் நடக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் அவள் கணவன் இவளின் பொய்களைக் கண்டுபிடித்துவிட்டால். காலம் காலமாக அவனுக்குத் சொல்லித்தரப்பட்ட “பெண்கள் அனவரும் ஷைத்தான்கள்” என்கிற உண்மை நிரூபணமாகிறது.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

 

 

27 Replies to “கன்னியின் கூண்டு – 2”

 1. this is good question if you have even a drop of honesty just publish this critise otherwise your dishonesty will been questinable and teach your kids about this

 2. Now, where is our friend Mr Swanapriyan? His silence on Ayaan Hirsi Ali’s book on Islam and it’s barbaric practices is deafening. I am missing his Taqiyya.

 3. அருவருப்பாகவும் , பயமாகவும், பரிதாபமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. கடவுளே! இஸ்லாமியப் பெண்களை காப்பாற்றுவாயாக.

 4. பெண்கள் சுன்னத் செய்யச் சொல்லி குர்ஆனோ நபி மொழிகளோ கட்டளையிடவில்லை. அது ஆப்ரிக்க பழங்குடி மக்களின் பழக்கம். இஸ்லாத்தை ஏற்றும் தங்களின் வழக்கத்தை ஒரு சில நாடுகளில் கடைபிடிக்கின்றனர். இதற்கும் இஸ்லாத்துக்கும எந்த சம்பந்தமும் இல்லை.

  அடுத்து பெண்களின் உடல் முழுவதையும் மறைக்க குர்ஆன் கட்டளையிடவில்லை. முகம் கை தவிர மற்ற பகுதிகளை வெளியில் தெரியாமல் துணி கொண்டு மூடச் சொல்கிறது. வீட்டில் புர்காவை கழட்டி இருப்பதற்கு எந்த தடையும் இல்லை.

  மேலும் பெண்கள் வேலைக்கு செல்வதையோ, கல்வி கற்பதையோ குர்ஆன் எந்த இடத்திலும் தடுக்கவில்லை. முகமது நபி காலத்தில் போர்களத்துக்குக் கூட மருத்துவ பணி ஆற்ற பெண்கள் சென்றுள்ளதற்கான ஆதாரம் உள்ளது.

  //சுன்னி முஸ்லிம்களால் இறைதூதர் முகமது நபிக்கு இணையாக மதிக்கப்படுகிற கலிஃபா உமர் அல்-கத்தாப் இட்ட ஒரு கட்டளையின்படி, ஒரு பெண் பொய் சொன்னதாக நான்கு சாட்சிகள் சொன்னால், அவளுக்கு முன்னூறு கசையடிகள் கொடுக்க வேண்டும். அந்தக் கட்டளை “பரிவுடன்” இந்தக் கசையடிகள் மூன்று நாட்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. கசையடிகளால் உண்டான புண் மேலும் பெரிதாகமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.//

  இதற்கு வழக்கமாக எந்த ஒரு ஆதாரத்தையும் கட்டுரையாளர் சமர்ப்பிக்கவில்லை. என்னதான் கட்டுரையில் பொய்களை இட்டு நிரப்பினாலும் இஸ்லாம் அல்லாதவர்களும் இதில் உள்ள புரட்டுகளை நன்கே அறிவர்.

 5. சுவனப்பிரியனை போன்ற குருடர்கள் மட்டுமே அங்கு சமத்துவம் என்று பொய் சொல்கிறார்கள். மகனுக்கு கொடுக்கும் சொத்தில் பாதி தான் மகளுக்கு என்கிறாயே இதன் பேர்தான் சமத்துவமா யாரை ஏமாற்றுகிறாய் ? ஒரு ஆண் மகன் சொல்லும் சாட்சியத்தை மறுக்க இரண்டு பெண்கள் சேர்ந்து சாட்சியம் சொல்ல வேண்டும் என்கிறாயே இது தான் சமத்துவமா ? யாரை ஏமாற்றுகிறீர்கள் ? நீங்கள் குருடர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. மற்றவர்கள் குருடர்கள் அல்ல.சுயமாக சிந்திக்க முடியாதவர்கள் தான் பெண்ணடிமை மதங்களுக்கு வக்காலத்து வாங்குவார்கள். ஆபிரகாமிய பெண்ணடிமை மதங்கள் உலகில் விரைவில் ஒழிந்து போகும்.

 6. @suvanappiriyan
  “பெண்களின் உடல் முழுவதையும் மறைக்க குர்ஆன் கட்டளையிடவில்லை. முகம் கை தவிர மற்ற பகுதிகளை வெளியில் தெரியாமல் துணி கொண்டு மூடச் சொல்கிறது. வீட்டில் புர்காவை கழட்டி இருப்பதற்கு எந்த தடையும் இல்லை.”
  The question is WHY? Why should women cover the whole body except face and hands? Are Muslims animals that they cannot control their lust? Even animals have a fair degree of control over their lust.Are they worse than animals?
  Why should Islam allow men to marry four ( or is it five!) women? Why there is no equality in Islam? Please spare us Taqiyya and WITH DUE RESPECT stop preaching about Koran being misinterpreted and misunderstood. Only way to forward for Islam is to evolve and Muslims should first accept that teachings of Koran meant for half savage desert dwellers 1500 years back is hardly relevant in this modern age. In fact, it is downright dangerous.

 7. சூ பீ

  //
  அது ஆப்ரிக்க பழங்குடி மக்களின் பழக்கம்
  // 🙂

  இஸ்லாம் என்பதே ஒரு காட்டுமிராண்டி அரேபிய பழங்குடி மக்களின் பழக்கம் தானே. இதில் என்ன ஆப்ரிகர்களை பழங்குடிகள் என்று சொல்லி டான்சாடுவது.

