போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்

நாம் வாழும் வடஇலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் தொட்டு, கிட்டத்தட்ட 2000ஆம் ஆண்டு வரை மின்சாரமற்ற வாழ்வு நிலை கொண்டிருந்தது. விமானக்குண்டு வீச்சுக்களே இதற்கு முக்கிய காரணமாயின. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக இக்காலத்தில் செயலிழந்திருந்தன. நாங்கள் வாழ்ந்த வடபுலத்திற்கும் பிற பகுதிகளுக்குமான தரைவழிப்போக்குவரத்தும் இல்லாதிருந்தது. திடீரென்று நவீன உலகத்திலிருந்து ஆதிகாலம் போன்ற ஒரு உலகத்திற்கு தள்ளப்பட்டோம். ஆனால், என்ன அதிசயம் என்றால் இக்காலத்தில் மனிதவிழுமியங்கள் இப்போது நம் ஊர்களில் இருப்பதைக் காட்டிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்ததாக சொல்கிறார்கள்… உணவு, உடை போன்ற யாவற்றுக்கும் கப்பலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை வேறு இருந்தது. கப்பல் வரா விடின் விலை கிடு கிடு என அதிகரிக்கும். பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்… இன்றைக்கு சென்னை மக்களின் அவலத்தை போக்க இயன்ற உதவிகளை, இதே போன்ற அவலத்தை அனுபவித்த இலங்கையை சேர்ந்த வசதிபடைத்த புலம்பெயர் மக்களும் பிறரும் இயன்ற அளவு செய்ய முன்வருவது சிறப்பானதாகும்….

View More போர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்