தெரேசா ஏழைகளின் பாதுகாவலர் என்ற ஒரு பிம்பம் பரப்பப் பட்டாலும் அவர் பல நேரங்களில் பணக்காரர்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தான் காணப்பட்டார். அவர் ஏன் கல்கத்தாவை தனது சேவைசெய்யும் இடமாக தேர்தெடுத்தார் என்றால் இங்கே தான் ஜனதொகையும் ஏழ்மையும் அதிகம். இது தன் ” மிஷினரி ஆப் சாரிடி” நிறுவனத்தை வலுபடுத்த ஏழ்மையை பறைசாற்றி உலக கிருஸ்துவ பணக்காரர்களிடமிருந்து நன்கொடை பெற முடியும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தோடு அல்லாமல் இங்கே உள்ள அரைகுறை அரசியல்வாதிகள் அறிஞர்கள் பத்திரிகையாளர்கள் தன்தொண்டு நிறுவனத்தை குறை சொல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையால். ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கொடிய தொற்றுநோய் உள்ளவர்களிடமும் பொது மக்கள் பார்வையில் பரிவுகாட்டினார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்த பாவனைதான் தொழிலின் மூலதனம் என்பது பலருக்கு தெரியாது..
View More மதர் தெரசா: ஒரு பார்வை