  புர்காவ இருந்தா என்ன ஹிஸாப இருந்தா என்ன சார். என்ன பெரிய வித்யாசம் இருக்கு சொல்லுங்கள்.

  //
  வீட்டில் புர்காவை கழட்டி இருப்பதற்கு எந்த தடையும் இல்லை.
  //

  அப்படி இடுந்து தான் அன்பு தூதரின் அன்பு வளர்ப்பு மகனின் அன்பு மனைவி ஜைனப் நபிகளிடம் வசம்மா மாட்டிகிடாங்கோ. இத இட்டுக்கட்ட அல்லா ஒரு வசனத்தையே இறக்கினார். நபிகளின் வசதிக்காக மட்டுமே இஸ்லாத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது தடை செய்யப் பட்டுள்ளது.

  நபிகளுக்கு உள்ள நடுக்கம் பல முறை அல்லாவின் வாக்காக வந்துள்ளது

  33.30
  O Consorts of the Prophet! If any of you were guilty of evident unseemly conduct, the Punishment would be doubled to her, and that is easy for Allah.

  🙂 இதுக்கு ஏன்னா சூப் பீ அர்த்தம். அனைவரும் படிக்க வேண்டிய குர்ஆனில் எதற்கு ஒரு தூதரின் மனைவிகளுக்கு எச்சரிக்கை. அப்படி எச்சரிக்க விடுவதாகின் எல்லா பெண்களுக்கும் அல்லாவா விட வேண்டும்.

  33.30
  O Consorts of the Men! If any of you were guilty of evident unseemly conduct, the Punishment would be doubled to her, and that is easy for Allah.

  இது தான் எல்லா காலத்திருக்கும் பொருத்தமாக இருக்கும் வசனம்.

 8. இந்தியன்!

  //The question is WHY? Why should women cover the whole body except face and hands? Are Muslims that they cannot control their lust? Even animals have a fair degree of control over their lust.Are they worse than animals?//

  இதே புர்கா இல்லாமல் அரை குறை ஆடைகளுடன் தெருவில் திரிவதால்தான் இந்தியாவில் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றன. புர்கா அணிந்து சென்றால் அந்த பெண்ணின் மேல் நம்மையறியாமலேயே ஒரு மரியாதை வந்து விடும். பெண்களுக்கும் பாதுகாப்பு. டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி வன் புணர்வு , வினோதினி ஆசிட் வீச்சையெல்லாம் நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. இதற்கெல்லாம் மூல காரணம் ஆபாச உடைகளே!

  //Why should Islam allow men to marry four ( or is it five!) women? Why there is no equality in Islam?//

  உடல் ரீதியாகவும் மன சீதியாகவும் ஆணும் பெண்ணும் சமமல்ல என்பது மருத்துவ ஆய்வு வெளியிடும் முடிவாகும். எனவே ஆணும் பெண்ணும் சமம் என்பது நகைப்பிற்குரிய வாதம்.

  குழந்தை இன்மை, பெண்கள் அதிகரிப்பு, பெண்கள் உடலுறவில் ஈடுபடும் தன்மையை இழத்தல் போன்ற அத்தியாவசிய காரணங்கள் இருந்தாலே ஆண்களுக்கு வேறொரு திருமணம் செய்ய இஸ்லாம் கட்டளையிடுகிறது. அனுமதி இருந்தும் இந்தியாவில் 99 சதவீதமான இஸ்லாமியர்கள் ஒரு மனைவியுடனேயே வாழ்கிறார்கள். பலதார மணத்தால் சின்ன வீடு வைத்துக் கொள்ளும் பழக்கம் குறைகிறது. அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் சமூக அந்தஸ்து கிடைக்கிறது.

 9. வெள்ளை வாரணன்!

  //மகனுக்கு கொடுக்கும் சொத்தில் பாதி தான் மகளுக்கு என்கிறாயே இதன் பேர்தான் சமத்துவமா யாரை ஏமாற்றுகிறாய் ? ஒரு ஆண் மகன் சொல்லும் சாட்சியத்தை மறுக்க இரண்டு பெண்கள் சேர்ந்து சாட்சியம் சொல்ல வேண்டும் என்கிறாயே இது தான் சமத்துவமா ? யாரை ஏமாற்றுகிறீர்கள் ?//

  ரொம்பவும் டென்ஷனாயிட்டது மாதிரி இருக்கே…:-(

  கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.

  ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.
  பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

  சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.
  பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம்(அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்துவிட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்திவிடக்கூடியவள் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்குச் சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெறமாட்டாள் எனவும் கருதுகிறார்கள்.

  கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள். கிறுத்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார். இன்னும் புனித பூனபெஃன்தூரா என்பவன் கூறினான்: ”நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனி த இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்””
  மேலும் கடந்த(19ஆம்) நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேயே பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இதுபோன்றே பெண்களுக்கென எந்த தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. இன்னும் அவள் அணியும் ஆடை உட் பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதற்கும் உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடா தென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பா ராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.

  உலகம் முழுவதும் பெண்களின் நிலை இவ்வாறு இருக்கும் போது பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்து அந்த பெண்மையை மேன்மைப்படுத்தியது இஸ்லாம். ஆண்களுக்கு தாய் தந்தையரை பாதுகாப்பது, தங்கை, அக்கா, தம்பி போன்ற உடன் பிறந்தவர்களின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவு போன்றவற்றை ஏற்கும் பொறுப்பை ஆண் மகனே ஏற்றுக் கொள்வதால் அவனுக்கு சொத்தில் சற்று கூடுதலாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. பெண் திருமணம் முடித்து தனது கணவன் வீட்டுக்கு சென்று விட்டால் பிறகு எந்த உதவிகளையும் தனது பிறந்த வீட்டுக்கு செய்வதில்லை. உலகம் முழுக்க உள்ள நிலை இதுதான். எனவே தான் ஆண்களுக்கு சொத்தில் அதிக பங்கு கொடுக்க இஸ்லாம் கட்டளையிட்டது. அதுதான் நியாயமும் கூட…

 10. ஸ்ரீ அ.ரூபன்

  மிகத் தெளிவாக இஸ்லாமிய சமயத்தவரிடம் பெண்ணடக்குமுறைமைகளை விளக்கும் உங்களது தொடருக்கு எம் வாழ்த்துக்கள்.

  இதை வாசிக்கும் போது “Not without my daughter” என்ற ஆங்க்ல திரைப்படம் நினைவுக்கு வருகிறது.

  ஜெனாப் சுவனப்ரியன்,

  உலகத்தில் பயங்கரவாதங்களைக் கட்டவிழ்த்து விட்டு அப்பாவிகளைக் கொலை செய்யும் கொடுபாதகர்களை இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் என்று நீங்கள் சொன்னாலும் இப்படிப்பட்டவர்களை ஜெனாப் ஜாகிர்நாயக் தன் தக்கியா முறைப்படி பூசிமொழுகுவதை உலகம் அருவருப்புடன் பார்க்கிறது.

  மேவாட் ப்ரதேசத்தில் தேர்தல் பணிக்காக நான் சென்றிருந்த போது அப்பகுதியில் பதினெட்டு பத்தொன்பது வயது மதிக்க தக்க பெண்கள் (சிறுமிகள்)மூன்று குழந்தைகளைப் பெற்ற வத்தல் தொத்தல் பெண்களாக தோன்றியதைப் பார்த்து நான் நொந்ததுண்டு.

  நிற்க.

  அனைத்து மக்களையும் தன் புன்சிரிப்பாலும் பொதுஜன ஹிதமான பணிகளாலும் கவர்ந்திருந்த மானனீய ஸ்ரீ ரமேஷ்ஜி அவர்கள் ஜிஹாதி சக்திகளால் க்ரூரமாக படுகொலை செய்யப்பட்டு………. உடலில் 22 இடங்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்………இந்த தளத்தில் அது சம்பந்தமாக நாலைந்து வ்யாசங்கள் பதிவாகியிருந்த போதிலும்…………ஔபசாரிகமாகக்கூட தாங்கள் ஒரு வரி கூட வருத்தம் தெரிவிக்காதமை வருத்தமளிக்கிறது.

  கண்யம் குறையாது வினய பூர்வமாக கருத்துப்பகிரும் (நம்மிடையே கடும் அபிப்ராய பேதங்கள் இருப்பினும்) தாங்கள் இங்கு இது விஷயமாகக் கருத்துப்பகிர்வீர்கள் என நான் அபேக்ஷித்திருந்தேன். அது நிகழாமை எனக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. தங்களிடம் ஸ்நேஹ பூர்வமாக சம்பாஷிப்பவன் என்ற ரீதியில் / உரிமையில் இந்தக் கருத்தைப் பதிகிறேன்.

  ஏன்?….. ஸ்வ சமூஹ மக்கள் அப்படி ஒரு இரங்கல் கருத்தினைத் தாங்கள் பதிவு செய்தால் இடித்துறைப்பார்கள் என்று அச்சமா?

  அல்லது ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படின் அங்கு சிந்தப்படுவது ரத்தம் அல்ல என்பது போன்ற மதசார்பின்மை வாதம் தங்களுக்கு ஏற்புடையது என்று கருதலாமா?

  எப்படியிருப்பினும் இவ்விஷயத்தில் தங்களது காஷ்டமௌனம் அயற்சியையும் ஏமாற்றத்தையும் தந்தது என்றால் மிகையாகாது.

  வ்யாசம் சாராது வேற்றுக் கருத்தினைப் பகிர்வதற்கு ஸ்ரீ ரூபன் அவர்களிடம் எமது க்ஷமா யாசனங்கள்.

 11. திரு க்ருஷ்ணகுமார்!

  //இந்த தளத்தில் அது சம்பந்தமாக நாலைந்து வ்யாசங்கள் பதிவாகியிருந்த போதிலும்…………ஔபசாரிகமாகக்கூட தாங்கள் ஒரு வரி கூட வருத்தம் தெரிவிக்காதமை வருத்தமளிக்கிறது.//

  மனித உயிர் எல்லாமே ஒன்றுதான். அனைவரும் ஆதம் ஹவ்வாவிலிருந்து பல்கி பெருகியதாகத்தானே நான் நம்புகிறேன். அவரது மரணம் எனக்கும் மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால் அவர் இறந்ததற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கவில்லை. இந்த கொலையை யார் செய்திருந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  (Edited and published)

 12. வீரமணியும், கருணாநிதியும் படிக்கவேண்டிய கட்டுரை. அப்படியே ரப்பர் வாயன் திக்விஜயசிங்கிக்கும் ஒரு புத்தகம் இந்துக்கள் செலவில் வாங்கி அனுப்பலாம். வைகோ, திருமாவளவன், போன்ற மதச்சார்பின்மையின் ஒட்டுமொத்த குத்தகைக்காரர்களுக்கும் ஒவ்வொரு பிரதி அனுப்புவோம்.

