ஒரு நல்ல நாவலை வாசிப்பது ஒரு நதிக்குள் மூழ்கித் திளைப்பதைப் போல. கொஞ்சம் மூழ்கித் திளைக்கையில் இன்னொரு உலகுக்கு நம்மை அழைத்துச்செல்லும். மாயப்பெருநதி நாவலில் இரண்டு உலகங்களுக்கு. வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் இரு கதைகளின் அடிநாதமாக அவைகளை இணைக்கும் ஒரு சரடாக, தன் முன் நிகழும் சம்பவங்களின் சாட்சியாக, கதாபாத்திரங்களின் உணர்வலைகளை சுழற்றியடித்துக் கொண்டே தாமிரபரணி ஓடுகிறது.. ஹரன்பிரசன்னாவின் முதல் நாவல் இது. ஆனால் முதல் நாவலிலேயே நம்மைத் தன் எழுத்தால் கட்டிப் போடுகிறார்…
View More மாயப்பெருநதி: புத்தக அறிமுகம்Tag: கிண்டில் புத்தகம்
இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்
கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்… புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி – கோட்சே குற்றவாளியா?…
View More இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
இக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்… என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும் சிறுவர்களும் அடையவேண்டும் என்பதே என் ஆசை. அந்த ஆசைக்கு நியாயத்தை இக்கதைகளில் செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்…
View More மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்