இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல..
View More சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?Tag: குகன்
இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?
தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி/பொருநை நதிதீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான வலிமையைச் சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள்.
View More இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?
சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. உ.பியின் ஹமீர்புர் மாவட்டத்தில், கேவட் என்னும் கங்கை நதியில் படகோட்டி, மீன்பிடித்து வாழும் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்தவர். குகனின் வழிவந்த ‘நிஷாதர்கள்’ என்று தங்கள் பாரம்பரியத்தைப் பெருமிதமாக உணரும் சாதியினர் இவர்கள்… இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை இந்து விரோத ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தாக்குவதில் என்ன ஆச்சரியம்? கிறிஸ்தவ ஆதரவாளரகவோ அல்லது இந்து வெறுப்பைக் கக்கும் தலித் அரசியல்வாதியாகவோ வளர்ந்திருந்து, இதை விட மிக மோசமான “வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை” பேசியிருந்தால், அவரது பேச்சு ஒடுக்கப் பட்ட விளிம்பு நிலை சமுதாயத்தின் போர்க்குரலாக அங்கீகரிக்கப் பட்டிருக்கும். ஆனால், ராமாயண பிரசங்கம் செய்து பாஜகவில் சேர்ந்து அமைச்சராகவும் அல்லவா ஆகி விட்டார்…. “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கூட ஸ்ரீராமனின் குழந்தைகள்” என்று அவர் கூறியது “வெறுப்பு பேச்சுக்கு” மற்றொரு உதாரணமாகக் காட்டப் படுவது கொடுமையிலும் கொடுமை. ஒரு ஒப்பீட்டுக்காக, ஒரு நடக்க முடியாத விஷயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். பாகிஸ்தானிலோ சவுதி அரேபியாவிலோ உள்ள ஒரு சுன்னி இஸ்லாமிய மௌல்வி….
View More சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?ஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…
துவாதசிப் பாரணைக்கு இந்தளூர் செல்லவேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்து… மேலே ஒரு அடி வைக்க மறுத்தன அப்புரவிகள்… இப்படியாக ஓரிரவு ஆழ்வாரும் அவரது பரிவாரங்களும் எழுந்தருளி இருந்தமையால், ஓரிருக்கை என இன்றும் வழங்கிவருகிறது
View More ஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…