“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”… “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும் இருக்கிறது. மாற்றத்திற்குள்ளாகும் விஷயங்களைப் பற்றிக்கொண்டு அவை மாற்றமில்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுதான் முரண்பாடு”…
View More நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]Tag: கோவில்
நம்பிக்கை – 11: தியானம்
“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா… “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன நேரம் இல்லதபோது 32 முறை மட்டுமே செவீர்கள்”. “ஆமாம்” என்றார் சங்கர். “அங்கே முழு கவனமும் மந்திரத்தின் மீதும் எண்ணிக்கையின் மீதும் இருக்கும்”. “ஆமாம்” என்றாள் சௌம்யா. “அடுத்தடுத்து வரும் மந்திர உச்சாடனங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துவது தான் அடுத்த படி. மனதை அமைதிப்படுத்தி, சாந்தி நிலையை அடைந்த பிறகு, ஜபம் செய்யும்போது, மந்திரத்தின் மீதோ அல்லது எண்ணிக்கையின் மீதோ கவனம் செலுத்தாமல், இரண்டு மந்திரங்களுக்கும் இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த மௌனத்தை அதிகப்படுத்தி அங்கேயே நிலைத்திருங்கள்”….
View More நம்பிக்கை – 11: தியானம்நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்
இந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய வேண்டும். இதற்கு இரண்டு நிமிடங்கள் பிடிக்கும்). “அவ்வளவு தானா?” “ஆமாம். உண்மை தான். வலிமையையும் சக்தியையும் அதிகரிக்கச் செய்ய மிகவும் பயனளிக்கக் கூடிய பயிற்சியாகும் இது”…
View More நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்நம்பிக்கை – 9: மௌனம்
“ஒருவர் தனக்குள் அமைதியாக இருக்கும் நிலை, அன்பின் மூலமாக மட்டும்தான் பெறக்கூடியதா?” என்று கேட்டார் சங்கர். “உன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திடமும் அன்பு செலுத்தாமல் உன்னால் அமைதியாக இருக்க முடியாது. மிகச் சிறிய உறுத்தல் கூட உன்னை அமைதி இழக்கச் செய்யும். இதைச் சார்ந்துதான் அல்லது இதைச் சுற்றித்தான் சாந்தி என்பது உள்ளது. தனக்குள்ளும் தன் சுற்றுப்புறச் சூழலுடனும் அமைதியாக இருக்கும் நிலையை அன்பின் மூலமாகத்தான் சாதிக்க முடியும்”… “மௌனத்தை ஏன் மிகவும் உயர்ந்த படிநிலையில் வைத்தீர்கள்?” என்று கேட்டார் சௌம்யா. “அந்நிலையை அவ்வளவு சுலபமாக அடைய முடியாது. நீங்கள் சிறந்த மகான்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் முக்கியமானவர் ரமண மஹரிஷி. அவருடைய உபதேச முறையே மௌனம் தான். அவருடைய உபதேசமே மௌனம். அவர் மக்களை மௌனமாக இருக்கத் தூண்டினார். அந்த மௌனத்தில் அனைத்தும் புலப்பட்டன. அவ்வாறு புலப்பட்டதாகப் பலர் கூறியுள்ளனர்”…
View More நம்பிக்கை – 9: மௌனம்நம்பிக்கை – 8: பக்தி
“பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தரும் அடித்தளச் செய்தியே ‘தீயதைச் சகித்துக்கொள்ளாதே’ என்பது தான். ஒரு போர் வீரன் செய்ய வேண்டிய காரியமான போர் புரிதலைக் கைவிட்டு ஓட முயன்ற அர்ஜுனனை, அவனுடைய கடமையான போர் புரிதலை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் கிருஷ்ணர். உண்மையில், தன் கடமையிலிருந்து நழுவப்பார்க்கும் அர்ஜுனனைப் பரிகசிக்கிறார். தீயவர்களைக் கொல்லுமாறு அர்ஜுனனை உந்துகிறார்; அது வெறுப்பினால் அல்ல; தீமைகளை, தீய செயல்களைத் தடுப்பதற்காகவே!”… “கிருஷ்ணர் இருந்தார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? கீதை வயதானவர்களுக்காகத்தான் என்று தான் நான் எப்போதும் நினைத்திருந்தேன்”. என்றான் கௌசிக்…
View More நம்பிக்கை – 8: பக்திநம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்
நாம் ஈடுபடும் எந்த வேலையாக இருந்தாலும், புத்தக அலமாரியைச் சுத்தம் செய்வது, அறையை மெழுகிச் சுத்தம் செய்வது, சமைப்பது, தோட்ட வேலை, படிப்பது, என்று எந்த வேலையாக இருந்தாலும், அதை ஆண்டவனுக்குச் செய்யும் ஒரு அர்ப்பணிப்பாகக் கருதிச் செய்வதாக இருந்தால், அதைச் சரியாகவும், சுத்தமாகவும், எந்தக் குறையுமின்றி நிறைவாகச் செய்வதற்கும் அதிகப்படியான அக்கறை எடுத்துக்கொள்வாயா, இல்லையா?.. வெற்றி என்பது வேறு. உன் முழுத்திறமையையும் வெளிப்படுத்துவது என்பது வேறு. நம் யாராலும் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால், விளைவுகளைப் பற்றிக் கவலையில்லாமல், நம்மால் நம் முழுத்திறமையையும் கண்டிப்பாகக் காட்ட முடியும். என்ன, ஒத்துக்கொள்கிறாயா?…
View More நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக?
பள்ளிக்கூடத்துக்கும் தியேட்டருக்கும் வருபவர்கள் ஒரே நோக்கத்துடன் வருகிறார்கள். அவர்கள் அனைவரின் கவனமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும். ஆகவே, அவ்விடங்களுக்கும் நமக்கும் ஒருவிதமான தொடர்பு இருக்கின்ற உணர்வு ஏற்படும்; நம்முடைய கவனம் சிதறுவது குறைவாக இருக்கும்; அந்த இடங்கள் அளவில் மிகவும் பெரியதாக, குறிப்பிட்ட நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன், நம்முடைய கவனம் அதிகமாகக் குவிகின்ற இடங்களாக இருக்கும். அங்கு வருகின்ற அனைவரும் சேர்ந்து இருக்கின்றபோது, நம் செயல்பாடு ஒரு குழுமச் செயல்பாடாக, மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கும்… உண்மையில் அந்த அதியுயர்ந்த சக்திக்குப் பெயரோ உருவமோ கிடையாது. இந்தப் பெயரற்ற, உருவமற்ற, அதியுயர்ந்த சக்தியைக் கண்கள் மூடிய நிலையில் உன்னால் சில நிமிடங்களாவது நினைத்துப்பார்க்க முடியுமா?..
View More நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக?போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை
இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை.
View More போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலைகண்ணன் வந்தான்
நிர்மால்யம் என்பது முன்தினம் இரவு கோயில் மூடும்முன் செய்த கடைசி பூஜையின் அலங்காரங்கள் அகற்றபட்டு ஸ்வாமி அபிஷேகத்திற்காகக் காத்திருக்கும் வேளை… இந்தக் கோயிலில் தரிசனத்திற்குக் கட்டணம் கிடையாது… ஆறுமாதத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றும் அவர் அந்தக் காலத்தில் சன்னதியிருக்கும் பிரதான மண்டபத்தை விட்டு வெளியே, பிரஹாரத்துக்குக்கூட வரமாட்டார்… வழிபாடுகளில் யானைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்… முதல்வர் ஜெயலலிதா 2002-இல் கொடுத்த யானை சீனியராகக் கோயில் பணிகள் ஆற்றியபின் இப்போது மஸ்தியினால்…
View More கண்ணன் வந்தான்தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]
•அற நிலையத் துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா? சட்டங்களும், உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்… ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை…
View More தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]