நமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது. இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து இஸ்லாமிய போதகர்களால் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய முஸ்லீம்கள் இத்தகைய பொய்களை நம்புகின்றனர்… நபியின் காலம் பொற்காலம் என்றும் அதைநோக்கி இஸ்லாம் திரும்பவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு ஜிகாதி தீவிரவாதம்தான் இஸ்லாத்தின் உண்மை முகம் என்பது புரிபடவில்லை…
View More ஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்