“அமைதி ஓர் ஆயுதம் ஷிவானி. ஆயுதம்னா தாக்குறதுக்கு மட்டுமில்லை, தற்காப்புக்கு வச்சிருக்கிறதும்தான். எந்த ஆயுதமும் இல்லாத நிலையிலும் உன் மன அமைதி, தெளிவுதான் உன்ன மனுஷனா வச்சிருக்கு. அமைதியா இருக்கும் வரை உனது கட்டுப்பாடு உன் வசம். உன் மன அமைதியை நான் குலைச்சேன்னா உன்னால் தெளிவாக சிந்திக்க முடியாது. உள்ளிருக்கும் மிருகம் வெளிவரும்”… தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களனை எடுத்துக்கொண்டு அதை நாம் விரும்பி வாசிக்கும் வகையில் சுதாகர் கஸ்தூரி இந்தக் கதையைச் சொல்லி இருக்கும் விதம் அருமை…இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறைகள் எப்படி பல துறைகளுடன் ஒன்றினைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன என்பதும், துப்பாக்கிகள், ஓநாய்கள், மருந்துகள், மனதினைப் படிக்கும் கருவிகளைக் குறித்த தகவல்களும், வான மண்டலம் குறித்த தகவல்களும், நிறைந்திருந்தாலும், அதை நமக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதில் நிச்சயம் வென்றிருக்கிறார்…
View More “7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வைTag: உளவியல் கருவி
விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்
மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும்… விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்படட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்…
View More விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்