ஏதோ ஹைதராபாத் நகரில் நடந்த முதல் குண்டு வெடிப்பு சம்பவம் இது கிடையாது.
2002-ல் நவம்பர் மாதம் 21ந் தேதி தில்சுக் நகர் சாயிபாபா கோவில் அருகில் குண்டு வெடித்து ஒருவர் பலியானார். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இரண்டாவது 2005-ல் அக்டேபார் மாதம் 1ந் தேதி ஹைதராபாத் காவல் துறையின் அதிரடிப் படை அலுவலகம் அருகே குண்டு வெடித்து இருவர் பலியானர்கள்.
மூன்றாவதாக 2007-ல் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி இரண்டு இடங்களில் மோசமான வகையில் குண்டு வெடித்தது. ஒன்று லும்பினி பார்க்கில் வெடித்தது. இரண்டாவது கோகுல்சாட் என்ற உணவு விடுதியில் வெடித்ததில் 32 பேர்கள் பலியானார்கள்.
தற்போது தில்சுக் நகரில் நடந்துள்ள தாக்குதல் நான்காவது தாக்குதலாகும்.
2012-ம் வருடம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஒருவரிடம் சோதனை செய்த போது 4மில்லியன் கள்ள நோட்டு கிடைத்தது. இது மிகப் பெரிய தொகையாகும். இவனிடம் நடத்திய விசாரனையில் இது போல் பல முறை நான் கடத்தி வந்ததாகவும், இஸ்லாமியர்களுக்காக இது நடத்தியதாகவும் தெரிவித்த பின்னும், இவனைப் பற்றிய உண்மை செய்திகளை அரசு வெளியிடவில்லை என்பதும், இது சம்பந்தமாக யாரையும் கைது செய்யக்கூட இல்லை என்பது ஆந்திர அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. இவ்வாறு கொண்டு வருகின்ற பணம் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பதற்கு என்பதை அரசு தெரிந்தும், தெரியாமல் செயல்படுகிறது.
ஆந்திர காவல் துறையினர் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய்த பின்னர் கூட முறையான விசாரணையை நடத்தியிருந்தால் கூட 2013 பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.