 13. சூ பீ

  //உடல் ரீதியாகவும் மன சீதியாகவும் ஆணும் பெண்ணும் சமமல்ல என்பது மருத்துவ ஆய்வு வெளியிடும் முடிவாகும். எனவே ஆணும் பெண்ணும் சமம் என்பது நகைப்பிற்குரிய வாதம்.
  //

  ஆணும் பெண்ணும் சமம் என்றால் ரெண்டு பெரும் ஒரே உயரம், ஒரே எடை, ஒரே பலம் உடையவர்கள் என்றா அர்த்தம்.

  இருவருக்கும் சம வாய்ப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும். நமது பார்வையில் இவள பெண் தானே இவள என்ன வேன செய்யலாம் என்ற எண்ணம் இருக்ககூடாது. பெண்ணை ஆன் ஒரு அப்பொழுது ஒடித்த இளம் கொம்பை வைத்து அடிக்கலாம் ஆனால் பெண் அடிக்க கூடாது. ஆன் கூப்பிட்டா பொண்டாட்டி உடனே ஓடி வரணும். ஆனா பெண் கூப்பிட்ட ஆன் அப்படி செய்ய தேவை இல்லை. ஆன் ஒரே நேரத்தில் நாலு பொண்டாட்டி எவ்வளோ வேணா அடிமை பெண்களை வைத்துக் கொள்ளலாம். ஆனா பெண் அப்படி செய்ய முடியாது. ஆன் மட்டும் தான் நபியாகி நாளுக்கும் மேல பொண்டாட்டி வெச்சுக்கலாம், பெண் நபியாகி அதுமாதிரி செய்ய முடியாது.

  இது தான் சமத்துவ பேதம். எதோ எதுவுமே தெரியாது மாதிரி பேசுறீங்க.

 14. //
  இறந்ததற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கவில்லை//

  நபிகள் தான் உலகின் கடைசி தூதர் என்பதை என்ன ஆய்வுகள் செய்து ஏற்றுக் கொண்டீர்கள்.
  மோடி கலவரத்திற்கு காரணம் இல்லை என்று ஆய்வு சொன்னால் அதை ஏன் ஏற்கவில்லை.

  எவ்வளவு முரண் பாடுகள். வாய் இருப்பதே பொய் சொல்லத்தான் (காபிர்களிடம்).

 15. //
  உலகத்தில் பயங்கரவாதங்களைக் கட்டவிழ்த்து விட்டு அப்பாவிகளைக் கொலை செய்யும் கொடுபாதகர்களை இஸ்லாமியப் பெயர் தாங்கிகள்
  //

  ஐயோ ஐயோ மகா பாவம். ஒரு உண்மையான முச்லிஈமு உம்மாவை சேர்ந்தவனை இப்படி பெயர் தாங்கின்னு சொல்றது.

  பாம் வெக்கறவன் எல்லாம் நபி வழி நடக்கும் ஒரு உண்மையான முசுலீமு. குரானின் படியும், அடீடுக்களை படியும் ஒருவன் முஸ்லீமாக இருக்க வேண்டுமானால்

  அவன் காபீரை கண்ட இடத்தில் வெட்ட வேண்டும். அவனை எக்காரணம் கொண்டும் மன்னிக்க கூடாது
  பெண்ணை பெரம்பால் அடிக்க வேண்டும்
  ஒரு சின்ன பொண்ண கட்டிகிரனும்
  நாலு பொண்டாட்டி மட்டும் தான், அதிகம் வேணுமுன்ன அடிமைகளாய் சேத்துகிரலாம்
  நபி எத சொன்னாலும் நம்பனும்
  காபீருடன் (ஆம்பளைங்க) சகவாசம் கூடாது

  இதெல்லாம் ரொம்ப சாதாரணமான லிஸ்டு. ரொம்ப எழுதினா கட் பண்ணுவாங்கன்னு எட்ழுடல. மேலதிக விவரங்களுக்கு நீங்கள் ஹாடீத்துக்களையும் குரானையும் வாசித்துக் கொள்ளலாம். பீ ஜீவின் மொழிபெயர்ப்பு வேணுமுன்னா நம்ப சூ பீ அண்ணாகிட்ட சொன்னா ப்ரீயா அனுப்பி வைப்பார். இத நம்பி மெய்யாலுமே அட்ரஸ்ஸ கொடுத்தீங்கன்னா. குரானோட சேர்ந்து பாமும் வரும்.

 16. Mr Suvannappiriyan
  “இதே புர்கா இல்லாமல் அரை குறை ஆடைகளுடன் தெருவில் திரிவதால்தான் இந்தியாவில் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றன. புர்கா அணிந்து சென்றால் அந்த பெண்ணின் மேல் நம்மையறியாமலேயே ஒரு மரியாதை வந்து விடும். பெண்களுக்கும் பாதுகாப்பு. டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி வன் புணர்வு , வினோதினி ஆசிட் வீச்சையெல்லாம் நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. இதற்கெல்லாம் மூல காரணம் ஆபாச உடைகளே!”
  You cannot simply get away with unsubstantiated statements like this. For your information, the reason that there is less REPORTED cased of rape in Afghanistan and Saudi Arabia is due to moronic Sharia law and it’s insistence of four witnesses to prove rape. Even DNA evidence is unacceptable!
  Now, I am going to copy/paste here like you always do . Here is Sharia at it’s best!!!
  “The reason there is less reported rapes in Islamic countries, is that women who report being raped are punished by flogging, or stoning, with the logic being that if they were raped by a Muslim man, then they must have provoked it.
  This is why women in Islamic countries wear Burqas
  13 year old Muslim girl stoned to death for being raped: https://news.bbc.co.uk/2/hi/7708169.stm
  19 year old Saudi girl punished for being gang raped: https://articles.cnn.com/2007-11-17/world…
  16 year old girl punished by 101 lashings for being raped: https://focusuk.wordpress.com/2010/02/07/…
  Filipino woman raped in Saudi Arabia: https://www.care2.com/causes/womens-right…

 17. Mr Suvannappriiyan
  “உடல் ரீதியாகவும் மன சீதியாகவும் ஆணும் பெண்ணும் சமமல்ல என்பது மருத்துவ ஆய்வு வெளியிடும் முடிவாகும். எனவே ஆணும் பெண்ணும் சமம் என்பது நகைப்பிற்குரிய வாதம்”
  Again another unsubstantiated statement. Taqqiya passed casually as if proven. Being a medical practitioner of over 40 years, I have never heard of this rubbish. Of course men and women are different physically( great discovery by Muslims, I concede!!) and women may have some emotional turmoils at some stage in their lives, especially during their periods and at menopause. Having four or five wives as the prescribed treatment for this so called ” Lust crazed malady of men” is so Islamic and barbaric.Only Madarasa educated, Zakir Naik’s followers will accept such atrocious claims.

 18. This what I read elsewhere. Mr SP should read this and contemplate
  “A society of oppressed, angry, and blind followers is not the kind of society that can thrive. Blind followers worry more about survival than innovation, discovery, and research. Because Muslims are forbidden from doubt, analysis, and thinking for themselves, discussion among Muslims often deteriorates into insults and name-calling. The angry mind of the Arab Street values retaliation and self-pity more than finding ways to work hard for prosperity. The accumulation of centuries of intolerance to free thinking has resulted in a paralyzed brain and has killed normal initiative and innovation. Because Sharia allows no choices, people accept their destiny without trying to change it, giving in to fatalism. The expression “In Shaa Allah,” meaning “if Allah wills,” is the most commonly used expression by Muslims. Other commonly used expressions that reflect the societal fatalism: “Maktoub”— “everything is written,” and “Elquesma”—”this is my destiny or my share in life.” Society becomes fatalistic, static, stagnant, and rigid.

  Just look at the difference between India and Muslim Pakistan.
  While Muslim scholars are busy trying to prove to themselves and the world that all scientific discoveries and innovations were originally in the Qur’an, the Judeo-Christian cultures of the “kaf-fir” are busy doing the hard work for such scientific discoveries. Only on Arab TV can you find an actual Arab researcher defying scientific axioms by saying such outrageous things as “the earth is flat and much larger than the sun (which is also flat).” That debate actually took place in October 2007 on Al-Fayhaa Arab TV. Fadhel Al-Sa’d, an Iraqi researcher on astronomy, said, “The Qur’anic verse that I have just recited—The breadth of Paradise is as the breadth of the heavens and earth’—attests to the fact that the earth is flat.” For him, there was no further discussion since that is what the Qur’an says.

  Can anyone even imagine a Madame Curie, a Thomas Edison, the Wright Brothers, or a Sigmund Freud working their experiments in Saudi Arabia, Iran, or even less-oppressive Egypt? Working to find solutions to society’s problems cannot happen in a tightly controlled intellectual climate that prohibits questioning. That is why the Egyptian peasant’s life has not changed drastically since the time of the pharaohs. Islam has sedated them. The thought processes of a Muslim must come to a halt at every step to first check whether or not such thinking is allowed under Sharia.

  There is only one direction that a Muslim’s thought process is allowed to venture: I am right, and you are wrong; I am superior, and you are inferior; Islam and the Arab culture is the only way, and yours is evil and I must do everything I can to change you. You are sinners, and I am a Muslim—the only true religion—and through jihad I must change you; if I die without accomplishing my goal, other Muslims behind me will succeed, and I am guaranteed heaven. That is the only kind of thinking allowed.”

 19. //இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து பெண்ணின் கிளிட்டொரியஸ், உள் மற்றும் வெளி லாபியா மற்றும் பிறப்புறப்பின் உள் சுவர்களை சுரண்டியெடுத்துவிட்டு, பின்னர் அவளது கால்களை ஒட்டித் தைத்துவிடுவது. சிறு நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை.//

  ஹாஜி சுபி- பெண்கள் விருத்த சேதனம்அவர்கள் இது குரானிலோ, ஏன் ஹதீஸிலோ இல்லை என்பார்.
  குரானில் ஆண்கள் விருத்த சேதனம் கிடையாது, இது பைபிளிலிருந்து காப்பியடித்தவையே.
  அதே போல பூமீ தட்டையானது என்பதை பல அரேபியர்களும் குரான் சொல்கின்றனர்.

  பெண்கள் விருத்த சேதனம் எகிப்தில் முஸ்லீம் -கிறிஸ்துவர்கள் இடையே பரவலாக உள்ளது.
  https://news.bbc.co.uk/2/hi/programmes/newsnight/9696353.stm
  https://www.youtube.com/watch?v=1fUlsMafFjM
  தேவப்ரியா சாலமன்

 20. சூ பீ

  //
  இதே புர்கா இல்லாமல் அரை குறை ஆடைகளுடன் தெருவில் திரிவதால்தான் இந்தியாவில் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றன. புர்கா அணிந்து சென்றால் அந்த பெண்ணின் மேல் நம்மையறியாமலேயே ஒரு மரியாதை வந்து விடும். பெண்களுக்கும் பாதுகாப்பு. டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி வன் புணர்வு , வினோதினி ஆசிட் வீச்சையெல்லாம் நாம் அவ்வளவு சீக்கிரம்
  //

  நீங்கள் புனித நாடான சவுதியில தான இருக்கீங்க. சவுடியிளிடுந்து ஒரு படையே வார கடைசியில் எதற்கு பகரின் போகிறது என்று உங்களுக்கு தெரியாதா?

