நம்பிக்கை – 11: தியானம்

“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா… “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன நேரம் இல்லதபோது 32 முறை மட்டுமே செவீர்கள்”. “ஆமாம்” என்றார் சங்கர். “அங்கே முழு கவனமும் மந்திரத்தின் மீதும் எண்ணிக்கையின் மீதும் இருக்கும்”. “ஆமாம்” என்றாள் சௌம்யா. “அடுத்தடுத்து வரும் மந்திர உச்சாடனங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துவது தான் அடுத்த படி. மனதை அமைதிப்படுத்தி, சாந்தி நிலையை அடைந்த பிறகு, ஜபம் செய்யும்போது, மந்திரத்தின் மீதோ அல்லது எண்ணிக்கையின் மீதோ கவனம் செலுத்தாமல், இரண்டு மந்திரங்களுக்கும் இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த மௌனத்தை அதிகப்படுத்தி அங்கேயே நிலைத்திருங்கள்”….

View More நம்பிக்கை – 11: தியானம்

நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்

இந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய வேண்டும். இதற்கு இரண்டு நிமிடங்கள் பிடிக்கும்). “அவ்வளவு தானா?” “ஆமாம். உண்மை தான். வலிமையையும் சக்தியையும் அதிகரிக்கச் செய்ய மிகவும் பயனளிக்கக் கூடிய பயிற்சியாகும் இது”…

View More நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்

மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் சொல்வது… பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா?… மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம்…

View More அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்

ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்

ஊழலுக்கும், கறுப்புப் பணப் பதுக்கலுக்கும் எதிராக வெடித்துக் கிளம்பிய பாபா ராம்தேவின் சத்தியாக்கிரக போராட்டத்தை வன்முறையாக காங்கிரஸ் அரசு கலைக்க முயற்சித்துள்ளது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய சுவாமி ராம்தேவ் மற்றும் 25000 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அரசு உத்தரவின் பேரில் போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி நடத்தி, முப்பதுக்கும் மேற்பட்டோரை காயப் படுத்தி, கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளது [..]

View More ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்