பகலைப் பிரசவிக்கிறது இரவியென உனது வலது விழி. இரவைப் படைக்கிறது
நிலவென உனது இடது விழி. சிறிதே மலர்ந்த பொற்கமலமென உனது மூன்றாவது விழி பகலுக்கும் இரவுக்குமிடையில் ஊடாடும் அந்தியைச் சமைக்கிறது… செவ்வரியோடிய கண்களில் கருவிழியின் ஒளிதிகழும் தேவியின் பார்வை திரிவேணி சங்கமத்தை ஒத்திருக்கிறது என்று சமத்காரமாகக் கூறுகிறார்.