புழுக்களுக்கு புலியின் வலிமை தெரியாது. புழுக்களின் உலகமே வேறு. பதவிக்காலம் முடிந்த பின்னும் அரசாங்கம் வழங்கிய சொகுசு பங்களாவில், வெட்கமேயில்லாமல், வசித்து வந்த ஒரு காந்திக்கு, சாவர்க்கர், அந்தமான் சிறைத்தண்டனையின் வேதனை புரியுமா?… செக்கிழுத்து தேங்காய் நார் உரித்து மலக்குழியைவிட கேவலமான அறையில் தரையில் படுத்து தனிமை சிறையில் தங்கி இருக்க முடியுமா? 50 ஆண்டுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சூழலில் நான்கு வருடங்கள் மிகக் கொடுமையான தண்டனைகளை அனுபவித்த ஒருவர், என்னை மட்டும் சிறையில் வைத்துவிட்டு பிறர் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என எழுதுகிறார். இந்த தியாகத்தை கிண்டலடிப்பவன் மனிதர்களில் சேர்த்தியா? அப்படி கிண்டலடிப்பவன் பின்னால் செல்பவர்கள் இந்திய ரத்தம் கொண்டவர்களா?….
View More ராகுல் காந்தியின் “நான் சாவர்க்கர் அல்ல” – இரு சாட்டையடிகள்Tag: காங்கிரஸ் கலாச்சாரம்
புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி
1977இல் இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வி அடைந்து, பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த பின்னர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்துக்காக நியமித்த பல கவர்னர்கள் நீக்கப்பட்டார்கள். அந்த இடத்திற்கு ஜனதா கட்சி புதிய கவர்னர்களை நியமித்தது. அப்படி தமிழ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டவர் பிரபுதாஸ் பட்வாரி என்பார். இவர் ஒரு சர்வோதயத் தலைவர். மது அருந்துவதோ, மாமிசம் சாப்பிடுவதோ இவருக்குப் பழக்கம் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் இவர் கவர்னராக இருந்த காலத்தில் இவரது கவர்னர் மாளிகையில் விருந்தினராக வந்து தங்கும் தலைவர்களுக்கும் மேற்படி சங்கதிகள் பரிமாறப் படுவதில்லை….
View More புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சிநேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1
இந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் ஒரு பேரிருளைக் குறித்த முக்கிய முன் அறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தையும் நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்….
View More நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”!
சல்மான் குர்ஷித், அவர்களே, உங்களுக்கு காசுக்கோ, வசதிக்கோ என்ன குறைவு வந்து விட்டது, அதுவும் ஊனமுற்ற, ஆதரவற்ற குழந்தைகளின் பேரை சொல்லி கொள்ளையடிக்க?… சி.ஏ.ஜி கூறும் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்றால் ”என் பேனாவில் இங்க்கிற்கு பதில் கேஜ்ரிவாலின் ரத்தத்தை நிரப்பி எழுதுவேன்… என் தொகுதிக்கு வந்து விட்டு உயிரோடு திரும்பி போய்விடுவீர்களா?” என மீடியாவில் கொலை மிரட்டல் விடுக்கிறீர்களே?… திருட்டுத்தனம் அம்பலப்பட்ட பிறகே குர்ஷித் முழுமையான காங்கிரஸ்காரர் என்பதை அவசரமாக உணர்ந்த சோனியா பாராட்டி உச்சி முகர்ந்து உடனடி பரிசாக வெளி உறவுத் துறையையும் அளிக்கிறார்….
View More நமது வெளியுறவுத் துறை அமைச்சரின் ”அறம்”!