மலேகான் முதல் மகாடெல்லி வரை

 

இந்தியாவில் இஸ்லாமியப் பயங்கரவாதம் தொடரின் 15வது பாகம்.

முந்தைய பகுதிகள் :

சென்ற கட்டுரையில் இந்தியாவில் அல் காயிதாவின் செயல்பாடு மற்றும் அதன் நோக்கங்கள் பற்றிய விவரங்களைப் பார்தோம்.  இந்த கட்டுரையிலும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதங்கள் பற்றிய விவரங்களைக் கால வரிசைப்படி பார்ப்போம்.

2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ந் தேதி:

நாடு கடத்தப்பட்ட அபு சலீமின் கையாள் ரியாஸ் சித்திக் என்பவனை மத்தியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்தார்கள். 1993ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆயுதங்கள், வெடி மருந்து பொருட்கள் கொடுத்த குற்றத்திற்குக் கைது செய்ததாக அரசு தெரிவித்தது.

இதே கால கட்டத்தில் தெற்கு மும்பையில் உள்ள நாக்பாடா எனுமிடத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.  கைது செய்த போது அவர்கள் மூவரும் வெடி பொருட்கள் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் வைத்திருந்ததாகவும், சில ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.

2006 ஜூலை 11 - ரயில்களில் குண்டு வெடிப்பு

2006ம் ஆண்டு ஜீலை மாதம் 11ந் தேதி:

மும்பையில் 7 ரயில்களில் குண்டுகள் வெடிக்கின்றன. 209 பேர் சாவு. 700 பேர் கவலைக்கிடம்.

2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ந் தேதி:

மலோகன் குண்டு வெடிப்பு நிகழ்கிறது.  37 பேர் சாவு. 125 பேர் காயம்.

2006 அக்டோபர் மாதம் 3ந் தேதி:

மும்பை ரயில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தியதாக பயங்கரவாதத் தடுப்புப் படையினர் அசிப் கான் என்ற பசீர் கான் என்பவனை கைது செய்தார்கள்.  இவன் பல்வேறு பெயர்களில் பயங்கரவாத தாக்குதலுக்கு வெடி மருந்து சேகரித்தவன் எனக் காவல் துறையினர் தெரிவித்தார்கள். இவனது மற்ற பெயர்களில் ஒன்று அப்துல்லா. இந்தப் பெயர் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் நகரில் பலருக்குத் தெரிந்த பெயராகும்.

2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ந் தேதி:

சிமி இயக்கத்தை சார்ந்த நுருல்லா சம்ஜேதா என்பவனை மலோகன் நகருக்கு அருகில் உள்ள ஜபார்நகரில் காவல்துறையினர் கைது செய்கிறார்கள்.

சிமி இயக்கத்தின் நுரூல் ஹொன்டா சாம்சூல் ஹொண்டா என்பவனைக் கைது செய்கிறார்கள்.

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ந் தேதி, 21ந் தேதி:

மேலும் சில இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள், கைது செய்யப்பட்ட அனைவரும் சிமி இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள்.

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ந் தேதி:

மகாராஷ்ட்ரா காவல் துறையினர் ஹமீத் என்பவனைக் கைது செய்தார்கள். இவன் மலோகன் குண்டு வெடிப்பின் குற்றவாளி என்பது அரசு தெரிவித்த தகவல். இவனை யவட்மால் எனுமிடத்தில் கைது செய்தார்கள்.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ந் தேதி:

மும்பைக் காவல் துறையின் தீவிரவாதத் தடுப்புப் படையினர் அப்ரார் அகமது  என்பவனையும், ஹமீத் போலவே கைது செய்து, 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ந் தேதி மலோகன் நகரில் நடந்த குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி என அடையாளம் காட்டினார்கள்.

2007ம் ஆண்டு மே மாதம் 18ந் தேதி:

ஹைதராபாத்தில் குண்டு வெடிக்கிறது.

2007ம் ஆண்டு மே மாதம் 20ந் தேதி:

ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். நாக்பூர் போலீஸ் நடத்திய சோதனையில் 6.9.டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் ஆயில் கைப்பற்றப்பட்டது. இந்தப் பொருள் 11.7.2006ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது எனக் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.  இவர்கள் ஐவரும் நாக்பூரிலிருந்து 45 கி.மீ. தூரமுள்ள கூகி எனும் பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள்.

இந்தச் சம்பவத்தைப் போலவே 1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான, தாவூத்தின் கூட்டாளி அப்துல் க்யூம் ஷேக் என்பவனை மும்பை காவல் துறையினர் பஞ்சிராபோல எனுமிடத்தில் கைது செய்தார்கள்.

மகாராஷ்டரக் காவல்துறையினரும், ஆந்திர பிரதேசக் காவல்துறையினரும் இணைந்து மத்திய மும்பையில் உள்ள ஜல்ன எனுமிடத்தில் இறைச்சிக் கடையின் உரிமையாளரான ஷேகிப் ப்க்ருதின் ஜகிதார் என்பவனைக் கைது செய்கிறார்கள். ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்று ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து சப்ளை செய்தவன் என்கின்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டான். இவன் உள்ளுரில் உள்ள தர்காவின் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜல்னாவிலிருந்து நான்கு ஆட்களைத் தயார் செய்து அவர்கள் மூலமாக ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கொடுத்து ஹைதராபாத்திற்கு அனுப்பி வைத்தவன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

2007ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி:

30 ஆண்டு காலமாகக் கள்ளத் தனமாக மும்பையில் உள்ள பின்டி பஜார் பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பயங்கரவாதி குடியிருந்த விஷயம் வெளியே  வெளிச்சத்திற்கு வந்தது.

மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையும், குஜராத்தின் கட்ஜ் மாவட்டக் காவல்துறையினரும் இணைந்து அல்ஃபதார் இயக்கத்தைச் சார்ந்தவனைக் கைது செய்தார்கள்.  இவன் பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவன்; முகமது சலீம் மேமன் என்பது உண்மையான பெயராக இருந்தாலும் தனது பெயரை இடத்திற்குத் தகுந்தாற் போல் பெயரை மாற்றிக் கொள்ளக் கூடியவன்.  இவனைக் கைது செய்த போது 30க்கும் மேற்பட்ட போலி கிரடிட் கார்டுகள் இவனிடம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப் போலி கிரடிட் கார்டுகள் மூலம் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் உள்ளுரில் போலி அடையாளம் காட்டிக் கொண்டனர் என உள்ளுர் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.

இந்தச் சம்பவங்கள் போலவே கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு இடங்களில் மகாராஷ்ட்ர காவல் துறையினர் இஸ்லாமிய பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த உள்ளுர் பயங்கரவாத அமைப்பினரையும் கைது செய்த நிகழ்வுகள் ஏராளமாகும்.  மலோகன் குண்டு வெடிப்பு வழக்கின் ஒன்பதாவது குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்றார்கள். அதாவது, குறைந்தது 9 இஸ்லாமியத் தீவிரவாதிகளாவது மலோகன் குண்டுவெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று அரசே ஒப்புக்கொள்கிறது.

மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட சிமி தீவிரவாதிகள்

பிறகு திடீரென்று சடசடவென மாற்றங்கள் ஏற்பட்டன. கைது செய்த பின் அவர்கள் மீது முறையான வழக்குகள் தொடுப்பதற்குப் பல ஆண்டுகள் கழிந்தன. குற்றவாளிகள் தப்புவதற்குத் தேவையான பல விஷயங்கள் நடக்கின்றன. அதாவது, நடக்க வேண்டியவை நடக்காமல் போகின்றன.

மலோகன் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் மாற்றப்படுகிறர்கள். மலோகன் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பலரும் இஸ்லாமியர்கள் என்பது தெரிந்தும், இந்து பயங்கரவாதம் என்ற ஒரு இல்லாத பூச்சாண்டிப் பயங்கரவாதத்தை அரசே உருவாக்கி மக்களை மிரட்டி வருகிறது. அரசின் போலித் தனம் நாம் அறியாத வகையில் அரங்கேற ஆரம்பித்தது.

பெண் துறவி ப்ரக்யா ஜி - முந்தைய நிலையும் தற்போதைய அவநிலையும்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் சம்பந்தமாகப் பயங்கரவாதிகளின் திட்டங்கள் பற்றிய விவரங்கள் அள்ள அள்ளக் குறையாமல் வந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவுதான் அள்ளுவது ? முதுகெலும்பே உடைந்து விடும்போல் இருக்கிறது. ஓய்வு எடுப்பதற்காக, டெல்லியில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களை வேடிக்கை பார்க்கப் போவோம். வாருங்கள் டெல்லிக்கு.

