மனதுக்குப் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள தனி நபராக ஒருவருக்கு உரிமை இருப்பதுபோலவே அவர் சார்ந்த சமூகத்துக்கு விசுவாசமானவராக இருக்கவேண்டிய பொறுப்பும் இருக்கிறது. மனிதர் முழுக்கவும் தனி நபர் அல்ல. முழுக்கவும் சமூகக் குழுவைச் சார்ந்துஇருக்கவேண்டியவரும் அல்ல. இரண்டுக்கும் இடையில் சம நிலை இருக்கவேண்டும்… தம்மைவிட உயர்ந்த ஜாதியாகக் கருதுபவர்களின் பெண்ணைத் திருமணம் செய்வது ஜாதியை ஒழிக்கும் வழி என்று சொல்பவர்கள் அனைவருமே, தம்மைவிடத் தாழ்வாகக் கருதும் ஜாதியைச்சேர்ந்த பையனுக்கு தன் ஜாதியில் இருந்து பெண்களைத் திருமணம் செய்துவைத்துக் காட்டவேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்கும்வரை நாடகக் காதல் என்ற விமர்சனம் இருந்துகொண்டே இருக்கும்….
View More புதிய பொற்காலத்தை நோக்கி – 19Tag: இந்து திருமணச் சட்டம்
வேதங்களில் விதவை மறுமணம்
உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.. இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக’ என்று வாழ்த்துகிறது ஒரு சுலோகம். பெண்களுக்கு கணவனின் சொத்தில் பங்கு அவன் இறந்த பிறகும் உண்டு என்கிறது ரிக் வேதம். இதைத் தான் உச்ச நீதிமன்றம் 1995 இல் குறிப்பிட்டு சட்டத்திருத்தத்தை அங்கீகரித்தது.. சதி என்பது ஹிந்து மதத்தின் கருத்து அல்ல. அது செமிட்டிக் மதங்களின் கருத்து. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது. அது பெண்களுக்கு கட்டாயம் அல்ல. காதல் கணவனை பிரிந்த பெண்கள் பிரிவின் துயரம் தாளாமல் அதை செய்தார்கள்…
View More வேதங்களில் விதவை மறுமணம்