கஜா புயலால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ள வேதாரண்யம், திருத்துறைபூண்டி, பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ஆர்எஸ்எஸ் – சேவா பாரதி புயல் நிவாரண பணி முகாம்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொருளாகவும், பணமாகவும் உதவி செய்ய விரும்புவோருக்கான தொடர்புகள் கீழே… புயலுக்கு பின் முதலில் களத்திற்கு வந்த சேவாபாரதி சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த முடிவு செய்து பணியை துவக்கியது. பெட்ரோலால் இயங்கும் ரம்பங்கள் திருப்பூரிலிருந்து வாங்கி அனுப்பப்பட்டது. அதோடு 10,000 எம் ஏ எச் திறனுள்ள பவர் பேங்க் 200 முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்டு அங்கு நிவாரணப்பணியில் களத்தில் இருப்பவர்களுக்கும், அரசு நிர்வாகத்தில் இயங்குபவர்களுக்கும் வழங்கப்பட்டது. பழைய ப்ளெக்ஸ்கள், தார்பாய்கள் வாங்கப்பட்டு தற்காலிக முகாம்கள்,உடைந்த கூரைகள் மீது போட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் மிக முக்கியமாக உணவுப்பொருட்களை அனுப்பும் துவங்கியது…
View More கஜா புயல் சேதம்: சேவாபாரதி நிவாரணப் பணிகள்Tag: தன்னார்வலர்கள்
அன்னமும் அடையாளமும்
என் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை காட்டி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய், பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது?… அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும், முடிந்தால் பிறருக்கு உதவவேண்டும் என்பதை கர் சேவையில் கண்ட நேரம் அது….
View More அன்னமும் அடையாளமும்லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்
அரசு நிர்வாகம் மீட்பு, நிவாரணப் பணிகளில் மெதுவாகவே ஈடுபடுகிறது… லே அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் (ஐ.டி.சி) நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. உடனடியாக முகாம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வெள்ளப் பகுதிக்கு விரைந்தனர். யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்புப் பணியைத் துவங்கிவிட்டனர்… கடுமையான இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகித் தவிக்கும் லே சகோதரர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாமல் இருக்கலாம். இந்த இயக்கம் ஆற்றும் மீட்புப் பணிகளுக்கு நிதி வழங்கி அவர்களுக்கு தோள் கொடுக்கலாமே!
View More லடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்