நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?
View More 2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?