மேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்

அது போன்ற ஒரு கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை. 10 அடி கருங்கல் அடித்தளத்திற்கு மேலே சுமார் 20 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. அந்த அற்புததை தேடி அருகே ஓடினோம், மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கால் கூட வைக்க முடியவில்லை! இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை… வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். “சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி “. அடடா ராஜராஜனின் கல்வெட்டு! தஞ்சை கோயிலை எழுப்பிய ராஜ ராஜனின் 11 ஆம் ஆண்டில் இந்த கோயில் எழுப்பட்டிருக்க வேண்டும்! மேட்டு மருதூர் என்ற இந்த ஊர் அன்று “மாதான மருதூர்” என்று அழைக்கப்பட்டுள்ளது, இறைவன் பெயர் “ஆராவமிதீஸ்வர்”…

View More மேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்… வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்… கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்….அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம்….

View More இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

கோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்

ஜூலை-1 (ஞாயிறு)  அன்று ரீச் ஃபவுண்டேஷன் அமைப்பு,   கருத்தரங்கம் ஒன்றை கோவையில் நடத்துகிறது. …

View More கோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்

இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?

கோயில்கள் திறந்தன. இடிபாடுகளுக்கிடையில் கருவறை, களவுபோன கோயிற் சாமான்கள். ஆனாலும் தளரவில்லை, பாலஸ்தாபனம் செய்து திருப்பணி தொடங்கியுள்ளனர்….கிறித்தவ தேவாலயங்களை கிறித்தவ நாடுகள் வாரி வழங்கிக் கட்டுவிக்கின்றன.யாழ்ப்பாணத்தில் இடிந்த இசுலாமியப் பள்ளிவாசல்களை அரபு நாட்டு அரசுகள் துணை கொண்டு கட்டுகிறார்கள். புத்த கோயில்களைப் புதிது புதிதாகச் சிங்களப்படையினரே தமது செலவில் கட்டி வருகின்றனர். எமது கோயில்கள் கட்ட யாரிடம் போவோம்? நீங்களே சொல்லுங்கள்…

View More இலங்கை: அழியும் கோயில்களை மீட்க யாரிடம் போவோம்?