இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை.
View More போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலைTag: யாழ்ப்பாணம்
மதமாற்றம் எனும் கானல் நீர்
மதமாற்றம் என்பது தாழ்த்தப் பட்டவர்களைப் பொறுத்தவரையில் வெறும் கானல் நீரே என்கிறார் பிரபல ஈழ இலக்கிய நாவலாசிரியர் கே.டானியல்… ‘பஞ்சமர்’ நாவலில் உயர்சாதிக் காரர்களான வேளாளர்களின் சாதித் திமிரும் அட்டூழியங்களும், ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’ நாவல்களில் வேளாளக் குடும்பங்களின் அழிவையும் சிதைவையும், காட்டிய டானியல் அவற்றினின்று மாறு பட்டு, ஒரு சீரான நடையில், அழகான வடிவமைப்பில் ‘கானல்’ நாவலைப் படைத்துள்ளார்… ”ஞான ஸ்நானங்களுக்குப் பின்னாலும் மார்க்கக் கல்யாணங்களுக்குப் பின்னாலும் தீட்சை நாமங்களுக்குப் பின்னாலும் எம்மவர்களின் நாமாவளிகள் மாறியதல்லாமல் நடைமுறையில் இன இழிவுப்பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை… “
View More மதமாற்றம் எனும் கானல் நீர்யாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்
.. யாழ்ப்பாணம் இந்து சமயம் சிறப்புற்றிருக்கும் பிற பிரதேசங்களை விடவும், இன்னும் இலங்கையின் பிற பகுதிகளை விடவும் சிறப்பான, தனித்துவமான பல பண்புகளை, நம்பிக்கைகளைக் கொண்டதாகவுள்ளது…ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களும் அவர் வழி வந்தவர்களும் எவருக்கும் விட்டுக் கொடுக்காத வீரசைவ செந்நெறியை இங்கே வளர்த்திருக்கிறார்கள்..
View More யாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்தமிழில் ரகுவம்சம்
யாழ்ப்பாணத்து அரசகேசரி என்பார் காளிதாசரின் இரகுவம்சத்தை தமிழில் செழுங்கவிகளாக.. பெருங்காப்பியமாகப் படைத்திருக்கிறார்.. இளமைக்காலத்தைத் தமிழ்நாட்டில் கழித்த அரசகேசரி, யாழ்ப்பாண அரச வம்சத்தைச் சேர்ந்தவராதலில் தமது வம்சத்திற்கும் தெய்வீகத் தொடர்பைக் கற்பிக்க இக்காவியம் மூலம் முயன்றிருக்கலாம்.. இந்நூலில் வெளிப்படும் கவித்துவச் சிறப்புக்கும் மேலாக வித்துவச்சிறப்பு விரவியிருக்கிறது.. அரசகேசரி ஒரு கவிஞனாக, மந்திரியாக, முடிக்குரிய இளவரசனின் பாதுகாவலனாக, பக்திமானாக, இன்னும் போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்களிடமிருந்து யாழ்ப்பாண அரசை காக்க முனையும் வீரனாக பல பரிணாமங்களைப் பெறுவது…
View More தமிழில் ரகுவம்சம்வேல் உண்டு, பயமேன்?
யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தை ‘கந்தபுராண கலாச்சாரம்’ என்று அழைப்பதும் வழக்கம்.. அவ்வளவுக்கு இவர்களின் வாழ்வு முருகனுடன் .. முருக வரலாறாகிய கந்தபுராணத்துடனும் இணைந்திருக்கிறது…. இன்றும் இதனை நாம் பார்த்து ஏங்கலாம்.. யாழ். மக்கள் தம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து எங்கு சென்று வாழ்ந்தாலும் அங்கெல்லாம் நம் அழகுக் கடவுளுக்கு கோயில் சமைத்துக் கும்பிட்டு வருகிறார்கள்.. நல்லூரில் கந்தன் கோயில் கொண்ட இடம் கத்தோலிக்க தேவாலயமானது.. சில ஆண்டு காலத்தில் போர்த்துக்கேயரை ஓட ஓட துரத்தி விட்டு ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றினர்.
View More வேல் உண்டு, பயமேன்?யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை
உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டிடக் குழு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறது.
View More யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கைஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்
இலங்கையில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது… இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்… கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும்… இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது..
View More இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?
கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை, பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்….கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள். புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர். எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்…
View More இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?