அட ! பயப்படாமல் வாருங்கள். ஆறிலும் சாவு. (அதில், அல்லது அதற்குப் பின் சாகாமல் இருந்தாமல்) நூரினால் சாவு. தைரியமாக வாருங்கள்.

டெல்லி

இந்தியா ஒரு நேருவிய-செக்யூலரிச நாடு. பயங்கரவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த அரசியல் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய நேருவியக் கடமை அதற்கு உண்டு. தலைநகர் டெல்லிக்கு அதைவிட முக்கிய வேலை இருக்கலாமா ?

அப்பாவிகளைக் கொன்ற அப்துல் நாசர் மதானி - கைதுக்கு முன்பும் பின்பும்

இந்தியாவின் தலைநகரமான டெல்லி இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு மட்டும் புகலிடமாக விளங்கவில்லை, இந்தியாவில் பயங்கரவாத செயல்களைச் செய்யும் அனைத்துப்  பயங்கரவாத இயக்கங்களுக்கும் பாதுகாப்பான இடமாக டெல்லி விளங்குகிறது.  1997ம் ஆண்டிலிருந்து 25 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.  நடந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களிலும் காயமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு.

கசாப்பு கசாப்பின் கட்டளைகள்

1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ந் தேதி நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார், 10க்கும் அதிகமானவர்கள் படு காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தில் தொடங்கி தொடர்ச்சியாக டெல்லியில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்கதையாகவே மாறியது.

அந்த ஆண்டு மட்டும் டெல்லியில் 10 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.  இந்தச் சம்பவங்களில் மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அக்டோபர் மாதம் 18ந் தேதி சரோஜினி நகர், பாகர்கஞ்ச், கோவிந்தபுரியில் நடத்திய குண்டு வெடிப்புகள். 59 பேர் கொல்லப்பட்டார்கள், 155 பேர்கள் காயமடைந்துள்ளார்கள். 1998ம் ஆண்டும் நான்கு இடங்களில் பயங்கரவாதத்  தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.

டெல்லியில் மக்கள் அதிக அளவில் கூடும் கரோல்பாக், கஃபார் மார்க்கெட், கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாக டெல்லி விளங்குகிறது என்பதை நிறுவுகின்றன.

வழக்கமாகக் குண்டு வெடிப்பு நடந்த பின்னால், சமோசா டீ குடித்து ஆசுவாசப்படுத்திய பின்னர், அந்தக் குண்டு வெடிப்புக்கு நாங்கள்தான் பொறுப்பு என்று பயங்கரவாதிகள் அறிக்கை விடுவார்கள்.

மடையர்கள். அணுகுண்டு போட்டாலும் தாங்கும் நம் அரசியல்வாதிகள், அறிக்கையை மட்டும் தாங்கமாட்டார்கள் என்ற உண்மை இந்த இஸ்லாமியவாதிகளுக்குத் தெரிந்தால்தானே ?

குண்டு வெடிப்புக்குப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகத் தீவிரவாதிகள் அறிக்கை வெளியிட்ட உடனேயே, உலகின் மாபெரும் முப்படைகளுக்கும் தலைமை தாங்கும் ஜனாதிபதியிடம் இருந்து மென்மையான கண்டிப்பு அறிக்கையும், நம் பிரதம மந்திரிகளிடம் இருந்து வன்மையாகக் கண்டிப்பு அறிக்கையும் வெளிவரும். அந்த அறிக்கைகளே போதுமானது. தொலைந்தார்கள் தீவிரவாதிகள். தொலைந்தது தீவிரவாதம்.

பாராளுமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்ற உயிர்விட்ட ஒரு இந்திய வீரர்

1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ந் தேதி நடத்திய தாக்குதலிருந்து 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ந் தேதி வரை பல தாக்குதல்கள் டில்லியில் நடந்துள்ளன (Disclaimer: எதற்கும் உடனடியாக இப்போதைய டிவி சேனலையும் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு இருந்தால், தகவற்பிழைக்குக் கட்டுரை ஆசிரியரான நான் பொறுப்பல்ல !)  இந்தத் தாக்குதல்களில் மிகவும் மோசமான தாக்குதல், விசேஷமான தாக்குதல், 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ந் தேதி, பாராளுமன்றம் நடக்கும் போதே, அந்தப் பாராளுமன்ற கட்டிடத்தைத் தாக்க முற்பட்டது தான். அதில் மட்டும் அப்படி என்ன விசேஷம் ?

வழக்கமாகத் தாக்குதலுக்குப் பின்னர்தான் அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிக்கை விடுவார்கள் இஸ்லாமியவாதிகள். அவர்களுக்குப் போட்டியாகப் பதில் அறிக்கை விடுவார்கள் நம் வீரமிகு அரசியல்வாதிகள். ஆனால், இந்த முறை, தாக்குதலுக்குப் பின்பு அறிக்கை வெளியிடுவதற்குப் பதிலாகப் பாராளுமன்றத்தைத் தாக்கப் போகிறோம் என்று அனைத்து மீடியாக்களுக்கும் தகவல்களை கொடுத்துவிட்டுத்தான் தாக்குதல் நடத்தினார்கள்.

பாராளுமன்றக் கட்டிடத்தின் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு டிசம்பர் மாதம் 12ந் தேதி  ஹுரியத் கூட்டணியின் தலைவரான அப்துல் கனிபட் ஸ்ரீநகரில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் “டிசம்பர் 13ந் தேதி ஒரு முக்கியமான நாளாக இருக்கும்.  காஷ்மீருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும். எப்படி என்று கேட்காதீர்கள், 12 மணி நேரம் பொறுத்திருந்து பாருங்கள்.  நடக்கப் போகும் சம்பவங்கள் உங்களுக்கோ எனக்கோ ஏமாற்றமாக இருக்காது” எனச் சிலப் புதிரான வார்த்தைகளைச் சொன்னார். ஆகவே, இந்தத் தாக்குதல் நடக்க போவது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தொடர்பு கொண்டுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்பது உள்ளங்கை க்ரேனேட் பாம்ப்.

பாவம் நாம் தேர்ந்தெடுக்கும் (?) அறிக்கை வீர அரசியல்வாதிகள். அவர்கள் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும்.

2001ல் டிசம்பர் 13ந் தேதி பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல்

13.12.2001ந் தேதி இந்தியாவின் ஆன்மாவான ஜனநாயகத்தின் மீது விழுந்த அடி, பாராளுமன்றக் கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவம்.  இந்தியா வரலாற்றிலேயே மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலைச் சந்தித்து.  நாடாளுமன்றத் தாக்குதல் மூலமாக இந்திய அரசை கேலிக்குள்ளாக்குவதும் அரசியல் ரீதியாகத் தேசத்தை ஸ்தம்பிக்க வைப்பதும் பயங்கரவாதிகளின் நோக்கங்களாக இருந்தன. மயிரிழையில் இந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்கள் காக்கப்பட்டன. இந்தத்  தாக்குதலில் ஐந்து இஸ்லாமியவாதிகள் கொல்லப்பட்டார்கள்.

இவர்களோடு ஆறு பாதுகாப்புப் படை வீரர்களும் வீர மரணமடைந்தார்கள். இவர்களுடன் அப்பாவி தோட்டக்காரர் ஒருவரும் மரணமடைந்தார்.  12 பாதுகாப்பு படைவீரர்களும், ஒரு டிவி காமிராமேன் உட்பட 18 பேர்கள் காயமடைந்தார்கள். 13ந் தேதி காலை 11.50 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது.

11.41க்குப் பயங்கரவாதிகள் பயன்படுத்திய கார் சரேலெனத் திரும்பியதைக் கவனித்தப் பாதுகாப்பு அதிகாரி ஜே.பி.யாதவ் கார் டிரைவரை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாததைக் கவனித்த பின் உடனடியாகத் தனது வாக்கி டாக்கியின் மூலம் சக காவலர்களை உஷார்படுத்தியதின் விளைவாக உடனடியாக அனைத்து நுழையும் கதவுகளும் சாத்தப்பட்டன. பல பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்தியாவுக்குக் கஷ்டகாலம் எப்படி எல்லாம் வருகிறது பாருங்கள் !

அரசாங்கமே ஏற்பாடு செய்த ஆபாச மசாஜ்

சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் பயங்கரவாதிகள் பயன்படுத்திய கார் வாங்கப்பட்டது.  தில்லியின் கரோல்பாக் பகுதியிலிருக்கும் லக்கி மோட்டார்ஸிடமிருந்து வெறும் 1.1 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கப்பட்டதாகப் பின்னர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. வெளியில் மலிவு விலையில் காரும் பங்களாவும். சிறையில் சிக்கன் கறியோடு வெளியில் சொல்லத் தரமற்ற மசாஜ்.

அந்தச் செலவுகளுக்காக இன்கம் டாக்ஸ் கட்டிப் பிழைக்கும் கடமை உங்களுடையது. பெல்ட் குண்டு கட்டிச் சாகடிக்கும் புனிதக் கடமை அவர்களுடையது.

பாராட்டப்பட வேண்டிய பாதுகாப்புத் துறைகள்

அந்தப் பாராளுமன்றத் தாக்குதலுக்கும் முன்பே பல தீவிரவாத முயற்சிகள் தீரம் மிக்கப் பாதுகாப்புத் துறையினரால் முறியடிக்கப்பட்டன என்பதையும் சொல்லியாக வேண்டும்.

உதாரணமாக ஒன்று. 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்க தேசத்தை சார்ந்த இரண்டு பயங்கரவாதிகளைக் கைது செய்திருந்தார்கள். அதன் பின்பு டெல்லியில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த லஷ்கர் அமைப்பினர் திட்டமிட்டு இருப்பதாக மாநில காவல் துறையினருக்கு மத்திய உளவுத்  துறையினர் ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தனர்.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ந் தேதி வாக்கில் பழைய டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகில் ஒரு பேருந்திலிருந்து உடம்பில் ஸ்வெட்டர், தலையில் மங்கி கேப் சகிதமாகச் சிலர் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கினார்கள். இவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகம் கொண்ட காவல்துறையினர், அந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போதுதான், அவர்கள் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளில் இரண்டு கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து, டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுகள், மற்றும் துப்பாக்கிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் கலாம் குர்ஷித்கூரி என்கின்ற உசேன், அப்துல் ரஹமத் என்கிற முகமது உசேன், முகமது அக்பர் உசேன் என்கிற ஹபீப் ஆகிய மூவர். மூவரும் லஷ்கர்-இ-தொய்பாவினர் என்பது தெரியவந்தது.

பெரிய பெரிய நகரங்களுக்கு மூட்டை முடிச்சுகளோடு பஸ்ஸில் வந்து இறங்குபவர்களெல்லாம் அப்பாவி கிராமத்து ஆசாமிகள், அந்த மூட்டை முடிச்சுகளில் இருப்பவை முறுக்கு, அதிரசம், பாலில் ஊற வைத்த பூரி ஜிலேபிகள்தான் என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது !

எந்த அமைப்பு தாக்கியது ? – குழப்பமும் தெளிவும்

தீவிரவாதக் குழுக்களிடையே நடந்தப் பேச்சுக்களை ஸ்ரீநகரில் உள்ள இந்திய உளவு அமைப்புகள் இடைமறித்துக் கேட்ட போது கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப் பட்ட அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா என்பது தெரியவந்தது. இந்தப் பேச்சுகளைக் கேட்டது போல் இன்னொரு பேச்சும் ஒட்டுக் கேட்கப்பட்டது.

அந்த உரையாடலை ஜம்மு மாநிலக் காவல்துறையினர் இடைமறித்துக் கேட்டனர்.  இவர்கள் கேட்ட இந்தப் பேச்சிலோ தாக்குதலில் ஈடுபட்ட அமைப்புகளில் முக்கிய அமைப்பு ஹிஸ்புல் முஜாஹிதீன் என்றும், இந்த அமைப்பினர் உள்ளுரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் உதவியுடன் இந்த தாக்குதலை நடத்தியதாகவும்  தெரிந்தது. இந்த உரையாடல் போலியான உரையாடல். தக்கியா விளையாட்டு விளையாடி இருக்கிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பினர் மீது காவல் துறையினர் கவனம் வந்துவிடக்கூடாது என்று அதைத் திசை திருப்பவே அந்தப் போலி உரையாடல் நடந்தது என்பதுப் பின்னர் தெரியவந்தது.

இறுதியாக அனைத்து உளவுத் துறையினரின் விசாரணையின் படிப் பாராளுமன்றக் கட்டிடத்தைத் தாக்கிய அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷே முகமது என்பதும், இந்த இரு அமைப்பினருக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் அல் காயிதா வும் உதவி புரிந்தன என்பதும் தெரியவந்தன.

1999ம் ஆண்டு ஜீலை மாதத்திலிருந்து லஷ்கர் அமைப்பினர் தங்களது தற்கொலைப் படையின் மூலம் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். .  லஷ்கர்-இ-தொய்பாவின் கட்டுப்பாட்டு அறையானது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு அவர்கள்  சங்கேத மொழியில் வைத்த பெயர் கைபர் கணவாய்.  இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து காஷ்மீரில் தலைமறைவாக உள்ள லஷ்கர் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல்கள் அனுப்பட்டன. இந்தத் தகவல்களை இடைமறித்து கேட்ட போது, “மீடியாவுடன் பேச வேண்டாம், மற்ற தீவிரவாத அமைப்புகளுடனும் பேச வேண்டாம்” எனத் தனது அமைப்பினருக்கு லஷ்கர் தலைமையிடம் அறிவுறித்தியுள்ளது தெரிய வந்தது.

மற்றத் தீவிரவாத அமைப்புக்களுடன் பேச வேண்டாம் என்று எச்சரிக்கையாக அவர்கள் இருப்பது நமக்குப் புரிகிறது. ஆனால், இந்திய மீடியாவைக்கூடவா பயங்கரவாதிகள் சந்தேகிக்க வேண்டும் ? கலிகாலம்.

என்ன செய்வது? இப்படிப்பட்ட எச்சரிக்கைகளையும் மீறிக் காஷ்மீரில் தீவிரவாதிகள் யாரேனும் எப்போதாவது கொல்லப்பட்டு விடுகிறார்கள். நவம்பர் மாதம் கொல்லப்பட்ட 108 தீவிரவாதிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் லஷ்கர் அமைப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.

டெல்லியில் பாராளுமன்றக் கட்டிடம் மட்டும் தாக்கப்பட வேண்டும் என்பதுதான் முதல் திட்டமாக இருந்ததாம். அந்த நோக்கில், ஏற்கனவே ஐந்து பேர் கொண்ட தற்கொலைப் படைக் குழு நியமிக்கப்பட்டு மேற்படிக் குழு தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் பற்றிய குறிப்புகளை தீவிரவாத குழுவின் நிர்வாகத்திலிருந்து பெற்றுள்ளது.

ஆனால், இது இந்தியா. நேருவிய-செக்யூலரிசத்தை மதிக்கும் நாடு. ஒரு இடத்தில் குண்டு போடத் திட்டமிட்டால், ஒன்பது இடங்களில் குண்டு போடுவது இலவசமாகக் கிடைக்கும் என்பது திட்டமிடும்போது தெரியவந்திருக்கிறது. அதனால், நாடாளுமன்றக் கட்டிடம் மட்டும் இல்லாமல், அமெரிக்கத் தூதரகம், நார்த் மற்றும் சவுத் பிளாக், ராணுவத் தலைமையகம், ஆகியவற்றையும் சேர்த்தே தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களாகத் தேர்வு செய்து, இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷே முகமது அமைப்பிற்குப் பொறுப்பு கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட லஷ்கர் அமைப்பினர் பின்னர் தெரிவித்தார்கள். அவை ஏனோ நடக்கவில்லை.

எத்தனையோ தீவிரவாதப் பிரிவுகள் இருக்கலாம். ஆனால், ஜிகாத் என்று வந்தால் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டியது புனிதக் கடமை. குஷ்டம் வந்த விரல்கள் ஒன்று போல் இருப்பதில்லை. ஆனால், அவை ஒன்று சேர்ந்து முஷ்டியானால் ?

ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் அமைப்பினர் கூட்டாகத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இதற்காக, லஷ்கர் அமைப்பினர் ஐந்து நபர்கள் கொண்ட தற்கொலைப் படையை உருவாக்கியது. இந்தத் தற்கொலைப் படைக்குத் தேவையான போக்குவரத்து, கார் வசதி, வி.ஜ.பி. ஸ்டிக்கர் போன்ற உதவிகளைக் காஷ்மீரில் உள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் செய்து கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ந் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் குப்வாரா பகுதி கமாண்டார் இஜாஸ்தர், பட்டாலியன் கமாண்டர் இனாயத் துல்லா வானி உள்ளிட்ட 4 பேர் குழு காஷ்மீரிலிருந்து தில்லிக்கு வந்துள்ளது. மற்றவர்கள் முஷ்டாக் அகமது பட் மற்றும் தன்வீர் அகமதுகான் எனக் காஷ்மீர் போலீஸ் உளவுத் துறைக்கு தெரியப்படுத்தியது, இந்தத் தகவல்களை உளவுத் துறை தில்லி போலீசுக்கு தெரிவித்தார்கள்.

டிசம்பர் மாதம் 6ந் தேதியே தாக்குதல் நடத்தப்படும் என்று ஜம்மு-காஷ்மீரிலிருந்து வரும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 6ந் தேதி மாநில போலீஸ் மற்றொரு தகவலையும் தெரிவித்தர்கள் — அதாவது காஜி, உமர் என இரு தற்கொலைப்படையினர் இடம் பெற்றிருப்பதாக டிசம்பர் மாதம் 9ந் தேதி காஷ்மீர் மாநிலக் காவல் துறையினர் ராணுவதற்கும், ரா உளவு அமைப்பிற்கும் இதே தகவல்களை தெரிவித்தார்கள்.

இந்த தகவல்களைப் போல் அல் காயிதாவின் பயங்கரவாதியான முகமது அஃப்ரோஸ் கொடுத்த வாக்கு மூலத்திலும் பாராளுமன்ற கட்டிடம் தாக்குதல் சம்பந்தமாக தகவல்கள் கிடைத்தன.

இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தின் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பே, அதாவது 2000ம் ஆண்டில் ரம்ஜானின் 24வது நாளில் செங்கோட்டை தாக்கப்பட்டது. அதே தினத்தில்தான் இந்தத் தாக்குதலும் நடந்துள்ளது.  தாக்குதலில் லஷ்கர் அமைப்பினர் மட்டும் ஈடுபட்டதாக கூறுவதற்கு இன்டெலிஜென்ஸ் பீரொ மற்றும் ரா அமைப்பினர் சற்றுத் தயக்கம் காட்டினார்கள். அதனால், லஷ்கர் அமைப்பினருடன் ஜெய்ஷே முகமது அமைப்பினரும் கூட்டாகச் சேர்ந்து தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று மழுப்பலாகக் கூறினார்கள்.

ஆனால், பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய அமைப்பினர் என இறுதியாக கூற வேண்டுமானால் ஜெய்ஷே முகமது அமைப்பின் மீதுதான் முழுமையான சந்தேகம் ஏற்படுகிறது.  2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ந் தேதி ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்றம் மீதான தாக்குதலுக்கும் பாராளுமன்ற கட்டிடம் தாக்குதலுக்கும் ஒற்றுமை இருப்பதால் இந்தக் குற்றச்சாட்டு எழுகிறது.

காஷ்மீர் சட்ட மன்றத் தாக்குதலில் ஜெய்ஷே முகமது பயங்கரவாதிகள் சட்ட மன்றத்தின் பாதுகாப்பு உள்வளையத்துக்குள்ளேயே வந்து விட்டார்கள். சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே அவர்களது வாகனம் தடுக்கப்பட்ட போது அதை வெடிக்கச் செய்தார்கள். சட்டமன்றம் சுட்டமன்றமானது.

இந்த சம்பவத்திற்கு முதலில் ஜெய்ஷே முகமது பொறுப்பேற்றுக் கொண்டது, பின்னர் மறுத்தது. உளவுத்துறையையும் ஊடகத் தொடர்பாளர்களையும் குழப்புவதற்குத்தான் இப்படிப் பெல்ட் குண்டு பெரியவீரர்கள் செய்வார்கள்.  ஆகவே சம்பவங்கள் நடந்தவுடன் தாங்கள் தான் செய்தோம் என அறிவிப்பதும், பின்னர் அதை மறுப்பதும் பயங்கரவாத அமைப்பிற்கு வழக்கமான விஷயங்கள்தான்.

பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இரண்டு தினங்களில் 15.12.2001ந் தேதி காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த டெல்லி பல்கலைகழக பேராசிரியர் அப்துல் ரஹிமான் ஜிலானி, முகமது அப்சல் குரு, அவரது மனைவி நவஜோத் சிந்து என மூவர் கைது செய்யப்பட்டார்கள்.

பாராளுமன்றக் கட்டிடத்தை தாக்குவதற்கு மூலமாக இருந்த அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவும்,  ஜெய்ஷ்-எ-மொஹம்மத் என்ற அமைப்புமாகும், இதில்  ஜெய்ஷ்-எ-மொஹம்மத் அமைப்பைச் சார்ந்த மௌலானா மசூத் அஸார் என்பவன் முக்கிய பொறுப்பாளர்.  ஆனால், பாராளுமன்றக் கட்டிடத்தைத் தாக்குவதற்குப்  பொறுப்பாளாராக இருந்தவன் காஸி பாபா என்பவன்.  21.8.2003ந் தேதி ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இவன் கொல்லப்பட்டான்.  இவன் கொல்லப்பட்ட ஐந்தாவது நாள் மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

இந்தியப் பாராளுமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளியான அப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இன்று வரை நிறைவேற்றப் படவில்லை.  மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனத் தங்களைச் சீர்திருத்தவாதியாக காட்டி கொள்பவர்களும், மதச்சார்ப்பற்றவாதிகளாகக் காட்டிக் கொள்பவர்களும் கோரிக்கை எழுப்புகிறார்கள்.

ஆனால், 2003ல் பாகிஸ்தான் அதிபர் முஸரப்பை கொல்ல முயன்றதாகக் கைது செய்யப்பட்ட 12 பேர்களுக்கும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் 26.9.2006ந் தேதி மரண தண்டனை விதித்தது.  இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என எவரும் கோரவில்லை, உலக முழுவதும் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரும் இந்திய மீடியாக்களும், நேருவிய-மதச்சார்பற்ற வாதிகளும் இந்தத் தண்டனையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை என்பதிலிருந்தே இவர்களின் கபட நாடகம் நன்கு தெரியும்.  இதில் வேடிக்கை என்ன வென்றால் அப்போது காஷ்மீர் மாநில முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா கூறியது:

You want to hang him? Go ahead and hang him.  But the consequences of hanging him must also be remembered.

தமிழில்:

அவரைத் தூக்கில் போடவேண்டும் என்று விரும்புகிறாயா ? போ. போய்த் தூக்கில் போட்டுக்கொள். ஆனால், அவரைத் தூக்கில் போட்டபின்னால் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் கண்டிப்பாக மறந்துவிடக் கூடாது !

என்ன தைரியம் இருந்தால் இவ்வாறு அறிக்கை விடுவார் என்பதை நினைத்துப் பார்த்தால், எவ்வளவு மோசமான பயங்கரவாதியாக இருந்தாலும் அவனுக்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமியர் வக்காலத்து வாங்குபவர்களாகவே இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மை தெரியும்.

அரசாங்க விருந்தினர் அஃப்சல் குரு – கைதின் போது – தற்போது

அப்சல் குருவிற்குத் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவேப் பல்வேறு சம்பவங்களை எடுத்துக் காட்டி அரசை மிரட்டும் பணியைச் செய்து வருகிறார்கள்.  உதாரணமாக, இஸ்லாமியப் பயங்கரவாதி மக்பூல் பட்க்கு மரண தண்டனை விதித்த நீதிபதி நீல்கந்த கட்சுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும் என்றார்கள். அதாவது 1980ல் மரண தண்டனை விதித்த அந்த நீதிபதி இஸ்லாமியவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

அந்தச் சம்பவத்தை சுட்டிக் காட்டி மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள். மேலும் அப்சல் குருவை தூக்கிலிட்டால் இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படும் என்கிறார்கள். மத ஒற்றுமை பற்றி அக்கறை உள்ளவர்கள் இந்தியாவில் இவர்கள்தானோ !!

மிரட்டலைக் கூட இவ்வளவு மென்மையாகச் சொல்லும் இவர்களைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பது சரியா என்று யாரேனும் நேருவிய-செக்யூலர்வாதி கேட்டாலும் கேட்கலாம்.

2005ல் நடந்த குண்டு வெடிப்புக்கள்             

2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ந் தேதி தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக 66க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள், 200க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.  இந்தச் சம்பவம் தீபாவளிப் பண்டிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது.  டெல்லியில் மக்கள் அதிக அளவில் கூடும் இடமான சரோஜினி நகர், பாகர் கஞ்ச், டெல்லி போக்குவரத்து கழக பணிமனை இருக்கும் கோவிந்த்புரி ஆகிய இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடந்தன.  பல தினங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகவே இது தெரிகிறது என டெல்லி காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

டெல்லியில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பே இஸ்லாமிய பயங்கரவாதிகள் மே மாதம் 13ந் ஜெய்ப்பூரில் நடத்திய குண்டு வெடிப்பும், 25 ஜீலை மாதம் பெங்களுரில் நடந்த சம்பவமும், ஜீலை மாதம் 26 ந் தேதி அகமதாபாத்தில் நடத்திய குண்டு வெடிப்பும் டெல்லி குண்டு வெடிப்பிற்கு முன்னோட்டமாகக் கருத வேண்டியவை. இந்தப் பாதகச் செயலைச் செய்தவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, சிமி ஆகிய இரண்டு இயக்கங்களும் என்று கூறினாலும், இந்தச் செயல்களை செய்து முடித்தவர்கள் இந்தியன் முஜாஹுதின் அமைப்பினர் என்பது டெல்லி காவல் துறையினரின் இறுதி முடிவாகும்.

டெல்லியில் அக்டோபர் மாதம் 29ந் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன் அதாவது மே மாதம் 22ந் தேதியே இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், 60க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஒன்று ஜீ.டி.கார்னல் ரோட்டில் உள்ள லிபர்டி சினிமா தியேட்டர், இரண்டாவது பட்டேல் நகரில் உள்ள சத்தியம் சினிமா தியேட்டர் – ஆக இரண்டு சினிமா தியேட்டர்களே.  இந்த இரண்டு சினிமா தியேட்டர்களிலும் ஓடிய இந்திப் படம் இந்திய பாகிஸ்தான் போர் பற்றியது. இந்தியாவிற்கு ஆதரவானது. அதிக எண்ணிக்கையில் மக்கள் திரண்டு பார்த்தனர். பலியாயினர். இந்தியாவில் பாகிஸ்தான் ஆதரவுப் படங்களைப் பார்க்காமல் இந்திய ஆதரவுப் படங்களைப் பார்த்ததற்குத் தண்டிக்கப்பட்டார்கள்.

2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ந் தேதி நடந்த குண்டு வெடிப்பின் குற்றவாளிகள் என மீடியாக்களும், முக்கிய அரசியல் கட்சியினரும் லஷ்கர்-இ-தொய்பாவினர் மேல் குற்றம் சாட்டினர்.  துவக்கத்தில் இந்தத் தாக்குதலுக்கும் எங்கள் இயக்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது என லஷ்கர் அமைப்பினர் மறுத்து வந்தார்கள். ஆனால், நாளடைவில் டெல்லி காவல்துறையினரின் விடா முயற்சியின் காரணமாக பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஸ்ரீநகரின் லஷ்கர் கமாண்டர் அபு ஹசிபா என்பவனும், ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதியான அபு அல் க்வாமா என்பவனும், இவர்களுடன் மற்றும் ஏழு நபர்கள் கொண்ட ஒரு குழுதான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக டெல்லி உதவி கமிஷனர் தெரிவித்தார்.

இந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் 2002ல் அகமதாபாத்தில் உள்ள அக்ஷ்தர்தம் கோவில் குண்டு வெடிப்பின் குற்றவாளிகள்.  இதைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ந் தேதி தாரீக் அகமது தார் என்பவன் கைது செய்யப்பட்டான்.  இவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் நான்கு பேர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தார்கள், முகமது ரபிக் ஷா அவனது கூட்டாளிகள் இருவர், மற்றும் முகமது ஹுசைன் கைலி, குலாம் முகமது கான் என்பவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் ரபிக் ஷா என்பவன் மட்டுமே இந்திய நாட்டைச் சார்ந்தவன், தற்கொலைப் பயிற்சி பெற்றவன், லஷ்கர் இ தொய்பாவின் முழுப் பயிற்சி பெற்றவன், மற்றவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.

இந்த குண்டு வெடிப்பிற்கு முக்கிய பொறுப்பாளராக இருந்து செயல்பட்டவன் தாரீக் அன்வர் தார் என்பவன். வறுமையின் காரணமாகப் பயங்கரவாத இயக்கத்தில் இணைத்து கொண்டவன் கிடையாது.  இவனுக்குக் காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் சொந்தமான வீடு உள்ளது. தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வெளிநாட்டு நிறுவனத்தில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவன்.  இவனை டெல்லி போலீஸ் கைது செய்த போது 8.5 லட்சம் சவுதி ரியாத் கரன்சி கைவசம் வைத்திருந்தான்.

பயங்கரவாதச் செயலுக்கு ஆட்களை சேர்க்கும் பணியையும் செய்து வந்தவன் தாரீக் அன்வர் தார் என்பவன்.  இவனுக்கு உதவிகரமாக வரைபடம் தயாரித்துக் கொடுத்தவன், காஷ்மீர் சால்வை வியாபாரியான முகமது ஹனிப் பட் என்பவன்.  இவன் வரைபடம் தயாரித்துக் கொடுத்தது மட்டுமில்லாமல், தாக்குதல் நடத்திய பின் தப்பிச் செல்வதற்குறிய வழிகளையும் வகுத்து கொடுத்தவன். முகமது ஹனிப் பட்டுடன் இருவரும் இணைந்து லஷ்கர் அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2005ல் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு நிதி உதவி செய்தவன் தாரீக் அன்வர் தார் என்பவன். முழு நிதியும் அவன் கொடுத்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.  இதன் காரணமாக அவனின் நான்கு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. வங்கியில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் இருப்பு இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தார்கள்.  குண்டு வெடிப்பு நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்தான் துபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் இவனது கணக்கில் வரவு வந்துள்ளது. இந்தப்  பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் வரை  இவன் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் அபு அல் காமா என்பவனைத் தினசரி தொடர்பு கொண்டு இருந்தான்.

2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ந் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே, பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.  2005ம் ஆண்டு மார்ச்சு மாதம் 5ந் தேதி தென்மேற்கு டெல்லியில் நடந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், சேட்டிலைட் தொலைபேசி, முக்கியமான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் டெராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகடாமியின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.   இதே ஆண்டு ஏப்ரல் மாதம் 25ந் தேதி பிரகதி மைதானில் நடந்த என்கௌண்டரில் இரண்டு லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இவர்களிடமிருந்தும் ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்துவிட்டது குறித்துச் சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால், தீவிரவாதத்தில் தன்னிறைவு அடைந்துவிட்டதை யாராலும் மறுக்க முடியாது.

(தொடர்கிறது…)

18 Replies to “மலேகான் முதல் மகாடெல்லி வரை”

 1. ” கராச்சி, ஏப். 3-

  பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் முத்தாகிதா குவாமி லீக் கட்சிக்கும், அவாமி தேசிய கட்சியினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது.

  இக்கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் சிந்து மாகாணத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் தடை செய்யப்பட்ட அமான் கமிட்டியின் தீவிரவாதி சாகிப் பதான் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மீண்டும் கலவரம் ஏற்பட்டது.

  கராச்சியில் உள்ள லியாரி பகுதியில் போலீசார் மீது கலவரக்காரர்கள் கையெறி குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கினர். எனவே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இருந்தும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

  எனவே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஹசன் பலோச், அமன் மக்கள் கமிட்டி உறுப்பினர் அலி ஆகிய 2 பேர் பலியாகினர். 20 பேர் காயம் அடைந்தனர். பலோச் தனது வீட்டின் முன்பு நின்று கலவரத்தை வேடிக்கை பார்த்தபோது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானதாக அறிவிக்கப்பட்டது.”

  இதுபோன்ற வன்முறைகள் என்று மாறும் ? பிறரை கொல்லச்சொல்லும் மதங்கள் தேவையா ?

  கதிரவன்

 2. மலோகன் குண்டுவெடிப்பைக் குறித்து பட்டும் படாமல் எழுதுவது எதிர்காலத்தில் ஹிந்து அமைப்புகளுக்கு எதிராகவே அமையும்.

  இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஹிந்து தீவிரவாதிகளா? எனக்கு தெரியாது. உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஒரு வேளை பா.ஜ.க 2014ல் ஆட்சி அமைத்தால் இந்த விசாரணை என்ன ஆகும் என்பது தெரிய வில்லை.

  ஆனால், ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகி உள்ளது. அபினவ் பாரத் என்ற அமைப்பின் சில தலைவர்களின் தீவிர அடிப்படைவாதத்தை தாங்கள் எதிர்த்ததாகவும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து சிலர் நீக்கப்பட்டதாகவும்
  ஆர்.எஸ்.எஸ்-ன் சில தலைவர்களே கூறியிருக்கின்றனர்.

  மலோகன் குண்டுவெடிப்பை விட்டு விடலாம். காங்கிரஸ் தன் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களுக்கு எதிராக பச்சை அயோக்கியத்தனத்தை செய்யும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

  இந்த அடிப்படைவாத குணாதிசம் கொண்ட சிலர் ஹிந்து அமைப்பில் இருந்தனர். அல்லது இருக்கின்றனர் என்பதை புறம் தள்ளுவது சரியல்ல.

  வரும் பாகங்களில் இந்த அடிப்படைவாத குணாதிசயம் கொண்டவர்களை ஹிந்து மதத்தவர்களே ஆனாலும் நாம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும் என்பதை மறக்காமல் எழுத வேண்டுகிறேன்.

 3. maalegaon – ஐ முறையாக தமிழில் எழுத முடியாது என்பது உண்மை தான், அதற்காக ‘மலோகன்’ என்று எழுதுவது வியப்புக்குரியது. குறைந்த பட்சம் ‘மாலேகாவ்’ என்றாவது குறிப்பிடலாமே!! இது வெறும் எழுத்துப்பிழையா அல்லது அதி தீவிர தமிழ் பற்றா அல்லது மலோகன் என்று நிஜமாகவே ஒரு இடம் உள்ளதா !!

 4. காபூல், ஏப்.4 –

  வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள மாகாணம் ஒன்றில் இன்று மதியம் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பலியாகினார்.மேலும் 26 பேர் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தானிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் லால் முகமது அகமது ஜாய் கூறியதாவது-

  பர்யாப் மாகாணத் தலைநகர் மைமனாவில் மனித வெடிகுண்டு ஒருவன் வெடிகுண்டுகளை கட்டியபடி, மோட்டார் சைக்கிளில் வந்து தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளான். இதில் 4 போலீஸ் அதிகாரிகள், இரு குழந்தைகள், இரண்டு பெண்கள் உள்பட 10 பேர் உடல் சிதறி பலியாயினர். காயமடைந்த 26 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ஏனிந்த தீவிரவாத தாக்குதல்? இதுதான் மதமா? காபிர்களை எல்லாம் கொன்றுவிட்டு , நீங்கள் மட்டும் இந்த உலகத்தில் வாழ முடியுமா? கடவுள் உங்களை முதலில் அழித்துவிடுவார்.

 5. இஸ்லாமாபாத், ஏப். 4-

  பாகிஸ்தானின் வட மேற்கில் கைபர் மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள குர்ராகை கிராமத்தில் இருந்து ஜாம்ரூத் என்ற இடத்துக்கு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் வேன் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.

  இச்சம்பவத்தில் வேனில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

  எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  ஏனிந்த கொடுமைகள் கடவுளே ? இந்த இழிபிறவிகளை ஏன் படைத்தாய்? இவர்களுக்கு ஏனிந்த வக்கர புத்தியை கொடுத்தாய்?

  இந்த பூவுலகில் கடவுள் நம்பிக்கை என்பது தன்னம்பிக்கையை வளர்க்கவும், அன்பையும், கனிவையும் , வளர்க்கவும் உபயோகப்படும் என்று தானே மனித இனம் கடவுள் நம்பிக்கையை உருவாக்கியது?

  பிற மதத்தினரையும் , கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களையும் கொன்றுவிடும்படி ஒரு புத்தகத்தில் எழுதிவைத்து, அதைப்போய் புனித நூல் என்றும், சமாதானத்தையும், அமைதியையும் உருவாக்க வந்த நூல் என்றும் சொல்லி பொய் பிரச்சாரம் செய்யும் அயோக்கிய சிகாமணிகளே ! இதுபோன்ற வன்முறைகளுக்கு உங்கள் மத நூல்களே காரணம் என்பதை இப்போதாவது உணர்வீர்களா?

 6. பிற மதத்தினரையும் , கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களையும் கொன்றுவிடும்படி ஒரு புத்தகத்தில் எழுதிவைத்து, அதைப்போய் புனித நூல் என்றும், சமாதானத்தையும், அமைதியையும் உருவாக்க வந்த நூல் என்றும் சொல்லி பொய் பிரச்சாரம் செய்யும் அயோக்கிய சிகாமணிகளே ! இதுபோன்ற வன்முறைகளுக்கு உங்கள் மத நூல்களே காரணம் என்பதை இப்போதாவது உணர்வீர்களா?

  அத்விகா !!?! மத நூல்களே காரணமா ? அல்லது மதங்களை புறிந்து கொள்ளாத மடையர்கள் காரணமா ? தறசமயம் இந்துக்கள் செய்யும் அனைத்து தவறுகளுக்கும், தங்கள் மதங்களை குற்றம் சொல்ல முடியுமா ? மதங்களை குற்றம் சொல்ல முடியாது. மனிதர்களை மற்றுமே குற்றம் சொல்ல வேண்டும். அவன் என்ன காரணத்துக்காக அவர்களை குண்டு வைத்து கொன்றான் என்று உங்காளல் சொல்ல முடியுமா ?

  ” கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களையும் கொன்றுவிடும்படி ஒரு புத்தகத்தில் எழுதிவைத்து” நீங்கள் ஒரு முறை குர்ஆனை படித்து பாருங்கள் !! புறியும் ….

 7. அத்விகா, தங்களது தகவல்களுக்கு நன்றி.

 8. ஷர்ராஜ்

  எவ்வளோ நாள் தான் இந்த பில்டப்பா குடுப்பீங்க. ஒரு முறை படிச்சு பாருங்க தெரியும்னு. நாங்களும் படிச்சு தான் வெச்சிருக்கான். உங்களோட இஸ்லாத்த ஒழுங்க புரிஞ்சிகிட்டவங்க நாங்க தான்.

  நீங்கள் வெவரம் புரியாமல் பேசுவதிலிருந்தே தெரிகிறது நீங்கள் இன்னும் ஒரு TRUE MUSLIM ஆகவில்லைன்னு. சுவனப்ரியன் போன்றோர் செய்யும் தாவ பனியின் மத்தியில் நீங்கள் இஸ்லாத்தில் ஒரு பாலனை போல இருக்கிறீர்கள்.

 9. “அவன் என்ன காரணத்துக்காக அவர்களை குண்டு வைத்து கொன்றான் என்று உங்காளல் சொல்ல முடியுமா ? ”

  திரு முஹம்மத் ஷாராஜ்

  என்ன சார் இதோட நிருதீடிங்க ?? வழக்கமா சொல்லற மாதிரி அவங்க ஏழை, அவங்கள சமுதாயம் புறக்கநிசிருச்சு ன்னு சொல்லலாமே..

  ஒ மறந்துட்டேன்.. பாகிஸ்தான், ஆப்கான் நாடுல எல்லாம் நீங்க தானே மஜோரிட்டி.. அப்போ இந்த வாதம் எல்லாம் எடுபடாது.. அதான் சாமர்த்தியமா கேள்வி யா மட்டும் கேட்டுட்டு விட்டேன்ங்க..

  அமைதி மார்க்கத்தை பத்தி பல முறை இதே வெப்சைட் இல் விளக்கி எழுதி விட்டார்கள் பலரும்.,. முதலில் ஆதாரம் கேட்க வேண்டியது ,, யாரவது ஆதாரம் குடுத்தால் , உன் translation சேரி இல்லை அரபி யா சரியாய் படி ன்னு சொல்லி தப்பிக வேண்டியது.. இதெல்லாம் பார்த்து பார்த்து எனக்கு போர் அடிச்சிருச்சு..

