யோகமும் போகமும்

இந்த நான்கு பாடல்களும் யோகம்-போகம் என்னும் இரு வாழ்க்கைக் கண்ணோட்டங்களின் முரணையும் இணைவையும் சமன்வயத்தையும் வெவ்வேறு விதங்களில் முன்வைக்கின்றன… ஞானி எப்போதும் பரமாத்ம பாவனையுடன் இருப்பதால், அவரது புறச்செயல்கள் அதன் இயல்பான போக்கில் அதற்கான லயத்தில் சென்று கொண்டிருக்கும், அது போகமோ, யோகமோ, கலையோ, கல்வியோ எதுவானாலும்…

View More யோகமும் போகமும்

ஈசாவாஸ்ய உபநிஷதம்

பொன்மயமான மூடிக்குள் மறைந்துள்ளது – சத்தியத்தின் முகம். பேணி வளர்ப்போனே, சத்திய இயல்பினர் காண அதைத் திறந்திடுக… அடர் காரிருள் வழிச் சென்றடைவர் அறியாமையில் ஒழுகுவோர் – அதனினும் பெரிய இருளடைவர் அறிவில் ஆழ்ந்தோர்… கடவுள் – உலகம், துறவு – இன்பம், செயல் தரும் பந்தம் – செயலின்மை தரும் முக்தி, ஒன்று – பல, அறிவு – அறியாமை, இவ்வுலகம் – அவ்வுலகம் என்று ஒன்றுக்கொன்று எதிராக உள்ள கருத்தாக்கங்களை… காந்தி பரவசத்துடன் எழுதுகிறார் – எல்லா புனித நூல்களும் தத்துவங்களும் அழிந்து சாம்பலாகி விட்டாலும் கூட’ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்ற இந்த ஒரு சுலோகம் இந்துக்களின் நினைவில் எஞ்சியிருந்தால் போதும்…

View More ஈசாவாஸ்ய உபநிஷதம்