விஸ்வநாதர் கோவிலில் அதன் விஸ்தீர்ணத்தையும் அதன்
விரிவாக்கத்தையும் மிகத் தெளிவாக காண முடிந்தது. ஏற்கனவே நான் வந்த கோவில் போலவே இது இல்லை. ஏதோ புதிய கோவிலுக்கு வந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ஆலய விரிவாக்கத்தின் போது சுற்றியிருந்த பல கடைகளுக்கு உள்ளாக ஒளிந்து கொண்டிருந்த, வீடுகளுக்குள் மறைந்திருந்த பல புராதன ஆலயங்கள் வெளிப்பட்டிருக்கிறது.. இன்று இவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் உருவாகிவிட்ட பின்பும், நந்தி பரிதாபமாக ஞானவாபி மசூதியை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த போது என்னை மீறி கண்ணீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது…
Tag: கோயில் புனரமைப்பு
அரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்
உற்றுப் பார்த்தால், அந்தக் குன்றே ஆனைமுகக் கடவுள் வடிவில் நம்மைப் பார்த்து ஆசி நல்குவது போலத் தென்படுகிறது. இத்தகைய அற்புதத் தோற்றம் தென்படுவது அமெரிக்காவிலிருக்கும், அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள மகாகணபதி ஆலய வாசலில் நின்றுகொண்டு பார்க்கும் பொழுதுதான்…. 7400 சதுர அடிப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் எழுந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்து தங்கி இருந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தார்கள். திருப்பணி செய்ய வாய்ப்பிற்காக, செங்கல் ஆதரவாளர்களாக பக்தர்கள் திரண்டார்கள். விமானங்களிலும், சன்னதிகளிலும் கட்டப்படும் செங்கல்களில் தங்கள் பெயர்களை எழுதி, காணிக்கைகளைச் செலுத்தினார்கள்…
View More அரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை
கோயிலின் உயரதிகாரி, கோயிலின் புராதனத் தன்மையையோ அல்லது மகிமையையோ கணக்கிலெடுக்காமல், உண்டியல் அதிக வசூல் செய்யும் கோயில் முதல் வகை, அடுத்த அதிக வசூல் செய்யும் கோயில் இரண்டாம் வகை என்றே பிரிக்கின்றனர்… அறநிலையத் துறை சட்ட திட்டங்களில், பிற மதத்தினருக்கு காண்ட்ராக்ட் தரக்கூடாது என்று உள்ளது. எங்கே போனது விதி?… ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே கடவுளாய் இருப்பவரைக் கட்டம்கட்டி, சிறப்பு வழி, பொது வழி எனப் பிரித்து, கிட்டப் பார்வையாகவும், தூரப் பார்வையாகவும் பார்க்க வைத்து, கல்லாக் கட்டுவது யார்?… பிற மதத்தினர் அரசு சார்ந்த துறைகளின் மூலமாக அவர்களது வழிபாட்டுத் தலங்களைப் பேணி காக்காதபோது, இந்துக்களுக்கு மட்டும் எதற்கு ஓர் அறமற்ற துறை?
View More ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை