நொண்டியடித்து வந்த யாழினி கண்ணைத் திறந்து பார்க்கிறாள்… சில்லில் அவள் காலை ஊன்றும் நேரம் பார்த்து எங்கிருந்தோ வந்த ஷெல், மிகச் சரியாக சில்லின் மேல் விழுந்து வெடித்துச் சிதறுகிறது. யாழினி தூக்கி எறியப்படுகிறாள். தனியாக தெறித்து விழுந்த கால் விலுக் விலுக் என்று துடிக்கிறது. அந்த ஒற்றைக் காலில் இருந்த கொலுசும் ‘ஜல் ஜல்’ எனத் துடித்து அடங்குகிறது….. என் சட்டைல இருந்த வண்ணத்துபூச்சிங்களோட எல்லா நிறமும் அழிஞ்சிபோய் ஒரே சிவப்பு நிறமா ஆகிப் போச்சு. அப்படியே செத்துப் போய் இங்க வந்துட்டேன் என்று சொல்லி அந்த பாப்பா சிரிக்கிறது. அந்த வீட்டுப் பெண் உள்ளே போய் ஒரு குவளையில் நீர் கொண்டு வருகிறார். வந்து பார்க்கையில் நீர் கேட்ட குழந்தையைக் காணவில்லை…. அம்மா, விட்டு வந்த உறவுகள் பற்றியும் நட்டு வைத்த மரங்கள் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார். மடியில் விளையாடிக் கொண்டிருந்த என் கண்ணில், கழுத்தில் கட்டியிருந்த சயனைட் குப்பி பட்டது. பற்கள் துறுதுறுத்தன. எம்பி எம்பிப் பிடிக்க முயன்றேன். முடியவில்லை. அமைதியான தேசத்தில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சராசரியாக 60-70 வருட இடைவெளி இருக்கும். நான் அந்த இடைவெளியை ஒரே நொடியில் கடந்தேன்….
View More விதியே விதியே… [நாடகம்] – 1Tag: இலங்கை மனித உரிமை மீறல்கள்
இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?
2009 ஏப்ரல், மே மாதங்களில் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் போது ஏதோ வேற்றுக் கிரகத்தில் நடப்பது போல வேடிக்கை பார்த்திருந்த அதே தமிழகம், இப்போது குதித்துக் கொந்தளிக்கிறது…. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து எங்காவது ஒரு வார்த்தை இருக்கிறதா? அல்லது, இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்த கண்டனங்கள் எதாவது இருக்கின்றனவா? இந்த அதிமேதாவித் தனமான தீர்மானத்தை ஆதரிக்கத் தான் இரண்டு வாரம் யோசித்தது நமது மத்திய அரசு. இந்தத் தீர்மானத்தால் புளகாங்கிதம் அடைத்து தான் நமது மாணவர்கள் தங்கள் படிப்பைத் துச்சமெனத் துறந்து தெருவில் இறங்கினார்கள். இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?….. இந்தியாவின் இறையாண்மையை உலக அரங்கில் உயர்த்தும் நோக்கத்துடனும், இந்திய வம்சாவழியினரின் நலனுக்காகப் பாடுபடும் திண்மையுடனும் மத்தியில் எப்போது நல்லரசு உருவாகும்? அப்போது தான் நமது சகோதரர்களின் சோகம் தீரும்….
View More இலங்கை: என்று தீரும் எம் சகோதரர்களின் சோகம்?இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்
இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இவை அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது…. இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால், தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போனதாக மாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? தேவையான அளவு கிளர்ச்சி எழுப்பப் பட்டவுடன் பந்தை அமெரிக்கா இந்தியா மீது திணிக்கிறது. இப்பொழுது ராஜபக்சேவைப் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பால் திருப்பப் படுகிறது. இந்தியா அதைக் கட்டாயம் செய்ய முடியாது. அப்படிச் செய்யாத பொழுது தனித் தமிழ் நாடு கோரிக்கையை மேலும் வலுப் படுத்தலாம். இப்படி ஒரு திட்டம் இதன் பின்னே இருக்கக் கூடுமோ என்றும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது….
View More இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்