கையாலாகாதவனாகிப்போனேன்! — 6

அவர் அமெரிக்கா வருவதற்குமுன் அவரது தம்பி ஆறு வயதில் காலமாகி விட்டான் என்றும், என் மகனைப் பார்த்தால் அவன்நினைவு வருகிறது என்றும், ஆகவே என் மகனுக்கு வாங்கித் தருவது காலம்சென்ற தனது தம்பிக்கு வாங்கித் தருவதுபோல இருக்கிறது என்று மனம்விட்டு தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார்.
திடுமென்று ஒருநாள் முன்னறிவிப்பின்றி எங்கள் வீட்டிற்கு வந்தவர், “நான் படிப்பை விட்டுவிடப் போகிறேன்!” என்று சொன்னபோது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம்சொல்ல மறுத்துவிட்டார். சிலமணி நேரம் எங்களுடன் பேசிவிட்டு, எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு, எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

View More கையாலாகாதவனாகிப்போனேன்! — 6

பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!   உலகம்…

View More பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

டைம் (கொரிய திரைப்படம் 2006)

புதிய முகத்தைக் கொண்ட தன்னை வேறு ஒரு புதிய மனுஷியாக நம்பி காதலன் ஏற்றுக்கொண்ட போது தன் காதல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு மகிழும் அவள் – தன்னுடைய பழைய சுயம் காதலில் தோற்றதை எண்ணி வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் பழைய காதலி ஜீ வூ சந்திக்க விரும்புவதாக தானே கடிதம் எழுதி, தன் புதிய காதலை சோதனைக்குட்படுத்துகிறாள். அந்தக் கடிதத்தைக் கண்ட ஜீ வூ ஆழமான தன் பழைய காதலைத் தேடி போகப் போவதாக முகம் மாறி வந்த ஷெ ஹீயிடம் சொல்கிறான். தன்னுடைய புதிய காதல் சிதையக்கண்ட ஷெ ஹீ அவனுடன் சண்டையிடுகிறாள். இந்தச் சமயத்தில் இத்தனை நாள் ஷெ ஹீ நடத்திய நாடகம் ஜீ வூ-க்குத் தெரிய வருகிறது. மனம் உடைந்து போகிறான். அவளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத ஜீ வூ,…

View More டைம் (கொரிய திரைப்படம் 2006)