  ஆனாலும் பொது மக்கள் (இங்கு இருக்கும் ௨௦-30 பேர் தவிர) உங்களை இன்னும் புரிந்து கொண்டது போல் தெரிய வில்லை.. பின்ன ஏன் நீங்க இங்க வந்து டைம் வேஸ்ட் பண்ணுறீங்க.. உங்களை இன்னும் அன்பு மார்க்கம் நு தான் ஊர் நம்பிக்கிட்டிருக்கு.. என்ஜாய் பண்ணுங்க …

 10. Mohamed sharraj ” நீங்கள் ஒரு முறை குர்ஆனை படித்து பாருங்கள் !! புறியும் ….”

  நாங்கள் பல முறை பல மத நூல்களையும் படித்துவிட்டோம் நண்பரே.

  “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே தமிழ் இந்துக்களின் அடிப்படைக்கொள்கை.

  இந்து மதம் என்பது பல பிரிவுகள் அடங்கிய ஒரு ஆல மரம் போன்றது. இறைவன் ஒருவனே என்ற உண்மையை இந்துக்களே முதன் முதலில் மனித இனத்துக்கு அறிவித்தனர் . இறைவன் என்று ஒருவன் இல்லை என்ற உண்மையையும் உலகிற்கு அறிவித்த சார்வாகமும் இந்து மதத்தின் ஒரு பகுதி தான். பல வித நம்பிக்கைகளும் எங்கள் மதத்தில் மதிக்கப்படுகின்றன. அவரவர் வழி அவர்களுக்கு. ஒன்று மற்றதை விட உயர்வானது அல்ல. ஆனால் ஒரே வழி எல்லோருக்கும் ஏற்றது அல்ல.

  எங்களுக்கு எவனும் மதத்தலைவன் அல்ல. ஒவ்வொருவனும் ஒரு மத தலைவனே. குப்பனும், சுப்பனும் எங்கள் மதத்துக்கு புதிய புனித நூல்களை படைக்க முடியும். எவனோ எழுதி வைத்ததை , அது மட்டுமே புனித நூல், மற்றவை எல்லாம் புனிதம் அல்ல என்று நாங்கள் கூற மாட்டோம்.

  ஆணும் பெண்ணும் அகிலம் முழுவதும் சமமே என்பது எங்கள் கொள்கை. ஆனால் சில ஆபிரகாமிய மதங்களில் அப்படி இல்லை. பெண்ணை அடிமையாக்கி , குதிரைக்கு முகபடாம் இடுவது போல, மகளிரை கேவலப்படுத்தி , முகத்திரை கட்டாயமாக அணிவித்து, இறை வழிபாட்டு தலங்களில் , பெண்களை அனுமதிக்காமல் , ஆண்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள். இதைவிட என்ன களவாணித்தனம் இருக்க முடியும். பெண்களை கேவலப்படுத்துவது இல்லாமல் வேறு என்ன ?

  எங்கும் நிறைந்தவன் கடவுள் என்பதும் எங்கள் கொள்கையே. ஆனால் ஆபிரகாமிய மதங்களில் எங்கேயோ இருப்பதாக சொல்லப்படும் சொர்க்கத்தில் அந்த கடவுள் இருக்கிறார் எனவும், அவரை நாம் தான் நாடி செல்லவேண்டும் என்றும் சொல்கிறார்கள். உருவங்களுக்குள் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். எங்கும் இருப்பவன் உருவங்களுக்குள் மட்டும் எப்படி இல்லாமல் இருக்க முடியும்?

  நீங்கள் வழிபடும் அதே கடவுளைத்தான் நாங்களும் வழிபடுகிறோம். உங்களுக்கு எல்லைகள் உண்டு.கடவுளுக்கும் , எங்களுக்கும் எல்லைகள் இல்லை. இதுவே வேறுபாடு.உணவிலும், உடையிலும் வசிக்கும் இடங்களிலும், உலகம் தோன்றிய நாள் முதலாக, உலகம் முழுவதும் பல வேறுபாடுகள் இருந்து வருகிறது .அதுபோல இறை வழிபாட்டு முறைகளிலும் உலகம் உள்ளவரை வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அனைவரும் ஒரே வகை உணவும், ஒரே வகை உடையும், ஒரே வகை இறைமறுப்பும், அல்லது ஒரே வகை இறைவழிபாடும் எந்த நாளிலும் சாப்பிட/ அணிய /செய்ய மாட்டார்கள்.

  அப்படி யாராவது நினைத்தால், அவர்கள் வாலறுந்த நரி கதைபோலத்தான்.

 11. அத்விகா

  //நீங்கள் வழிபடும் அதே கடவுளைத்தான் நாங்களும் வழிபடுகிறோம்//
  என்னது நீங்கள் முகமது நபியை வழிபடுகிறீர்களா ?

  நீங்கள் இன்னும் அல்லாவையும், நபியையும் புரிஞ்சுக்கவே இல்லை.

 12. “நீங்கள் வழிபடும் அதே கடவுளைத்தான் நாங்களும் வழிபடுகிறோம். என்னது நீங்கள் முகமது நபியை வழிபடுகிறீர்களா ? ”

  அன்புள்ள Sarang,

  இறைவன் ஒருவனே. அவனே ஆணும், அவனே பெண்ணும், அவனே அலியும் ஆகிறான். திருப்பதி மலைக்கு ஏழுமலை என்கிறோம். அங்கு பார்த்தால் வனத்துறை கட்டுப்பாட்டில் பல இடங்களில் “வன வெங்கடேஸ்வருலு ” என எழுதிய போர்டுகளை வைத்துள்ளனர். நம் முன்னோர்கள் தந்துள்ள அற்புதமான முறைகள் தான் இதற்கு காரணம். ஆறு, கடல், மலை, காடுகள், மரம், செடி, கொடி, காற்று( வாயு), ஆகாயம்( space ), நெருப்பு என்று இறைவனே பஞ்ச பூதங்களாக உள்ளான் என்பதே உண்மை.

  ஆம், நாம் வணங்கும் அதே கடவுளைத்தான் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும், பிற எல்லா மதத்தினரும் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்கள் மிகவும் குறுகிய எல்லைகளுக்குள் தங்கள் மதத்துக்கு என்று ஒரு புத்தகத்தை மட்டும் புனித புத்தகம் என்று முத்திரை குத்தி , பெண்ணடிமைக்கும் வழிவகுத்து , இவர்தான் கடைசி தூதர் என்று சொல்லி, அவ்வாறு சொல்லுவதன் மூலம் கடவுளால் இனிமேல் தூதர்களை அனுப்பமுடியாது என்று மறைமுகமாக சொல்லி, கடவுளின் எல்லைஅற்ற சக்தியை குறுக்கி, கடவுளை கேவலப்படுத்துகிறார்கள்.

  உருவத்தின் மூலம் வழிபாடுகள் செய்வதே மிக சிறந்தது ஆகும். அருவ வழிபாடு என்பது கோடியில் ஒருவருக்குத்தான் சரிப்பட்டுவரும். அதனாலேயே, ” உருவாய், அருவாய், உளதாய், இலதாய்,” என்றனர் நம் நாட்டு புனிதர்கள்.

  ஆபிரகாமிய மத நூல்களில் உள்ள , நாத்திகர்கள் மற்றும் பிற மதத்தினர் மீதான வெறுப்பு மற்றும் துவேஷம் ஆகியவற்றை, படித்தால் யாரும் அந்த மதங்களை பின்பற்ற மாட்டார்கள். அந்த மதங்களை பின்பற்றுவோர் அந்த மதங்களை விட்டு ஓடிவிடுவார்கள்.

  ஆபிரகாமிய மதங்கள் முரண்பாடுகளின் மொத்த உருவங்கள். அவை உலகத்தில் இருக்கும் வரை, வன்முறையும், அமைதியின்மையும் , உலகம் முழுவதும் தலைவிரித்தாடும்.

