வாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் பெருமிதமிக்க பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்போது அருகி வருகின்றன. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை… நன்றியற்ற மனிதகளாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறியுள்ள கருத்து…
View More இரக்கமற்ற இளஞ்சிவப்புTag: ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?
2009 மே மாதம் நடந்த 15 வது நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் இல்லாத நேரம் பார்த்து, கடைசி சுற்றில் அதிக வாக்குகள் பெற்றதால், 3,354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூன் 7 ம் தேதி, ராஜ கண்ணப்பனின் மனுவை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், ப.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ப.சி. நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டி வரும். இதே போன்ற நிலைக்காகத் தானே திமுக அமைச்சர்கள் தயாநிதி, ஆராசா ஆகியோர் பதவி விலகினர். இப்போது ப.சி. பதவி விலகத் தேவையில்லை என்கிறதே காங்கிரஸ்! திமுகவுக்கு ஒரு நியாயம், காங்கிரசுக்கு ஒரு நியாயமா? ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று முரசறைந்த அதே மதுரையில் இருந்து வெளிவந்துள்ள இத்தீர்ப்பு என்ன விளைவை ஏற்படுத்தும்?
View More ப.சிதம்பரம்: தரித்திரனிடம் தார்மிகம் பேசலாமா?சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு
திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?
View More சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவுமக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி
அரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு, உச்சநீதி மன்றம், மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்துவரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்க தொலைதொடர்புத் துறை அமைச்சர் போடும் வேடங்கள், ஆ.ராசாவை விட கேவலமாக உள்ளன. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. பிரதமர் மன்மோகன் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், கபில் சிபலை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
View More மக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி