எவ்விதத் தகவல்களையும் நாம் சேமிக்காதது சிலைத் திருட்டை மிக எளிதாக்கி இருக்கிறது. சோழர் காலச் சிலைகளை விதவிதமாகக் கடத்தி இருக்கிறார்கள். மூலச் சிலைக்குப் பதிலாக அதே போன்ற போலிச் சிலையைச் செய்து வைப்பது, போலிச் சிலை இல்லாமலேயே மூலச் சிலையைக் கடத்திவிடுவது, பல சாதா சிலைகளைச் செய்து அவற்றோடு பழங்காலச் சிலைகளைச் சேர்த்துக் கடத்துவது, சிலைகள் மட்டுமில்லாமல் பழங்கால புராதன சின்னங்கள் எதுவானாலும் கடத்துவது, நேரடியாக தனக்குத் தேவையான ஊருக்குக் கடத்தாமல் பல நாடுகளுக்குச் சுற்றி எடுத்துச் சென்று கடத்துவது… இப்படிப் பல வகைகளில் கடத்துகிறார்கள்… இந்தியா போன்ற தனி மனித உயிருக்கு எவ்வித மரியாதையும் அற்ற ஒரு நாட்டில் இது போன்ற ‘உலகளாவிய’ விஷயத்தை எதிர்ப்பது பெரிய சவால். அதை எதிர்கொண்டு மிகத் தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார் விஜய் குமார். அதைவிட முக்கியம் இவரது முயற்சியில் நம் தெய்வங்கள் தனக்கான இடங்களில் மீண்டும் ஆராதனை பெறத் துவங்கி இருக்கிறார்கள்…
View More சிலைத் திருடன்: புத்தக அறிமுகம்Tag: சிலைக்கடத்தல்
சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்
2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை.
93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே… கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை…