வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம் – நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்; வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்; மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்; அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்; மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு….

View More வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

வலம்: புதிய மாத இதழ்

இந்த வருட விஜயதசமி (அக்-11) அன்று முதல் இதழ் வெளிவருகிறது. வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கும். சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்கும். இதழின் பொறுப்பாசிரியர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா. 80 பக்கங்களுடன் கருப்பு -வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவரும். இந்த இதழுக்குத் தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறோம். ஆன்லைன், டிடி/செக் அல்லது வங்கிக்கணக்கு மூலம் இதழுக்கான சந்தாவை செலுத்தலாம்…

View More வலம்: புதிய மாத இதழ்