சமீபத்தில், இதே இரகத்தை சேர்ந்த ஒருவரை, “ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதைப்போல் இயேசுவை சொல்லிப் பாரும். உங்களைக் கூலிப்படையாக நடத்தும் வெள்ளைக்காரன் செவுளில் ஒன்று விடுவான்” என்று சவால் விட்டேன். எதிர்பார்த்தவிதமே கௌபீனத்தில் கக்கா போய்விட்டார்… பசுவதை இன்றி பால் அருந்த வழி இருக்கிறது. ஆனால், பசுவதை இன்றி மாட்டிறைச்சி அருந்த வழி இல்லை. இரண்டையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் மட்டுமில்லை. அயோக்கியத்தனமும் கூட. பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டால் “போஷிக்க விவசாயியால் முடியாது. எனவே சந்தையில் அடிமாடாக விற்க வேண்டி வருகிறது” என்பதும் கள்ளவாதம். பிஷ்ணோய் மக்களால் போஷிக்க முடியுமெனில் மற்றவர்களாலும் முடியும். பேராசை கொண்டவனால் முடியாது…
View More பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்Tag: இந்துமத உணர்வைப் புண்படுத்தல்
சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினை
பழ.கருப்பையாவின் அரசியல் அழுத்தங்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே. ஆனால் இந்தக் கட்டுரையில் சம்பந்தமே இல்லாமல் இந்துமதத்தையும், சிவலிங்க வழிபாட்டையும், ஆதி சங்கரரையும், வேதாந்தத்தையும், விவேகானந்தரையும் மிகக் கீழ்த்தரமாக அவதூறு செய்திருக்கிறார். அதனாலேயே இந்த எதிர்வினை… வேத இலக்கியத்தில் ஆண்குறியைக் குறிப்பதற்காக வரும் சிஷ்ணா (शिष्ण – shiSHNaa) என்ற சொல்லையும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, குழந்தை என்ற பொருள் கொண்ட சிசு (शिशु – shishu) என்ற சொல்லையும் குழப்பியடிக்கிறார் இந்த பிரகஸ்பதி… பன்னிரு சைவத் திருமுறைகளிலும் ஆயிரக் கணக்கான இடங்களில் நான்மறைகளும், வேள்விகளும் மீண்டும் மீண்டும் போற்றப் பட்டுள்ளன என்பதை உண்மையான தமிழ்ச் சைவர்கள் உணர்வார்கள். சைவ சமயக் குரவர்கள் போற்றிய மகத்தான மரபை, வெறும் சல்லிக்காசு அரசியல் லாபத்திற்காக அவதூறு செய்யும் பழ.கருப்பையா போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை உணருங்கள்…
View More சிவலிங்கம் இந்துமதம் இன்னபிற: பழ.கருப்பையாவுக்கு ஒரு எதிர்வினைமாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்
நாவல் எழுதி நஞ்சு விதைத்து ஊர் உலகம் முழுக்க பரவி அம்மக்களை வதைத்து குற்றவாளிகளாகவும், காட்டு மிராண்டிகளாகவும் சித்தரித்து கூனி குறுகி இருக்க செய்தார்கள். இந்த அப்பாவி ஊர் மக்களின் கருத்தைக் கேட்க எந்த ஊடகத்திற்கும் காதுகளோ, கண்களோ, புலன்களோ ஒப்பவில்லை…. பொதுவாக கடினமான உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் தெய்வ பக்திக்கும் பேர் போனவர்கள் கொங்கு பகுதி மக்கள். ஆற்றாது அழுத மக்களின் கண்ணீரை ஆற்ற இறைவன் ஒரு வழி செய்து கொடுத்திருக்கிறான். அது தான் ” ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற இயக்கம். இந்த இயக்கத்தின் மூலமாக திருச்செங்கோட்டின் தேர் திருவிழாவின் 96 மண்டகப்படி அறக்கட்டளை உள்ள சமூகங்களையும் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைத்து இந்த ஆண்டு முதல் திருச்செங்கோட்டு தேர் திருவிழாவை உலகே திரும்பி பார்க்கும் ஒரு சமூக ஒருங்கிணைப்பு, ஒற்றுமை விழாவாக நடத்தலாம் என்று கூடிப் பேசி முடிவு எடுத்திருக்கிறார்கள்….
View More மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..
மாதொரு பாகன் நாவல் புத்தக எரிப்புக்கு கடும் கண்டனங்கள். எந்தப் புத்தகத்தையும் எரிப்பதோ, தடை செய்யக் கோருவதோ ஜனநாயக விரோதமான வழிமுறைகள்… தனிப்பட்ட அளவில், அந்த நாவலில் இந்து மத விரோதமாகவோ அவதூறாகவோ எதுவும் இல்லை என்பதே எனது கருத்து. ஆனால் சாதாரண திருச்செங்கோட்டுக் காரர்கள், அந்தக் கோயில் மீதும் தங்கள் சாதி சனங்களின் மரபுகளின் மீதும் தீவிர பிடிப்புள்ள சராசரியான மக்கள், இந்த நாவலை எதேச்சையாக வாசிக்க நேர்ந்தால், இத்தகைய கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்கள் சமூகத்தையும் கலாசாரத்தையும் நாவல் அவதூறு செய்கிறது, அசிங்கப் படுத்துகிறது என்று தான் கருதுவார்கள். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது… சராசரிகளின் முதிர்ச்சியின்மை அறியாமையால் வருவது. ஆனால், அறிவுக் கயவர்களின் திரிபுவாதம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டு பரப்பப் படுவது…
View More மாதொரு பாகன் புத்தக சர்ச்சை குறித்து..மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]
The strength of a chain is determined by its weakest link. நாங்கள் கமல் அண்ட் கோவின் மிகவும் பலவீனமான பகுதி எது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம்… மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது… அரக்கர்களுடன் மோதுவது வெட்டி வேலை, கிளியைக் கொல்வதுதான் ஒரே வழி.
View More மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]