எப்போதும் விரிந்து விரிந்து பெருகும் – ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும் – பறந்து பறந்து சிகரம் தேடும் – அனுபவப் பகிர்வழகே இலக்கிய சுகம், இலக்கிய ஞானம். இதற்கு ஹைக்கூவும் உதவும், காவியமும் உதவும். சிறு கதையும் உதவும், பெரு நாவலும் உதவும். நாடகமும் உதவும், திரையுலகும் உதவும்… புலனுகர்வுகள் – உணர்ச்சிகள்-கருத்துகள் – கற்பனைகள் என்பவற்றைக் கருவியாகக் கொண்டு அவற்றையே தாண்டி ஓர் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்… மேலைக் காற்று இலக்கியத் திறனாய்வுக்கு வேண்டாம் என்பதல்ல நோக்கம். சுய பார்வைகளையும் , சுதேசிப் பார்வைகளையும் இழந்து – அபத்தப் பார்வைகளையும் அலக்கியப் பார்வைகளையும் வளரவிட வேண்டாம் என்பதுவே நோக்கம்….
View More ஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணிTag: இலக்கிய அமைப்புகள்
ஒரு நிஷ்காம கர்மி
உயர்ந்த மனிதர். சுமார் ஆறரை அடி உயரம். சற்று நீண்டு தொங்கும் தாடி. அப்போது இன்னம் நரை தோன்றாத காலம். மேஜையில் இருக்கும் விளக்கொளியில் குனிந்து படிக்கும் காட்சி நன்றாக இருக்கும். ஒருவாறாக, உ.வே. சாமிநாத ஐயர் ஒரு நூற்றாண்டுக்கு முன் சின்ன சிமினி விளக்கொளியில கும்பகோணம் பக்த புரி அக்ரஹாரத்துத் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சாயலை அபிஜீத் ஐந்துக்குப் பத்து காபினில் மின்சார விளக்கொளியில் உட்கார்ந்திருக்கப் பார்ப்பதாகத் தோற்றம் தரும். ஒரு சின்ன மாற்றம். அபிஜீத் கையில் ஒரு கணேஷ் பீடி மேஜையில் ஒரு டீ கப். அதிகப் படியாகக் காட்சி தரும். இல்லையெனில் இளம் வயது தாகூர் தான்…. யமுனை நதியைக் கடந்தால் பட்பட் கஞ்சில் வீடு. தந்தை விட்டுப் போன லைப்ரரி. அது மட்டுமல்ல. புத்தகங்களோடும் சிந்தனை உலகோடும். கலைப் பிரக்ஞையொடும் வாழ்வதில் தான் அர்த்தம் உண்டு என்று நினைக்கும் கலாசாரம்….
View More ஒரு நிஷ்காம கர்மி