தனிமனித வாழ்வில் அடிப்படை ஒழுக்கத்தை நம்பிக்கைத்தன்மையைப் பேண முடியாத ஒரு நபரினால் எப்படி நாட்டை ஒழுங்காக ஆள முடியும் என்ற இயல்பான கேள்வியைத் தாண்டி, அவரது பிற நேர்மையற்ற குணங்களைக் காணலாம்… கமலஹாசன் இந்தத் தேர்தலில் தனி விமானங்களையும் ஹெலிக்காப்டர்களையும் பயன் படுத்தி வருகிறார். இதற்கான நிதி இவ்வளவு பெரிய செலவுகளுக்கான கணக்கை அவர் காட்டுவாரா? கணக்குக் கேட்டால் மிரட்டுகிறார்… தமிழில் ஒரு மதன் ரவிச்சந்திரன், ஒரு மாரிதாஸ், ஒரு அண்ணாமலையுடன் இவரால் ஐந்து நிமிடங்களாவது விவாதிக்கும் திறன், அறிவு இவருக்கு கிடையாது…
View More கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 2Tag: ஊழலற்ற நிர்வாகம்
ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?
பத்திர பதிவு என போனால் அரசு காசு வாங்கிக்கொண்டு இன்னாருக்கும் இன்னாருக்கும் இடையே ஒரு பதிவு நடந்தது என்று மட்டும் தான் எழுதும். அதுவும் பொதுவான அல்லது இணைக்கப்பட்ட பதிவு ஆவணம் என ஒன்று இருக்காது. யாரேனும் ஆக்கிரமித்தால் கோர்ட்டுக்கு ஒரு 100 வருசம் நடக்கவேண்டும். இந்தியாவிலே 60 சதம் வழக்குகள் நிலத்தகராறு வழக்குகள் தான். இதனால் என்ன நடக்கிறது? புற்றீசல் போல இஷ்டத்துக்கும் எலிவளை, புறாக்கூண்டு போல ஆங்காங்கே கட்டிடம் கட்டிக்கொண்டே போகிறார்கள்…எல்லாவற்றிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வரைமுறைகள் இருக்கவேண்டும். இல்லாவிடில் எப்படி 20,000 பேர் வேலைசெய்யும் நிறுவனத்தின் கழிவையும் 40 பேர் குடியிருக்கும் வீட்டின் கழிவையும் ஒரே மாதிரி அகற்றி திட்டம் போடுவது? திட்டம் போடுவதன் முதல் பகுதியே கணக்கெடுப்பு என்றால் நிலம் பினாமியிலே இருக்க முடியாது, கருப்பு பணத்திலே நிலம் வாங்க முடியாது. இதனால் ஆதார் கூடாது இணைப்பு கூடாது என குதிக்கிறார்கள்…
View More ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ
மலேசியாவிலிரிந்து 1965ல் பிரிய வேண்டிய சூழல். ஏற்பட்டது. நிலையில்லாத அந்தக் காலகட்டத்தில் துணிந்து முடிவெடுத்து சிங்கப்பூர் என்னும் ஒரு தனி நாட்டை உருவாக்கினார் திரு லீ… ‘எனது சிங்கப்பூர் எந்த சித்தாந்தத்தின் படியும் உருவாக்கப்படவில்லை. பல முயற்சிகள் செய்தோம். சில வெற்றி கண்டன. சில தோல்வியுற்றன. நாட்டு மக்களுக்குப் பயன் அளிக்கக் கூடிய எந்த முயற்சியையும் செய்வதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை’, என்று சித்தாந்த ரீதியான கட்டுக்கள் எதுவும் இல்லாத ஒரு தலைவராகவும் அதே நேரத்தில் ஒரு பழுத்த யதார்த்த வாதியாகவும் திகழ்ந்தார் திரு.லீ…
View More பிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்
அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஃபோர்ட் ஃபவுன்டேஷன் நிறுவனத்திடமிருந்து, அர்விந்த கெஜ்ரிவால் மற்றும் அவரது நன்பர்களும், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியமானவர்களான மனீஷ் சிசோடியா போன்றவர்கள் ஏற்படுத்திய கபீர் என்ற NGO விற்கு பெற்ற நன்கொடை 4 லட்சம் டாலர்…. இந்திய திருநாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் மாவேயிஸ்ட்கள் மற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் என்றால் மிகையாகாது….சர்வாதிகாரம் என்பது ஆம் ஆத்மி கட்சியில் சர்வசாதராணமாகும். ரூ 2 கோடிக்காக ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பதவி விற்கப்பட்டது என்றால் இவர்களா லஞ்சத்தை ஒழிக்க முற்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்…
View More ஆம் ஆத்மி பார்ட்டியை தெ(பு)ரிந்து கொள்வோம்நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!
ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றிச் சதவிகிதம் 82%; உடனிருந்த பா.ஜ.க.வின் வெற்றி விகிதமோ 89%… இஸ்லாமியர்களும் மதத்தைத் தாண்டி சிந்தித்துச் செயல்படுவார்கள் என்பதை ஏற்கனவே குஜராத்தில் மோடியின் வெற்றி நிரூபித்தது; பீகாரில் நிதிஷின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது… அரசியல் என்பது பிழைக்கும் வழியல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான மார்க்கம்…
View More நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!மோடி – மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்!
நற்சான்றிதழைத் தன்னுடைய அலுவலகத்தில்- தன் அறையில்- மாட்டி வைத்துவிட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகத் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மோடி… பல முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவதால், குஜராத் முஸ்லிம்கள் பா.ஜ.க நோக்கி வரத்தொடங்கிவிட்டனர்… மோடி பெற்றுள்ள அமோக வெற்றி, காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கு விழுந்துள்ள மறுக்கமுடியாத, மறக்கமுடியாத அடி…
View More மோடி – மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்!