அவர் அமெரிக்கா வருவதற்குமுன் அவரது தம்பி ஆறு வயதில் காலமாகி விட்டான் என்றும், என் மகனைப் பார்த்தால் அவன்நினைவு வருகிறது என்றும், ஆகவே என் மகனுக்கு வாங்கித் தருவது காலம்சென்ற தனது தம்பிக்கு வாங்கித் தருவதுபோல இருக்கிறது என்று மனம்விட்டு தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார்.
திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம்சொல்ல மறுத்துவிட்டார். சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
Tag: கையாலாகாத்தனம்
கையாலாகாதவனாகிப் போனேன்! — 5
நீ கோட்டும் சூட்டும் போட்டு ஆபீசுலே வேலை பார்க்கற சாப். உன் உலகம் வேற. நான் மூட்டைதூக்கிப் பொழப்பு நடத்துறவன். ரெண்டு வருசம் முன்னால குடிச்சுட்டுப் இவளைப் போட்டு அடிச்ச இவ புருசனை நீ கேட்டமாதிரி ஏண்டா அடிக்கறேன்னு கேட்டேன். அவனும் நான் உங்கிட்ட சொன்னமாதிரி, அடிக்கறத நிறுத்தறேன். தில் இருந்தா இவளையும், இவ புள்ளையையும் கூட்டிக்கிட்டுப்போடான்னான். பாவப்பட்டு இவ புருசன் கிட்டேந்து இவளையும், இவ பிள்ளையும் நான் சேர்த்துகிட்டேன். என்னால அப்படிச் செய்யமுடியும். என் உலகம் அப்படி. உன்னால முடியாது. எங்க வாழ்க்கை ஒனக்குப் புரியவும் புரியாது. இவனை இப்படி நான் தண்டிக்கலேன்னா, இவனும் ஒரு தெருப்பொறுக்கியா, கேப்மாரியா, திருட்டுப்பயலாத்தான் அலைவான். போலீசு இவன்பின்னாலே சுத்தும். ஜெயில்தான் இவனுக்கு மாமியா வூடாகிப்போகும். உனக்குச் சொன்னாப்புரியாது.
View More கையாலாகாதவனாகிப் போனேன்! — 5கையாலாகாதவனாகிப் போனேன்! – 4
“இவன் அந்தத் திமிர்பிடிச்சவன் வீட்டுக்குத் திங்கப்போகாம இருந்திருக்கணும். இல்லே, போனான். ஒண்ணுக்கும் உதவாத அந்தப்பய சொன்னான்னா, நீயாடா நாயே சோறு போடறே அப்படீன்னு கேட்டுட்டு, அங்கேயே தின்னுட்டு வந்திருக்கணும். ரெண்டுலே ஒண்ணையும் செய்யாம, பொட்டச்சிமாதிரி திரும்பிவந்திருக்கான்.
“ஒருபொழுது பட்டினிகிடக்கட்டும். அப்பத்தான் கோழைத்தனம் போகும்.” என்று விடுவிடென்று வெளியே நடந்து சென்றுவிட்டார்.
நான் சாப்பிடாததனால் அன்று அப்பாவும் அன்று மதிய உணவு உண்டிருக்கமாட்டார் என்று நான் உறுதியாக இன்றும் நம்புகிறேன். அநீதிக்கு எதிராகத் துணிந்து நிற்க, நெஞ்சில் வலுவுடன் இருக்கவேண்டிய நிலை வரும்பொழுதெல்லாம் அன்று நடந்த நிகழ்ச்சியையும், எனது கையாலாகாத்தனத்தையும், என் தந்தையின் அறிவுரையையும் நினைவுக்கு கொண்டுவருகிறேன்.
View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 4கையாலாகாதவனாகிப் போனேன்! – 3
வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் என்னைப் பார்த்து ஏளனம் செய்தது. நான் புது புஷ்கோட்டுடனும், பாண்ட்டுடனும், ஒரு கோட்டையைக் கைப்பற்றிய வீரனின் பெருமிதம் முகத்தில் தெரிய கம்பீரப்பார்வையுடன் மரக்குதிரையில் சவாரி செய்யும் புகைப்படத்துடன், என் தங்கையுடன் நான் நிற்கும் படமும், என் தங்கை குதிரையின் கடிவாளக் கம்பைப் பிடித்துக்கொண்டு இருக்கும் படமும் என்னைப் பார்த்துச் சிரித்தன.
ஒவ்வொருமுறை அப்புகைப்படத்தைப் பார்க்கும்போதும், ஒரு கையாலாகாத உணர்வு என்னுள் எழுந்தாலும், என் மகிழ்ச்சியை என்னுள் நிரந்தரமாக்குவதுபோல அந்த புது புஷ்கோட்டின் புகைப்படம் ஒருங்கே தந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப் படம் இன்னும் என்னிடம் இருக்கிறது.
கையாலாகாதவனாகிப் போனேன்! – 2
“நீ சொல்லறது நல்லா இருக்குடா. இந்தத் தம்பியைப் பார்த்தா சைவச்சாப்பாடு சாப்புடறவக மாதிரியில்ல இருக்கு. இவுக ஆட்டுக்குட்டிய வச்சுக்கிட்டு என்ன செய்வாக? கிடேரிக் கன்னுக்குட்டினாலும், பெரிசானதுக்கப்பறம் இவுகளுக்கு உவயோகப்படும். அத்தவிடு, சாயபு கொஞ்சநேரத்துல இத்த வாங்கிக்க வந்துடுவாருல்ல…” என்று இழுத்தாள் மூதாட்டி.
“வாங்க ஐயா. தம்பியோட மூக்குக்கண்ணாடிய நான் வாங்கிக்கப்போறேன். அதுக்கு காசு கொடுக்கணுமில்ல? எங்க ஆட்டுக்குட்டிய தம்பிக்குக் கொடுக்க முடியாதுல்ல. சாயபுதானே ஆட்டுக்குட்டிய வாங்கிக்கப்போறாரு. அதான் அவருகிட்ட காசைக் கேக்குறேன்.”
கையாலாகாதவனாகிப் போனேன்! – 1
என் தங்கை அழுதாலே பொறுக்காமல், “பாப்பாவைத் தூக்கு, அம்மா!” என்று முறையிடும் என்னால் அதைக் காணச்சகிக்கவில்லை. எந்தவொரு மாட்டுவண்டியைப் பார்த்தாலும் என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
View More கையாலாகாதவனாகிப் போனேன்! – 1