  சவுதியில் நடக்கும் குற்றங்களில் ஒரு சடவிகிடம் மட்டுமே பதிவு செய்யப் படுகிறது.

  ஒரு பெண் தான் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்டேன் என்று இன்ரூபிக்க நான்கு ஆண்களின் சாட்சி வேண்டுமே? இந்தியாவில் இவ்விஷயத்தில் சட்டம் வேலை செய்கிறதே

  இஸ்லாமியர்களுக்க பெண்களை பார்த்தல் மரியாதை வருகிறது?
  எல்லோரும் அன்னைக்கு சமானமானவர்கள் என்று எந்த பெண்ணை பார்த்தாலும் எண்ணம் வர வேண்டும் என்பது இந்த மண்ணின் நம்பிக்கை.

  புள்ளையின் மனைவியை பார்த்து சபலப்பட்டு அல்லவை கூட்டாளியா சேர்த்துக்கொண்டு அப்பெண்ணை அபகரிப்பது அம்மண்ணின் குணம். அங்கே பர்தா தேவை தான். இங்கே இல்லை.

  தென்னிந்தியாவில் அதிக அளவில் வன்கொடுமைகள் நடப்பதில்லையே? ஏன்? வடக்கே ஏன் அதிகம் ? இதை எல்லாம் அப்புறமா ரிசர்ச்சு பண்ணலாம்

 21. டாக்டர் அம்பேத்தகர் தனது “தாட்ஸ் ஆன் பாக்கிஸ்தான்” என்ற புத்தகத்தில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை பற்றி விரிவாக சொல்லியுள்ளார். இந்த புர்காவை அணிந்து கொண்டு தெருவில் செல்லும் பெண்களை பார்ப்பது ஒரு திரையிட்டு பதுங்கி ஒளிந்து செய்யும் காட்சியை பார்ப்பதுபோல் உள்ளது. இப்படி ஒரு தனிமைபட்ட தோற்றம் இஸ்லாமிய பெண்களின் உடல் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது.. அவர்களி்ல் பெரும்பாலானவர்கள் ரத்தசோகை, காச நோய், பயோரியா போன்ற நோய்களால் பீடிக்கபட்டுள்ளனர். அவர்களது தேக முதுகு தண்டு வளைந்து அதனால் மூட்டுக்கள், எலும்பு இணைப்பு பாகங்களில் தொடர்ந்து தீராவலியைக் கொடுக்கிறது. இதய படபடப்பு அவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இப்படிப்பட்ட காரணங்களால் பிறப்புருப்பு பலகினமாகி குழந்தை பேறுகாலங்களில் துர்மரணம் ஏற்படுகிறது. மொத்தத்தில் புர்கா அணியும் இஸ்லாமிய பெண்களின் மூளை வளர்சியும் மனபக்குவப்படுதலும் இல்லாமலும் பாதிப்புகளை ஏற்ப்படுத்துகிறது. மேலும் அவர்களிடம் குறுகிய மனப்பான்மை தோன்றி பரந்த எண்ணங்களுக்கு தடையாக உள்ளது. சமூகத்தில் அவர்களுக்கு சுமுகமான சூழ்நிலையை அளிக்காததால் அவர்களது பண்பாட்டு வளர்சி தடைபடுகிறது. படிப்பில் நாட்டம் கொள்ளாதவர்களாக வீட்டிலேயே நான்கு சுவர்களுக்கு அடைக்கப்பட்டு வளர்க்கப் படுகிறார்கள். அவர்களது பிற்போக்கான நாண உணர்வு அவர்களை வாழ்கையில் முன்னேறவிடாமல் தடுக்கிறது.

  புர்கா அணிவிப்பது என்பது இருபாலரிடமும் உள்ள உடல்உறவு எண்ணங்களின் தன்மையை புரிந்துகொள்ள உதவும் என்ற அடிபடையில் தோன்றியது ஆனால் அது இஸ்லாமிய பெண்களின் பண்பாட்டு வளர்சியை பெரிதும் பாதித்துவிட்டது. அவர்களது வெளி உலக தொடர்பு என்பது துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஆண்களுக்கு பெண்களின் நட்பு என்பது கிடையாது அவர்களுக்கு தோழமை குழந்தைகளும் கிழவர்களும்தான். இப்படி ஆண்களை பெண்களிடமிருந்து தனிமைபடுத்துவதால் அவர்களது பண்பாட்டு வளர்சியும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்தமாதிரியான சமூக அமைப்பு இயற்கையான ஆண் பெண்களிடையே உள்ள உறவுமுறையை பாதிக்கிறது என்பதை இங்கே ஒரு மனநல மருத்துவர்தான் சொல்லவேண்டும் என்பது கிடையாது. இதனால் செயற்கையான உடல்உறவு தாகம் அதிகமாகி பல வேண்டாத கெட்ட எண்ணங்கள் பழக்கங்கள் தொற்றிக்கொள்கின்றன.

  மேலும் இந்த புர்காவினால் ஹிந்துகளும் இஸ்லாமியர்களும் தனிமைபடுத்தப்பட்டு விலகியே இருக்கும் சூழலை பாரதத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பது ஒரு சாப கேடுதான். ஹிந்துக்கள் இஸ்லாமியருடன் சமூகபிணைப்பு என்பது இஸ்லாமிய ஆண்களுடன் மட்டும் ஹிந்து இருபாலாரும் இணகம் காண்பது என்பதை விரும்புவதில்லை. புர்கா அணிவது என்பது சில ஹிந்துகளிடமும் இருந்தது ஆனால் அதற்கு மத அங்கிகாரம் இஸ்லாமைபோல் கிடையாது.

  “These burkha-clad women walking on the streets are one of the most hideous sights one can witness in India. Such seclusion cannot but have its deteriorating effects upon the physical constitution of Muslim women. They are usually victims of anaemia, tuberculosis and pyorrhea. Their bodies are deformed with their backs bent etc. Ribs, bones and nearly all their bones ache. Heart palpation is very often present in them. The result of this pelvic deformity is untimely death at the time of delivery. Purdah deprives Muslim women of mental & moral nourishment.

  Further they become narrow and restricted in their outlook. Being deprived of a healthy social life, the process of moral degeneration sets in. They have no desire for knowledge, because they are taught not to be interested in nothing outside four walls of the house. It makes them helpless, timid & unfit to fight life.

  The origin of purdah lies of course in the deep-rooted suspicion of sexual appetite in both sexes and the purpose is to check them by segregating the sexes. But far from achieving that purpose, it has adversely affected the morals of Muslim women. They have limited contact with the outside world; the men have no company of females except children & aged. The isolation of the males from the females is sure to produce bad effects on the morals of men. It requires no psychoanalyst to say that a social system that cuts off all contact between the two sexes produces an unhealthy tendency towards sexual excesses & unnatural and other morbid ways & habits.

  Purdah is also responsible for social segregation of Hindus from Muslims, which is the bane of public life in India. The Hindus do not want to establish social contact because it means contact between a Muslim man with a Hindu lady and Hindu man. Surely Purdah is found amongst a section of the Hindus too but it lacks religious sanctity, as is the case with the Muslims.

 22. ” ஆண்களுக்கு தாய் தந்தையரை பாதுகாப்பது, தங்கை, அக்கா, தம்பி போன்ற உடன் பிறந்தவர்களின் படிப்பு, மருத்துவ செலவு, திருமண செலவு போன்றவற்றை ஏற்கும் பொறுப்பை ஆண் மகனே ஏற்றுக் கொள்வதால் அவனுக்கு சொத்தில் சற்று கூடுதலாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. பெண் திருமணம் முடித்து தனது கணவன் வீட்டுக்கு சென்று விட்டால் பிறகு எந்த உதவிகளையும் தனது பிறந்த வீட்டுக்கு செய்வதில்லை. உலகம் முழுக்க உள்ள நிலை இதுதான். எனவே தான் ஆண்களுக்கு சொத்தில் அதிக பங்கு கொடுக்க இஸ்லாம் கட்டளையிட்டது. அதுதான் நியாயமும் கூட… “-

  அன்புள்ள சுவனப்பிரியன் அவர்களே,

  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்போது , தேவையில்லாமல் உலகம் முழுவதும் பெண்களை கொடுமைப்படுத்திய பித்தலாட்டக்காரர்களின் பட்டியலை சொல்லி நீங்கள் தப்பித்து கொள்ள பார்க்கிறீர்கள். நீங்கள் அளித்துள்ள பதில் சமாளிப்பு தான். குர்ரானில் அருளியிருந்தால் எடுத்துக்காட்டவும்.

  எல்லா மதத்திலும் ஆண்கள் மட்டுமே தங்கள் தாய் தந்தையை பராமரிக்கிறார்கள் என்பது அந்த காலம். ஆண் குழந்தைகளே இல்லாத தாய் தந்தையர் பலரும் தங்கள் பெண்களால் தான் இன்று காப்பாற்றப்படுகிறார்கள். ஆண் குழந்தைகள் உள்ள குடும்பங்களில் கூட , பெற்றோர் கவனிக்கப்படாமையால் , பெண் குழந்தைகள் தங்கள் பெற்றோரை பாதுகாத்து வருகின்றனர். மேலும் பெண்களின் திருமண செலவை ஆண்கள் மட்டுமே ஏற்கின்றனர் என்பதும் முழு பொய். ஒரு சில குடும்பங்களில் மட்டுமே ஆண்கள் இந்த செலவுகளை ஏற்கின்றனர்.

  மசூதிகளுக்குள் சென்று வழிபட பெண்களுக்கு அனுமதி இல்லை. ஏன், அல்லாவுக்கு பெண்களை கண்டு கூட பயமா சுவனப்பிரியன் அவர்களே ?

  இன்றைய உலகில் இதுபோன்ற காட்டு மிராண்டி சட்டங்களை வைத்திருந்தால், உலகில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த காட்டுமிராண்டி மதவாதிகளை அழிக்கும் நாள் விரைவில் வருவது உறுதி.

 23. சகோ அத்விகா!

  //மசூதிகளுக்குள் சென்று வழிபட பெண்களுக்கு அனுமதி இல்லை. ஏன், அல்லாவுக்கு பெண்களை கண்டு கூட பயமா சுவனப்பிரியன் அவர்களே ?//

  1.உங்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கோரினால் அங்கு செல்லவிடாது அவர்களைத் தடுக்காதீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அவரது மகன் பிலால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயம் நாம் அவர்களைத் தடுப்போம் எனக் கூறினார், அதற்கு அவரைத் தாறுமாறாகத் திட்டிவிட்டு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூலம் செய்தியை அறிவிக்கின்றேன், நீ சத்தியம் செய்து தடுப்பேன் என்கின்றாயா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம். 667).

  2.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையை நேரகாலத்துடன் தொழுவார்கள். அதில் கலந்து கொள்ளும் முஃமினான பெண்கள் தங்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு திரும்பும் வேளை இருட்டின் கடுமையால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது போகும் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 825, முஸ்லிம் 1026, அபூதாவூத், நஸயி).

  3) நான் தொழுகையில் நின்று அதில் நீடிக்க நினைத்துக் கொண்டிருப்பேன், அப்போது சிறுபிள்ளையின் அழுகுரலை செவிமடுப்பேன். அதன் தாய் அதன் மீது படும் கஷ்டத்தை அஞ்சி அதை நான் சுருக்கமாக்கிக் கொள்வேன். என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்).
  4) ஆண்களில் தொழுகை வரிசையில் சிறந்தது முதலாவதும், பெண்களின் வரிசையில் சிறந்தது அதில் இறுதியானதுமாகும் என நபி (ஸர’) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத்).

  இந்த ஹதீதுகள் எல்லாம் பெண்கள் அந்த காலத்தில் மசூதிக்கு சென்று தொழுததைக் காட்டுகின்றன. தமிழகத்தில் சில மார்க்கம் தெரியதாவர்கள் பெண்களை தடுத்தனர். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. எனது தாயும், மனைவியும், தங்கையும் மசூதிக்கு சென்று தமிழகத்தில் தொழுகிறார்கள்.

 24. திரு சுவனப்பிரியன் அவர்களின் பதிலுக்கு நன்றிகள். உங்கள் குடும்ப மகளிர் மசூதிக்குள் சென்று வழிபடுவதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இதே நிலை உலகம் முழுவதும் வர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆண்களுக்கு சமமாக அனைத்து பெண்களுக்கும் இறைவழிபாட்டிலும், மத தலைமையிலும் பெண்களுக்கு சமநிலை வழங்குவது எல்லா மதங்களையும் உயர்த்தும்.

 25. i think all middle east and pakistan men came directly from heaven. they never rape anybody because burqa system is there. all house maids are treated very decently. there is absolutely no sexual assault on them. there is no disparity here. there is no cheating here. all expatriate workers are very happily living here. all agents are very honest.

 26. திரு கோபால்சாமி கருத்துகளுக்கு என் ஆதரவான ஆதாரங்கள் இதோ கீழே:
  ——————————————-NEWS and VIEWS ——————————————————–

  1. A court of Myanmar has jailed a muslim teenager for 7 years for the attempted rape of a Buddhist woman.(Source: The Indian Express dt 6-9-3013)

  (முஸ்லிம்களுக்கு கற்பழிப்பு என்றாலே முகம் சுழிப்பவர்கள் போல பேசுவார்கள் ஆனால் செய்வது அனைத்தும் அயோக்கியமற்ற காரியங்கள்தான்)

  2. Fifty one years old ( partly -blinded ) பாஸ்டர் sexually assaulted a 17 year old girl while she was working as a maid at his house at Omalur in Salem. (Source: The Hindu dt 5-9-2013)

  பாதிரியார்கள் தொழிலே செக்ஸ் சம்பந்தப்பட்டதுதான் ஆனால் அவர்களை பற்றி நமது மீடியாக்கள் செய்திகளை வெளியிடமாட்டார்கள்

  3. A UAE national married a 17 year old minor girl in kerala on June 2013 After spending 17 days in various Indian locations as a married couple fled to UAE. Before leaving he divorced the girl uttering the word “TALAQ” thrice over PHONE (Indian express dt 3-9-13)

  தலாக் என்பது எவ்வளவு மோசமானது என்பதை இப்போது அந்த 17 வயது பெண் புரிந்து கொண்டிருப்பார் ஒரு Lodge இல் அனுபவிப்பது போல 17 வயது பெண்ணை 17 நாட்கள் அனுபவித்து விட்டு முஸ்லிம் பறவை பறந்து விட்டது.

  4. Around 150 people including 107 police personnel deployed at velankanni for annual festival at the shrine Basilia have fallen sick after consuming PONGAL served by the CHURCH canteen as dinner. (Indian express 2-9-13)

  நமது கோவில்களில் ஏதாவது நடந்துவிட்டால் உலகமே கவிழ்ந்து விட்டதை போல வீரமணி தனது விடுதலை இதழில் செய்தி வெளியிடுவார் வேளாங்கண்ணி மாதாவின் பொங்கல் செய்தியை மட்டும் இருட்டடிப்பு செய்துவிடுவார். அவர் மிகவும் நல்ல மனிதர். வாழ்க ஆயிரம் ஆண்டு.

  5. ABOUT HONEST AGENTS:—- N. Panchavarnam’s (living in Trichy) sister VALLI managed to get a visa from agents NAZREER and SUHAIL. Valli went to Kuwait on May 24, 2012. She was then taken to Soudi Arabia to work as a house maid. Four months back, Valli contacted her elder sister Panchavarnam and told her that she was undergoing untold torture and the work was strenous which affected her health too.

  அரபு நாட்டில் அறம் மணக்குது அருள் மணக்குது என்று நினைத்து கொண்டிருப்பவர்களின் நினைப்பில் மண் விழ! Nazheer மற்றும் Suhail ஆகியோர் நெடுங்காலம் வாழ்ந்து இது போன்ற நல்ல காரியங்களை(?1) செய்ய வேண்டும்.

 27. கருத்து சுதந்திரம் உங்களை பேச வைக்கிறது. நினைவிருக்கட்டும்…. பால் என்றும் கள்ளாகாது!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *