ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?

பத்திர பதிவு என போனால் அரசு காசு வாங்கிக்கொண்டு இன்னாருக்கும் இன்னாருக்கும் இடையே ஒரு பதிவு நடந்தது என்று மட்டும் தான் எழுதும். அதுவும் பொதுவான அல்லது இணைக்கப்பட்ட பதிவு ஆவணம் என ஒன்று இருக்காது. யாரேனும் ஆக்கிரமித்தால் கோர்ட்டுக்கு ஒரு 100 வருசம் நடக்கவேண்டும். இந்தியாவிலே 60 சதம் வழக்குகள் நிலத்தகராறு வழக்குகள் தான். இதனால் என்ன நடக்கிறது? புற்றீசல் போல இஷ்டத்துக்கும் எலிவளை, புறாக்கூண்டு போல ஆங்காங்கே கட்டிடம் கட்டிக்கொண்டே போகிறார்கள்…எல்லாவற்றிக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் வரைமுறைகள் இருக்கவேண்டும். இல்லாவிடில் எப்படி 20,000 பேர் வேலைசெய்யும் நிறுவனத்தின் கழிவையும் 40 பேர் குடியிருக்கும் வீட்டின் கழிவையும் ஒரே மாதிரி அகற்றி திட்டம் போடுவது? திட்டம் போடுவதன் முதல் பகுதியே கணக்கெடுப்பு என்றால் நிலம் பினாமியிலே இருக்க முடியாது, கருப்பு பணத்திலே நிலம் வாங்க முடியாது. இதனால் ஆதார் கூடாது இணைப்பு கூடாது என குதிக்கிறார்கள்…

View More ஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன?

காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்

1950கள் வரை காலரா நோய்க்கான காரணிகள் முழுவதுமாக அறியப் படவில்லை. அந்த அறிதலை அளித்தவர் டாக்டர் சம்பு நாத் டே என்ற இந்திய மருத்துவ அறிவியலாளர். காலராவை உருவாக்கும் நச்சுக்காரணி (Cholera toxin) பற்றிய திட்டவட்டமான முடிவுகளை 1959ல் அறிவித்தார். காலரா தடுப்பூசிகளும், சிகிச்சைக்கான மருந்துகளும் உருவாக இந்தக் கண்டுபிடிப்புகளே மூல காரணம்…. கடுமையான மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பணி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையே, சொற்பமான உபகரணங்களையும் வசதிகளையும் வைத்துக் கொண்டு தனது ஆய்வுகளை டே நிகழ்த்தினார்… மனித உயிர்களை நோயிலிருந்து காப்பதிலும் மீட்பதிலும், மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற பல அறிவியலாளர்களையும் விட, சம்பு நாத் டேயின் பங்களிப்பு மிக அதிகமானது, உயர்வானது…

View More காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்

ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி

ஹரித்வாரில் உள்ள சாந்தி சதன் ஆசிரமத்தில் மூன்று மாதங்களாக உண்ணா நோன்பு இருக்கிறார் அந்த 81 வயது முதிய துறவி சுவாமி ஞான ஸ்வரூப் ஸானந்த். ஒரே விஷயத்திற்காக அவர் அறிவித்திருக்கும் ஐந்தாவது கால வரையற்ற உண்ணா நோன்பு இது… கட்டுப் பாடற்ற, அசுரத் தனமான அணைத்திட்டங்களும் மின் உற்பத்தி நிலையங்களும் கங்கை நதியையும் இந்தப் பிரதேசத்தின் சூழலியலையும் முற்றிலுமாக அழித்து விடும் என்று அவர் கருதுகிறார்… சாது பழமைவாதியும் அல்ல, முன்னேற்றத்திற்கு எதிரியும் அல்ல. பூர்வாசிரமத்தில் ஜி.டி.அகர்வால் என்ற சூழலியல் பொறியாளர் (Environmental Engineer) அவர்… “2010ம் ஆண்டு எங்களது தொடர்ந்த போராட்டத்தால் மூன்று அணைக்கட்டுத் திட்டங்கள் நிறுத்தப் பட்டன. ஆனால் இப்போது அலகநந்தா நதியில் 5 மின் திட்டங்களை மறுபடியும் அறிவித்துள்ளனர். அன்னை கங்கை கட்டற்றுப் பாய்பவள். அவளது பிரவாகத்தை எந்த வகையிலும் தடுக்கக் கூடாது” என்கிறார் ஸ்வாமி ஸானந்த்…

View More ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி

பசுமைப் புரட்சியின் கதை

அந்த நண்பர்  விவசாயி  மகன் .   அக் கணம்  நான்  அந்த  நண்பர் மீது  பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி –   அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப் படாதது… நமது  வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை  என அது  எதிர்கொண்டு  முன்னகர வேண்டிய  சவால்கள் மீதும்  கவனம் குவித்து, திறன்வாயந்த  அடிப்படை நூலாக  வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம்  அவர்கள் எழுதிய ”பசுமைப் புரட்சியின் கதை”. நூலின் சில பகுதிகளை  கண் கலங்காமல் , குரல்வளை அடைக்காமல் கடக்க முடியாது… உலகப் போருக்கு  கண்டடையப் பட்ட  ரசாயனம் அம்மோனியா. உரமாக மாறி இங்கு வந்து குவிகிறது. ஓரினப் பயிரும், கைவிடப்பட்ட பயிர் சுழற்சி  முறையும் , கால்நடைகளுக்கான  தீவனப் பற்றாக்குறையும்,  கன ரக உழவு முறைகளின்  தாக்கமும்  எவ்வாறு  நமது  விவசாயத்தை மொத்தமாக சீர்குலைத்ததென்று  நூல் பல்வேறு ,தரவுகள்  வழியே சொல்லிச் செல்கிறது….

View More பசுமைப் புரட்சியின் கதை

புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை

குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு… நீரை “வீணாக்கும்” விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் டாஸ்மாக் தரகருக்கும் சேல்ஸ்மேனுக்கும் குறைவான வரியும் விதிக்கப்பட வேண்டும் – இது காங்கிரஸ் நியாயம்… ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக, நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா மன் மோகன் சிங் அவர்களே?….

View More புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை

காவேரியைக் காக்க ஒரு யாத்திரை

காவிரியின் புனிதம் காக்க மக்கள் விழிப்புணர்வு யாத்திரை… குடகு மலைச் சாரலில் தலைக்காவேரியில் அக்டோபர் 23ம் நாள் தொடங்கிய இந்த யாத்திரை நவம்பர்-11 அன்று காவிரி கடலில் கலக்குமிடமான பூம்புகாரைச் சென்றடையும். யாத்திரையில் பற்பல துறவியர்கள் & மடாதிபதிகள் கலந்து கொண்டு காவேரித் தாய்க்கு பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகிறார்கள்…விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பஜனைகள்…

View More காவேரியைக் காக்க ஒரு யாத்திரை

திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]

உயர் நீதிமன்றம் கடும் நடவடிக்கையாக சாய ஆலைகளை மூட உத்தரவிட்ட பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது தொழிற்துறை… நொய்யல் நதியைச் சீரழித்ததற்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராதமே சாய ஆலைகளிடையே ஒற்றுமை குலையக் காரணமானது… சாய ஆலைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பனியன் தொழில் துறையே பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… அரசும் அரசியல் கட்சிகளும் தொழில் துறையினரும், விவசாயப் பிரதிநிதிகளும், நீதி துறையும், இணைந்து நடைபோட வேண்டிய தருணம் இது.

View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]

திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]

எல்லாமே, செருப்புத் தோலுக்காக செல்வக் குழந்தையைக் கொன்ற கதையாக, சாய ஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டால் மாறிப் போயிருக்கிறது… அரசு நிறுவனமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலற்ற தன்மையும் ஊழலும், நதிநீர் மாசுபடக் காரணங்களாயின… இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, தொழில்துறையினர், அரசு, நீதிமன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது..

View More திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]

ஒரு நதியின் நசிவு

மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும்…. வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி…

View More ஒரு நதியின் நசிவு