 13. அத்விகா

  //ஆம், நாம் வணங்கும் அதே கடவுளைத்தான் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும், பிற எல்லா மதத்தினரும் வழிபடுகிறார்கள்.//

  ஆஹா போச்சே இஸ்லாமியர்கள் செய்யும் தாவ பனி ஜெயிச்சிருச்சே. நீங்கள் ஒரு முறை குரானை வாசித்து பாருங்கள் (முமீன் மாதிரியே பேசுரான்யா சாரங்கு) உங்களுக்கு விளங்கும். இஸ்லாமியர்கள் உண்மையில் கும்பிடுவது சல்லால்ஹி முஹம்மது பின் அப்தல்லா என்கிற நபியை தான். நபி தான் அல்லா, அல்லாதான் நபி. முமீங்கலேல்லாம் ஏன் தாடி வெச்சிருக்காங்க அல்லா தாடி வெச்சிருக்கார் அதனாலயா. இல்ல நபி இரண்டு மீட்டர் தாடி வேச்சிருந்தார்ந்னு அளவு பாத்து வெச்சிருக்காங்க. காலை அகட்டி வெச்சு தொழுதல். எந்த பக்கம் எச்சி துப்புதல், இப்படி நபி வழி நடக்கும் இமான்தாரிகளை பார்த்தா கடவுளை வணங்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள். இதை ஒரு இமான்தாரி இஸ்லாமியனும் ஒப்புக் கொள்ள மாட்டான். எதுக்கும் கொஞ்சம் ஜாக்கரதையா இருந்துக்கோங்க.

  இன்ஷா அல்லா நீங்கள் குரானை நன்கு விளங்கி கொள்வீர்கள். இஸ்லாம் மதமல்ல அது அன்பு நெஞ்சமான நபி மார்க்கம்.

  //
  உருவத்தின் மூலம் வழிபாடுகள் செய்வதே மிக சிறந்தது ஆகும். அருவ வழிபாடு என்பது கோடியில் ஒருவருக்குத்தான் சரிப்பட்டுவரும். அதனாலேயே, ” உருவாய், அருவாய், உளதாய், இலதாய்,” என்றனர் நம் நாட்டு புனிதர்கள்.
  ///

  பாத்தீர்களா பார்த்தீர்களா கடவுளுக்கு உருவம் கிடையாது முச்லீம்கலேல்லாம் அமூர்த்தி ரூபத்தை வழிபடுகிறார்கள் என்று எவ்வளவு தவறாக இஸ்லாத்தை புரிந்து வைத்துள்ளீர்கள். அல்லள நிகரற்றவன், மேலும் அவனுக்கு நன்கு அறிந்தவன் அவன் அர்ஷ் என்ற சிம்மாசனத்தின் மீது அமர்ந்திருக்கிறான் என்று குரானில் நபிகள் சொல்கிறாரே. உருவம் இல்லாத அல்லா எப்படி ஒக்காந்திருப்பார் என்று ஒரு மும்மீன் உங்களை பார்த்து கேட்க மாட்டானா.

  //
  ஆபிரகாமிய மத நூல்களில் உள்ள , நாத்திகர்கள் மற்றும் பிற மதத்தினர் மீதான வெறுப்பு மற்றும் துவேஷம் ஆகியவற்றை, படித்தால் யாரும் அந்த மதங்களை பின்பற்ற மாட்டார்கள்
  //

  பார்தீர்கள பார்தீர்கள நீங்கள் முமீன்களை படிப்பறிவில்லாதவர்கள் என்றா நினைக்கிறீர்கள். குரானை விளங்கிக் கொள்ளாமலா மும்மீனாக இருக்கிறார்கள்.
  இஸ்லாம் தான் இன்று உலகவில் அதிகமாக வளரும் மதம் அல்ல மார்க்கம் என்று மும்மீன் உங்களை பார்த்து கேட்டல் என்ன பதில் சொல்வீர்கள். அல்லா அடிக்கடி கேட்கிறானே சிந்திக்க மாட்டீர்களா என்று. ஏன் சிந்திக்க மாட்டேங்கறோம்?

 14. sarang- இஸ்லாம் தான் இன்று உலகவில் அதிகமாக வளரும் மதம் அல்ல மார்க்கம் என்று மும்மீன் உங்களை பார்த்து கேட்டல் என்ன பதில் சொல்வீர்கள். அல்லா அடிக்கடி கேட்கிறானே சிந்திக்க மாட்டீர்களா என்று. ஏன் சிந்திக்க மாட்டேங்கறோம்?

  sarang, நாங்கள் எல்லாம் ஒரு சிறு துளி சிந்ததித்தலால் தான் தொடர்ந்தும் ஹிந்துவாக இருக்கிறோம்.அதி உன்னதமான எமது வழி முறைகளைபின்பற்றுகிறோம்.எமது பெண்களுக்கு முகத்திரையிட்டு பெண் அடிமையாக்கி கொடுமை செய்யவில்லை.

 15. காபூல், ஏப்.10-
  ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், அப்பகுதியிலுள்ள அரசாங்க அலுவலகம் அருகே கார் குண்டை வெடிக்கச் செய்து திடீர் தாக்குதல் நடத்தினான்.

  இதில் புலனாய்வு பிரிவு அதிகாரி, 2 போலீஸ்காரர்கள் மற்றும் 8 அப்பாவி பொதுமக்கள் என 11 பேர் பலியானார்கள். இதே போன்று ஹெல்மண்ட் மாகாணத்தில் கவர்னர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த 3 தற்கொலை தீவிரவாதிகள் முயன்றனர்.

  இவர்களில் 2 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இருப்பினும் ஒருவன் தப்பி ஓடி குண்டை வெடிக்க செய்தான். இதில் 8 போலீசார் பலியானார்கள். ஒரே நாளில் நடந்த இந்த 2 சம்பவங்களில் மொத்தம் 19 பேர் உயிர் இழந்தனர்.

  ஏனிந்த வன்முறை? மனித உயிர்களுக்கு மதிப்பில்லையா?

 16. Sarang-ஜீ,

  நீங்கள் நகைச்சுவையாக எழுதும் போது உற்சாகம் துள்ளி விளையாடுகிறது. பல தகவல்கள் தானாக வந்து விழுகின்றன. மிகச் சிறப்பாக இருக்கிறது தங்களின் மறுமொழிகள்.

  நீங்கள் ஏன் இவ்வகையான ஒரு தொடர் எழுதக்கூடாது?

 17. ” Sarang-ஜீ,

  நீங்கள் நகைச்சுவையாக எழுதும் போது உற்சாகம் துள்ளி விளையாடுகிறது. பல தகவல்கள் தானாக வந்து விழுகின்றன. மிகச் சிறப்பாக இருக்கிறது தங்களின் மறுமொழிகள்.

  நீங்கள் ஏன் இவ்வகையான ஒரு தொடர் எழுதக்கூடாது?


  நிச்சயமாக அந்த தொடரை நான் படிப்பேன்.. அன்பு மார்க்கத்தை பற்றி ஜைனுலபுடீன், அப்துல் ஹமீது (டாக்டர்) , போன்றவர்கள் சொல்லி கேட்பதை விட சாரங் அவர்களின் வார்த்தைகளை கேட்பது நன்றாக இருக்கும்.. நபி (அவர் மீது ஏதாவது உண்டாகட்டும் ) மொழி கேட்போம் .. விதி வழி போவோம்.. சொர்க்கத்தில் இப்பொழுதே ஒரு இடத்தை reserve பண்ணுவோம்..

 18. ஆதி தொட்டு இன்று வரை அநேகமாக இதன் பின்பும் போர்களும் கொள்கை ரீதியாக வெளிமுரண்பாடுகளும் உள்முரண்பாடுகளும் தொடர்ந்த வண்ணமே
  உள்ளன, இவைகளுக்கு மதங்கள் காரணம் அல்ல, மனிதனின் உள்ளத்தில் இருக்கும் குரோதமே காரணம். ஒரு தனி மனிதனோ குழுவோ பாதிக்கப்படும் பொழுது
  அந்த தாக்கத்தின் இருந்து மீள அவர்கள் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டி உள்ளது,அப்போது அவர்கள் அவர்களின் மத்தியில் உள்ள பொது காரணங்களில் பெரியதை தேர்ந்தெடுப்பது இயல்பு. இது உலகில் யாராய் இருந்தாலும் சரியே.உலகில் முஸ்லிம்கள் மட்டும் அல்ல எல்லா மக்களும்
  நியாயதிற்காகவோ அநியாயற்காகவோ போராடுகிறார்கள். அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப அணுவளவும் பிசகாமல் கூலி வழங்கப்படும் முஸ்லிம் பிழை
  செய்தாலும் சரியே. இன்னும் அவ்வேளை வரவில்லை,அது வரை எமது அறிவை கொண்டு மட்டுமே செயல்பட முடியும். சுருங்கக்கூறின் கத்தியால்
  கொலை நடக்குது என்பதற்காக கத்தியே தவறு என்றால் வெங்காயம் எப்படி நறுக்குவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *