ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் 2013 பிப்ரவரி மாதம் 21ந் தேதி இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 15க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படு காயமடைந்துள்ளார்கள். பயங்கரவாத தாக்குதல் நடந்து பல நாட்கள் முடிந்த பின்னும் மத்திய, மாநில அரசுகள் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு பதிலாக, வாய்ச் சவடால் அடிக்கும் செயலை செய்து கொண்டிருக்கின்றன.
ஏதோ ஹைதராபாத் நகரில் நடந்த முதல் குண்டு வெடிப்பு சம்பவம் இது கிடையாது.
2002-ல் நவம்பர் மாதம் 21ந் தேதி தில்சுக் நகர் சாயிபாபா கோவில் அருகில் குண்டு வெடித்து ஒருவர் பலியானார். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இரண்டாவது 2005-ல் அக்டேபார் மாதம் 1ந் தேதி ஹைதராபாத் காவல் துறையின் அதிரடிப் படை அலுவலகம் அருகே குண்டு வெடித்து இருவர் பலியானர்கள்.
மூன்றாவதாக 2007-ல் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி இரண்டு இடங்களில் மோசமான வகையில் குண்டு வெடித்தது. ஒன்று லும்பினி பார்க்கில் வெடித்தது. இரண்டாவது கோகுல்சாட் என்ற உணவு விடுதியில் வெடித்ததில் 32 பேர்கள் பலியானார்கள்.
தற்போது தில்சுக் நகரில் நடந்துள்ள தாக்குதல் நான்காவது தாக்குதலாகும்.
நான்கு முறை தாக்குதல் நடந்த போதும், ஆந்திரா காவல் துறையினர் அல்லது மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இது சம்பந்தமான குற்றவாளிகளை பிடித்ததா என்பது கூட தெரியாத நிலையில் அப்பாவி மக்கள் வாழ்கிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானாலும், அல்லது ஆந்திர பிரதேச அரசானாலும், பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கும் நோக்குடன் செயல்படவில்லை என்பதை அம்பலப்படுத்துவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். மேலும், பொடா சட்டத்தை ரத்து செய்து விட்டு, பயங்கரவாதிகளுக்கு அபயம் அளித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பயங்கரவாதத்தை அழிப்பது என்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
அரசுகளின் அலட்சிய போக்கு:
பல்வேறு ஊடகங்கள் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ந் தேதி ஹைதராபாத் நகரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் உள்ளது என்பதை மத்திய அரசின் உளவுத் துறையினரும், மத்திய உள்துறை அமைச்சகமும், ஆந்திரப்பிரதேச அரசுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தகவல்கள் கொடுத்தது என்றும், ஆனால் ஆந்திரப் பிரதேச அரசு அக்கரை காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கைதாகி சிறையில் உள்ள இந்தியன் முஜாஹிதீனைச் சார்ந்த சையத் மக்பூல் என்பவனை விசாரனை செய்த போதே கிடைத்த தகவல்கள் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரட்டை குண்டு வெடிப்பின் குற்றவாளியும் சையத் மக்பூல் என்றும் தெரியவந்துள்ளது. மக்பூல் பயங்கரவாத அனுதாபி அல்ல, இந்தியன் முஜாஹிதீனின் முக்கிய புள்ளி. 1999-ல்; ஆஸிம் கோரி (AzamGhori ) என்பவனின் நட்புடன், தனது பயங்கரவாத செயலுக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். கோரி லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பொறுப்பாளர் தல்பங்கி எனுமிடத்தில் நடந்த ஜமாத் கூட்டத்தில் இருவரும் சந்தித்துத் கொண்டார்கள் சந்தித்த போதே பாரத தேசத்தில் இஸ்லாமியர்களின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர நடத்தும் ஜிகாத்தில் இணைய வேண்டும் என்ற போதனையை மக்பூலுக்கு ஊட்டியவன் ஆஸிம் கோரி என்பது விசாரனையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மக்பூல் லஷ்கர்ருக்கு உதவி புரிவதற்காகவே ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தியவன். அவ்வாறு ஏற்படுத்திய அமைப்பின் பெயர் இந்தியன் முஸ்லீம் முகமதி முஜாஹிதீன் (Indian Muslim Mohammedi Mujahideen ) என்பதாகும்.
மக்பூல் தனது அதிக நேரத்தை ஹைதராபாத் நகரிலேயே தங்கியிருந்தான் என்றும் நகரில் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டதாக தகவலும் உள்ளது. 2000-ல் நடந்த என்கவுண்டரில் ஆஸம் கோரி கொல்லப்பட்டபின் ஹைதராபாத் நகரில் இந்து முஸ்லிம்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இந்துக்களின் நம்பிக்கைக்குறிய நபரான நகை வியாபாரி மகாவீர் பிரசாத் என்பவரை கொன்ற வழக்கிற்காக 2004-ல் மக்பூல் கைது செய்யப்பட்டான். காவல்துறையின் பொறுப்பின்மையின் காரணமாக மக்பூல் விடுவிக்கப்பட்டான். குண்டு வெடிப்பிற்கு சில மணி நேரத்திற்கு முன் துபாய் நகரிலிருந்து ஹவாலா மோசடியில் முக்கிய பங்கு கொண்ட சிலரும் அலைபேசியில் பேசிய தகவல்களையும் காவல் துறையினர் கண்டு பிடித்துள்ளார்கள். தில்சுக் நகரில் பொறுத்தப்பட்ட CCTV கேமராக்கள் குண்டு வெடிப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன் செயலிழந்து விட்டது ஏன் என்பது கேள்வி
மத்திய மாநில அரசுகளின் முரண்பட்ட கருத்துக்கள்:
உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் ஆந்திர மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் தீவிரவாத தாக்குதல் பற்றிய எச்சரிக்கை செய்யப்பட்டதாக தெரிவித்தார். உள்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்த போதே ஆந்திர மாநில டி.ஜி.பி.தினேஷ் ரெட்டி தெரிவித்த கருத்து தேசிய புலனாய்வு அமைப்பானது எங்கள் மாநிலம் உள்பட மாநிலங்களுக்கு கசாப் மற்றும் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்வினை இருக்கலாம் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவித்தார். ஆனால் இரண்டு அரசுகளும் தெரிவித்த கருத்துக்களை விட மூன்று மாதங்களுக்கு முன்பே ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகள் தாக்க கூடும் என்ற தகவல்கள் ஆந்திர காவல் துறையினருக்கு நன்கு தெரியும் என்று கூறப்படுகிறது. ஆகவே இரண்டு அரசுகளும் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் புதல்வரின் செல்வாக்கை குறைப்பதற்கு சி.பி.ஐ யை பயன்படுத்துவது பற்றிய சிந்தனை மட்டுமே இருந்தது என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்.
2007-ல் நடந்த மோசமான குண்டு வெடிப்பிற்கு பின் ஆந்திர மாநில அரசு பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பதற்கு என ஒரு தனி பிரிவு ஏற்படுத்தினார்கள். அதாவது தீவிரவாத எதிர்ப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் பயிற்சியும், தேர்ச்சியும் கொண்ட ஒரு தனிப் பிரிவை உருவாக்கியது. இதற்கு ஆக்டோபஸ் என்று பெயரிட்டது. இதற்கிடையே மாநிலத்தில் காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்த புதிதாக 30,000 காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். மாநிலத்தில் உள்ள உளவுத் துறை வலுப்படுத்தப்பட்டது. இவ்வளவு செயல்பாடுகளும் இருந்து தில்சுக் நகரில் குண்டு வெடித்தது, இந்த அமைப்புகளின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.
ஆந்திர அரசின் அலட்சிய போக்கு:
உள்துறை அமைச்சகம் சார்பில், வியாழக் கிழமை காலையிலேயே தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கையில், ஹைதராபாத் கோவை,ஹீப்ளி,பெங்களுரூ ஆகிய நான்கு நகரங்களுக்கும் தகவல் அனுப்பட்டு, குண்டு வெடிப்பு நடைபெறும் வாய்ப்பு உள்ளன என்று முன்னெச்சரிக்கை செய்யப்பட்டும், தடுப்பு நடவடிக்கையை ஆந்திர அரசு செய்யவில்லை என்பதற்கு உரிய பதிலை இன்னும் மாநில அரசு தெரிவிக்கவில்லை. 2007-ல் ஹைதராபாத் நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமாக அதே ஆண்டு ஜீன் மாதம் 15ந் தேதி ஐ.எஸ்.ஐ அமைப்பின் ஏஜென்ட் 27 வயதான முகமது அப்துல் சத்தார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தார்கள். இவனை விசாரனை செய்த போது, 2004-ல் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவன் என்பதும், ஹைதராபாத் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என்பது தெரிந்தும், இன்று வரை முறையான வழக்கு பதிவு செய்யவில்லை. 2007 மே மாதம் 18ந் தேதி மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான ஷாகித் பிலால் (Shahid Bilal ) என்பவனை ஜீலை 15ந் தேதி கைது செய்யப்பட்டான். இவனுடன் முகமது அப்துல் கரீம் குதாரி (Mohd.
Abdul Kareen Quadri ) என்பவனும் கைது செய்யப்பட்டான். ஆகவே ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத் இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக உள்ளது என்பது உண்மையாகும்.
2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி லும்பினி பார்க்கில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பண உதவி செய்வதற்காகவே இந்தியா வந்துள்ள துபாய் நாட்டைச் சார்ந்த நான்கு பேர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ2.36 கோடி கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவத்தை முழுமையாக விசாரனை நடத்தியிருந்தால் கூட 10க்கு மேற்பட்டவர்கள் பலியான சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால் ஆந்திர அரசானது முழுவதும் பயங்கரவாதிகளிடம் உறவு கொண்டாடி வரும் மஜ்ஜிலீஸ் அமைப்பினருடன் தேர்தல் உறவு வைத்திருக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சி, இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் மீது கடுமையான உறுதியான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதே முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. முன்னாள் சிமி இயக்கத்தினர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் என்று கூறினாலும், காங்கிரஸ் கட்சியின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கோபம் வந்து விடும்.
2012-ம் வருடம் மே மாதம் 1ந் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்ட் முகமது தாரீக் அன்சூம்(Mohammed Tariq Anjum )ஆந்திர காவல் துறையினர் தங்களது பாதுகாப்பில் வைத்து ஒரு மாத காலம் விசாரணையை நடத்தினார்கள். இவனது பின்ணணி என்னவென்றால், இவன் முன்னாள் சிமி இயக்கத்தை சார்ந்தவன். தற்போது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர். விசாரணையில் தெரிவித்த தகவல்களை கொண்டு கூட பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருந்தால் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்காது. இதே மாதம் 20ந் தேதி மாநில உளவு பிரிவுத் துறை லஷ்கர்-இ-தொய்பாவின் நஜிஹில்லா (Najeehullah )என்பவன் நாச வேலைகளை செய்வதற்காகவே இன்னும் சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு ஹைதராபாத் நகரில் நுழைந்திருக்கிறான் என கூறி தேடுதல் வேட்டையை நடத்தினார்கள். நடத்திய தேடுதல் மூலம் குற்றவாளிகள் கிடைத்தார்களா என்று தெரியவில்லை. ஆகவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பதிலாக, திசை திருப்பும் காரியங்களையே செய்து வருகிறது.
2012-ம் வருடம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஒருவரிடம் சோதனை செய்த போது 4மில்லியன் கள்ள நோட்டு கிடைத்தது. இது மிகப் பெரிய தொகையாகும். இவனிடம் நடத்திய விசாரனையில் இது போல் பல முறை நான் கடத்தி வந்ததாகவும், இஸ்லாமியர்களுக்காக இது நடத்தியதாகவும் தெரிவித்த பின்னும், இவனைப் பற்றிய உண்மை செய்திகளை அரசு வெளியிடவில்லை என்பதும், இது சம்பந்தமாக யாரையும் கைது செய்யக்கூட இல்லை என்பது ஆந்திர அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. இவ்வாறு கொண்டு வருகின்ற பணம் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பதற்கு என்பதை அரசு தெரிந்தும், தெரியாமல் செயல்படுகிறது.
ஆந்திர காவல் துறையினர் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய்த பின்னர் கூட முறையான விசாரணையை நடத்தியிருந்தால் கூட 2013 பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
2010 ஜனவரி மாதம் 18ந் தேதி 2007 மே மாதம் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் குற்றவாளியின் நண்பரான ஷேக் அப்துல் காஸா(Shaik Abdul Khaja alias Amjad )என்பவனை கைது செய்தார்கள். இவன் தென்னக லஷ்கர் இ தொய்பாவின் கமாண்டர், முகமது அப்துல் ஷாகித் பிலால்Mohammed Abdul Shahid Bilal )என்ற குற்றவாளியின் நண்பன். 2005லிருந்து ஷேக் அப்துல் காஸா என்பவன் தலைமறைவு வாழ்கை நடத்தி வந்தவன். இவன் பயங்கரவாத இயக்கமான ஹர்கத்-உல்.ஜிகாத-அல்-இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டவன். இவ்வளவு ஆதராங்கள் கிடைத்தும் கூட காவல் துறையினர் இவன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள்.
ஹைதராபாத் தீவிரவாதிகளின் மையம்:
1990ம் ஆண்டு முதல் ஹைதராபாத் நகரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது. பாரத தேசத்தின் மற்ற பகுதிகளில் பயங்கரவாதம் தலை தூக்கும் போது ஹைதராபாத் நகரில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களின் ஸ்லிப்பர் செல் செயல்பட்டு கொண்டிருந்தது. குறிப்பாக மையப்படுத்த வேண்டுமானால், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல்இ ஐயூஎம். சிமி (LeT,Hijbul, IUM, SIMI ) போன்ற இயக்களை குறிப்பிடலாம். இந்த இயக்கத்தைச் சார்ந்த சிலரைக் கைது செய்து, விசாரித்த போது, பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காகவே பங்களா தேஷ் வழியாக பாகிஸ்தான் சென்று, பயிற்சி முடித்த பின் நேபாளம் வழியாக மீன்டும் ஹைதராபாத் நகருக்கு வந்து விடுவோம் என தெரிவித்தார்கள். இதுவரை ஆந்திர காவல் துறையினர் பயங்கரவாதிகள் என சந்தேகித்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆகும். இவர்களில் மூவர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர்கள், மற்றவர்கள் பங்களா தேஷ் மற்றும் காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து கைப்பற்றபட்டவை, 25 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து, 20 சீன கைத்துப்பாக்கிகள், 8 கிலோ சில்வர் நைட்ரேட் போன்றவை கைப்பற்றப்பட்டன. தற்போது ஹைதராபாத் நகரில் உள்ள பயங்கரவாத அமைப்புகள். Hijbul Mujahideen, Iqhwan UL Muslimeen, Tanjeem Islam UL Muslimeen, AL Jihad, Muslim Mujahideen, Lashkar-e-Toiba, Deen Dar Anjuman, Hijb ul Mujahideen, Abdul Azeez gang, SIMIஆகியவையாகும். மும்பை டெல்லிக்கு பின் அதிக முறை பயங்கரவாத தாக்குதல் நடந்த இடம் ஹைதராபாத்.
மேலே குறிப்பிட்டுள்ள இயக்கங்களுடன் பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி, பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ ஆகிய இரண்டும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால்இ பயங்கரவாத தாக்குதலுக்கு இவர்களின் கைங்காரியமும் உண்டு.
2002க்கு பின் மும்பை நகரில் 14 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. டெல்லியில் 7 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. மூன்றாவதாக ஹைதராபாத் நகரில் நான்கு வெடி குண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. ஹைதராபாத் நகரில் நடந்துள்ள வெடி குண்டு தாக்குதல்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பங்களா தேஷ் நாட்டைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமிய அமைப்பு என்பது காவல் துறையினரும், உளவுத் துறையினரும் நம்புகின்ற செய்தியாகும். இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஹைதராபாத் நகரை தங்களது மையமாக தேர்வு செய்ய முக்கியமான காரணம் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள் என்பதாகும். ஹைதராபாத் நகரில் உள்ள மொத்த ஜனத் தொகையில் 40 விழுக்காடுகள் அதாவது 7 மில்லியன் மக்கள் இஸ்லாமியர்கள். இவர்களை முளை சலவை செய்வதில் வெற்றி கண்டதால், அனைத்து இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களின் ஸ்லிப்பர் செல் செயல்படுகிறது.
ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த அட்வகேட் திரு. ராம் மோகன் ரெட்டி தெரிவித்த கருத்து: இங்குள்ள இஸ்லாமியர்களின் வீடுகளில் செல் இல்லாத வீடு கிடையாது, இதன் மூலம் தினசரி பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையே இன்டர்நெட்டிலும் இவர்களின் தொடர்பு தொடர்கிறது. இந்த தொடர்பானது பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக மாறிவிடுகிறது என்றார். இது தான் இன்றைய ஹைதராபாத் நகரத்தின் நிலை. மேலும் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் ஹைதராபாத் நகரில் இயங்கி கொண்டிருக்கின்றன.
1992-ல் தொலிசௌக்கி என்ற பகுதியில் முஜீப் (Muzeeb)என்பவனால் துவக்கப்பட்ட இயக்கம் ஹிஜிபுல் முஜாஹிதீன் (Hijbul Mujahideen ) இவன் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றவன்இ துணை காவல் துறை கண்காணிப்பாளர் திரு எஸ்.பி.கிருஷ்ண பிரசாத் மற்றும் வெங்கடேஷ்வர ராவ் ஆகிய இரு அதிகாரிகளையும் கொலை செய்தவன். இன்னும் இவன் தலைமறைவாகவே இருக்கிறான். 1993-ல் ஹைதராபாத் நகரில் வெடி குண்டு தாக்குதல் நடத்துவதற்கு முயன்ற போது தடுத்து, கைது செய்யப்பட்ட நஸிர் அகமது பட் மற்றும் கோர் அமீன் மீர் என்பவர்களால் துவக்கப்பட்ட பயங்கரவாத இயக்கம் இக்வான் உல் முஸ்லீமீன் (Iqwan Ul Muslimeen ) என்ற அமைப்பும் ஹைதராபாத்தில் இயங்குகிறது. துலைநகரில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பாப்பையா , நந்தடராஜ் கௌட் என்பவர்களை கொலை செய்த இயக்கம் தன்ஜீம் இஸ்லாம் உல் முஸ்லீமீன் என்ற அமைப்பு. இந்த அமைப்பு மும்பை நகரை சார்ந்த அப்துல் கரீம் என்பவனையும் உள்ளுர்வாசியான அஸிம் கோரியும் இனைந்து நடத்திய கொலை தாக்குதல் 1993-1994ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள்.
1994-ல் கைது செய்யப்பட்ட பிலால் அகமது குரு என்பவனால் துவக்கப்பட்ட அல் ஜிகாத் (Al Jihad ) என்ற அமைப்பும், 3கிலோ ஆர்;.டி.எக்ஸ் வெடி மருந்து வைத்திரு;நத வழக்கில் கைதான அக்பர் அலி என்பவனால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான முஸ்லீம் முஜாஹிதீன் (Muslim Mujahideen) ஹைதராபாத் நகரில் 1999 ஜீலை மாதம் 7ந் தேதி தொடர் குண்டு வெடி தாக்குதலுக்கு திட்டமிட்டதாக காஷ்மீர் காவல் துறையின் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சலீம் ஜீனாய்ட்( Saleem Junaid), அப்துல் பரீக்;(Abdul Fariq ), அப்துல் காபா(Abdul Kafa), மற்றும் 13 பேர்கள் ஆந்திர பிரதேசத்தின் லஷ்கர் -இ-தொய்பாவின் பொறுப்பாளர்கள் என்பது தெரிய வந்தது. லஷ்கர்-இ-தொய்பாவின் சகோதர பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஸ்லீமீன் முகமதி முஜாஹிதீன் . இதன் பொறுப்பாளரான அஸீம் கோரி என்பவன் 1999-ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிற்கும், ஆந்திர பிரதேசத்தில் நடத்திய குண்டு வெடிப்பிற்கும் முக்கிய குற்றவாளியாவான்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மகாவீர் பிரசாத் என்பவரை கொன்றவனும் இவன்தான். இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காகவே பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐயின் மூலம் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு தீன் தார் அஞ்சுமென் என்பதாகும். இந்த அமைப்பின் மூலம் ஹைதராபாத் நகரில் மட்டும் 20க்கு மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கு பயங்கரவாத தாக்குதல் பயிற்சியும், வெடி குண்டுகள் கையாளும் பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன அதில் மிகவும் முக்கியமான அமைப்பு ஹிஜ்புல் முஜாஹிதீன் (Hijbul Mujahideen ) , அப்துல் அஸீஸ் கேங் (Abdul Azeez gang )இவர்களுக்கு முழு உதவி செய்யும் அமைப்பாக சிமி இயங்குகிறது. 30 வயது கடந்த சிமி அமைப்பினர் மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு அமைப்புடன் தங்களது தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். இந்த இயக்கங்களுடன் ஹைதராபாத் நகரில் உருவாக்கப்பட்ட மேலும் இரண்டு அமைப்புகள் உள்ளன:அவை Jihad-o-Shahadath (DJS0, Tahreek Tahfooz Shaer-e-Islam (TTSI)என்பதாகும். இந்த இயக்கங்களில் பணி பயங்கரவாத செயல்பாட்டிற்கு உதவக் கூடிய நபர்களை கண்டு பிடிப்பதும், பயங்கரவாத பயிற்சிக்கு உரிய இஸ்லாமியர்களை கண்டு பிடித்து பாகிஸ்தானுக்கு அனுப்புவதும் இவர்களின் முக்கிய பணியாகும்.
இவ்வாறு ஹைதரபாத் நகரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் சொர்க்க பூமியாக மாறியுள்ளது. நாடு விடுதலை பெற்ற தினத்திலிருந்து ஹைதராபாத் நகரில் இந்து முஸ்லீம் கலவரங்கள் தொடர் கதையாகவே உள்ளது. பல்வேறு தருணங்களில் இந்தக் கலவரங்களினால் உயிர் சேதமும் நடந்துள்ளது. ஆகவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களில் ஓட்டிற்காக அவர்களது பயங்கரவாத தொடர்புகளை, கண்டும் காணாமல் இருப்பதால் பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த இயலாமல் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தனக்காக தெளிவான பொருளாதார கொள்கைகளோ, தார்மீக கொள்கைகளோ ஒன்றும் இல்லாத கொள்ளையர் கூட்டம்மட்டுமே என்பது தெளிவு. வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்களை திருப்பி அனுப்பாமல், இந்தியாவிலேயே தங்க அனுமதித்த காங்கிரஸ் அரசு ஒரு தீவிரவாத இயக்கம் மட்டுமே. அவர்களில் பலர் தீவிரவாத ஜிகாத் போரில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈடுபட்டு வருகின்றனர். அசாம் மட்டுமல்ல அனைத்து இந்தியாவே பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு தீனி போடும் காங்கிரசை மக்கள் விரைவில் நாட்டைவிட்டே விரட்டி அடிப்பார்கள்.
திரு.ஈரோடு சரவணன் கோர்வையாக பல தகவல்களை எழுதியிருப்பது பாராட்டுக்குறியது. எனினும் சில Rantings / Rhetoricsக்குகளை
தவிர்த்திருக்கலாம்.
