இஸ்லாமிய அடிப்படைவாதிகள் – அவர்கள் சன்னிகளோ, ஷியாக்களோ, அகமதியாக்களோ, தங்கள் எதிரிகளை இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் உருவகித்து அவர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்தி முடிந்த பிறகு – ‘தாருல் ஹரப்’ நாடாக இருந்த முந்தைய நாட்டை ‘தாருல் இஸ்லாம்’ நாடாக தங்கள் நாட்டை மாற்றிய பிறகு – தங்களுக்குள் அடித்துக் கொள்(ல்)வார்கள். அகமதியாவை சன்னியும் ஷியாவும் சேர்ந்து விலக்குவார்கள்; வேட்டையாடுவார்கள். ஷியா மசூதியில் சன்னிகள் குண்டு வைப்பார்கள். இவை ஏற்கனவே, மத அடிப்படையில் இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடான பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பவை. வெள்ளிக்கிழமை மகிமை புரிகிறதா?
View More வெள்ளிக்கிழமை விபரீதங்கள்Tag: அமைதி மார்க்கம்
வன்முறையே வரலாறாய்… – 12
அவுரங்கசீப்பின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லும் மா-அசிர்-இ ஆலம்கிரி, 1669-ஆம் வருடக் குறிப்பொன்றில், “முட்டாள் பிராமணர்கள் தங்களுடைய கேவலமான புத்தகங்களை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு – இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு – சொல்லித் தருகிறார்கள். அவர்களிடம் படிக்க தூர, தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் இவர்களின் கேவலமான அறிவியலைப் படிக்க வருவதாக அவுரங்கசீப்பிற்குத் தெரியவந்தது. இதனால் கடும் சினம் கொண்ட அவுரங்கசீப், எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் காஃபிர்களின் கோவில்களையும், அவர்களின் பள்ளிகளையும் தயக்கமின்றி இடித்துத் தள்ளும்படி அவரது ஆட்சியின் கீழிருந்த அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் (கவர்னர்கள்) உத்தரவிட்டதுடன், இனி ஒருபோதும் காஃபிர்கள் தங்களின் வேதங்களை ஓதுவதையும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதையும் அனுமதிக்கவே கூடாது” என உத்தரவிட்டதாகக் கூறுகிறது.
View More வன்முறையே வரலாறாய்… – 12வன்முறையே வரலாறாய்… – 11
இந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள். […] காலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், ஜிகாது செய்யும் வாய்ப்பு குறைந்து போன காலகட்டத்தில் மெதுவாக வன்முறையற்ற வாழ்க்கை முறைக்குத் தங்களை திருப்பிக்கொண்டார்கள். கிறிஸ்தவ மற்றும் பவுத்த மடாலயங்களைப் போலவே இவர்களும் தங்களுக்கென ஆஸ்ரமங்களை அமைத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார் சர் ஹாமில்டன் கிப் என்னும் மேற்கத்திய வரலாற்றாசிரியர்.
பின்னாட்களில் சூஃபிக்கள் என்று அழைக்கப்பட்ட மேற்படி காஜிக்கள் உலக வாழ்க்கையின்பங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக (பக்கிர்), மருத்துவம் செய்பவர்களாகவும் மாறி புகழ், பொருள், விருந்து, பெண்கள், நட்பு என அனைத்தையும் துறந்து எளிய வாழ்க்கை வாழத் தலைப்பட்டார்கள்.
View More வன்முறையே வரலாறாய்… – 11மலேகான் முதல் மகாடெல்லி வரை
குறைந்தது 9 இஸ்லாமியத் தீவிரவாதிகளாவது மலேகான் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று அரசே ஒப்புக்கொள்கிறது. பிறகு திடீரென்று சடசடவென மாற்றங்கள் ஏற்பட்டன. கைது செய்த பின் அவர்கள் மீது முறையான வழக்குகள் தொடுப்பதற்குப் பல ஆண்டுகள் கழிந்தன. குற்றவாளிகள் தப்புவதற்குத் தேவையான பல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, நடக்க வேண்டியவை நடக்காமல் போகின்றன. மலேகான் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் மாற்றப்படுகிறர்கள். மலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பலரும் இஸ்லாமியர்கள் என்பது தெரிந்தும், இந்து பயங்கரவாதம் என்ற ஒரு இல்லாத பூச்சாண்டிப் பயங்கரவாதத்தை அரசே உருவாக்கி மக்களை மிரட்டி வருகிறது.
View More மலேகான் முதல் மகாடெல்லி வரை