உதாரணமாக,
“ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த அட்வகேட் திரு. ராம் மோகன் ரெட்டி தெரிவித்த
கருத்து: இங்குள்ள இஸ்லாமியர்களின் வீடுகளில் செல் இல்லாத வீடு கிடையாது,
இதன் மூலம் தினசரி பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டு
இருக்கிறார்கள். இதற்கிடையே இன்டர்நெட்டிலும் இவர்களின் தொடர்பு
தொடர்கிறது. இந்த தொடர்பானது பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுக்கும்
விதமாக மாறிவிடுகிறது என்றார். இது தான் இன்றைய ஹைதராபாத் நகரத்தின்
நிலை.”
மேற்குறிப்பிட்ட பத்தி அவசியமில்லாதது. முஸ்லீம்கள் அனைவருமே ஏதோ ஒரு
விதத்தில் பாகிஸ்தானுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதெல்லாம்
கடும்போக்கு ஹிந்துத்துவா அமைப்பினர் வைக்கும் குற்றச்சாட்டுகள். இவற்றை
ஏற்றுக் கொள்ள முடியாது.
திரு.சரவணன் வேறு ஒரு முக்கிய தகவலை எழுதவில்லை.
ஹைதராபாத் நகருக்கு பயங்கரவாத அச்சுருத்தல் உள்ளது உளவு அமைப்பிற்கு
தெரிய வந்தது நவம்பர்-டிசம்பரில். இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச்
சேர்ந்த இருவர் டில்லி சிறையில், விசாரணையின் போது, ஹைதராபாத் நகரை
குறிவைத்திருந்ததாக தெரிவித்தனர்.
மேலும் முத்தாய்ப்பாக, குண்டுவெடிப்பு நிகழ்ந்த “தில்சுக் நகர்”ஐ வேவு
பார்த்ததையும் கூறியிருந்தனர்.
அடுத்து, தில்சுக் நகரை, தான் 400 முறை சுற்றி வந்ததாகவும், சந்தேகம் ஏற்படும்
வகையில் எதையும் காணவில்லை என்றும் ஒரு போலீஸ்காரர் கூறியுள்ளார்.
ஹைதராபாத் நகரம் தாக்கப்படலாம் என்ற தகவல் காவல்துறைக்கு
தெரிவிக்கப்பட்டால் கூட, 100 சதவிகிதம் அத்தாக்குதலை தடுக்க முடியாது
என்பதுதான் எதார்த்தம். சில முக்கிய இடங்களில் பாதுகாப்பு
அதிகரிக்கப்படுவதைத்தவிர பெரிதாக எதுவும் செய்ய முடியாது.
ஆனால், குறிப்பாக தில்சுக் நகர் நோட்டம் விடப்பட்டது என்ற தகவல்,
ஹைதராபாத் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டதை பார்க்கும் போது, காவல்துறையில்
திறமையின்மைதான் முன்னுக்கு வருகிறது.
அரசியல் ரீதியாக இதை காங்கிரஸின் தீவிரவாத எதிர்ப்பு நிலைகளை விமர்சனம்
செய்வது ஒரு வகை.
ஆனால் என்னைப்பொருத்தவரை, இந்திய காவல்துறையினர் தெளிவான துப்பு
இருந்தும் கோட்டை விட்டது, ஒரு அவமானம் என்றே கருதுகிறேன். இது
போன்ற துப்பு கிடைத்தால், மேற்கத்திய நாடுகள் வெடிப்பை கண்டிப்பாக தடுக்கும்
திறன் பெற்றவர்கள் என்பதை கூறித்தான் ஆகவேண்டும்.
எனவேதான், நான் எப்பொழுதுமே, அமேரிக்காவிடமிருந்து நம் காவல் துறை,
மற்றும் வேவுத்துறை அதிகாரிகள் பயிற்சி பெற வேண்டும் என்று பலமுறை
எழுதிவருகிறேன்.