ஒரு செடியைக் கற்பனை செய்துகொள். தான் வளர்வதற்கும், வலிமை பெறுவதற்கும், உயரமாக நிற்பதற்கும், அது சூரியனைச் சார்ந்து இருக்கின்றது. அது எவ்வளவு அதிகமாக சூரியனைச் சார்ந்து இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக வளர்கிறது. செடி வலிமையாக வளர்வதில் சூரியனுக்குத் தானாக எந்த ஈடுபாடும் கிடையாது. ஆனால், சூரியன் கொடுக்கும் ஒளியையும் சக்தியையும் வேண்டி, அந்தச் செடியானது சூரியனைத் தீவிரமாகச் சார்ந்து இருக்கும்போது, பெரிதும் வளர்ந்து மரமாகின்றது. ஒளியும், சக்தியும் கொடுக்கும் நற்பண்பின் மூலம் சூரியன் தன்னுடைய சக்தியைக் குறைத்துக்கொள்வதில்லை… அது விளக்கெண்ணை என்று உனக்குத் தெரியாது. தேன் என்று நினைத்தாய். குடித்த பிறகு உன் எதிர்வினையானது, நீ அதை என்னவென்று நம்பினாயோ அந்த நம்பிக்கையைச் சார்ந்ததா, அல்லது, விளக்கெண்ணை தனது வேலையைக் காண்பித்துவிட்டு வெளியே வந்ததா?…
View More நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன?Tag: தெய்வ நம்பிக்கை
நம்பிக்கை – 3: நான் யார்?
நீ பார்ப்பதாகச் சொல்லும் அனைத்துப் பொருட்களும், நீ நடைமுறப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் உருவங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களே அன்றி வேறில்லை. அதற்கு மேல் அவற்றுக்கு மதிப்பில்லை . ஆம். நாம் என்ன செய்கிறோம் என்றால், அதையும் தாண்டிச் சென்று, அந்தப் பொருட்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பொருட்களாக, நபர்களாக, உறவுகளாக, சொத்துக்களாக, நமது சொந்த உடலாக, நமது சாதனைகளாக, என்று எதுவாக இருந்தாலும், அவைகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இல்லையா?… இருக்கலாம். ஆனால், அதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?.. மாமா, நாம் கடவுளைப் பற்றி விவாதிப்போம் என்று நினைத்தேன். நீங்கள் என்னை சிக்க வைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?…
View More நம்பிக்கை – 3: நான் யார்?நம்பிக்கை – 2: யார் கடவுள்?
நீ சாப்பிடும் உணவின் சக்தியையும் பலத்தையும் உன்னுடைய இடது காலுக்கு மட்டும்தான் நீ அனுப்பவேண்டும் என்று நான் சொன்னால், உன்னால் அவ்வாறே செயல்படுத்த முடியுமா?…. இப்போது உன் நினைவிலிருந்து அந்தப் பாடலை அழித்துவிடேன் – அதெப்படி முடியும்? என்னால் முடியாது! – ஆகவே, உன் மனதும் உன் கட்டுப்பாட்டில் இல்லை. வேறு எதுதான் உன்னுள் உன் கட்டுப்பாட்டில் உள்ளது? என்னையோ அல்லது வேறு யாரையோ உன்னால் கட்டுப்படுத்த முடியுமா?… உன் உடலின் செயல்பாடுகளையும், மனத்தின் செயல்பாடுகளையும் உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை எனும்போது, அவை வேறு ஒன்றால் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதையும் நீ ஒத்துக்கொள்கிறாய்… ஆம், ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன்… அதே தான் மற்ற உயிரினங்களையும் அதே விதத்தில் கட்டுப்படுத்துகிறது… இந்த அடையாளப்படுத்துதல் இருக்கின்றவரை நம்மால் உருவமில்லாத எதையுமே கண்முன் கொண்டுவர முடியாது. இந்த அடையாளப்படுத்துதல் என்பதுதான் கடவுளுக்கு உருவமளிப்பதற்கான காரணம்….
View More நம்பிக்கை – 2: யார் கடவுள்?நம்பிக்கை – 1
“என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த என் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக, எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள கருத்துப்பொருளான “கடவுள் நம்பிக்கை” பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.முதல் ஆறு அத்தியாயங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான்… ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து என் மாமன்கள், அத்தைகள் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் இது பிடித்துப்போக, அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதைப் படிக்க விரும்பி அவ்வாறே செயல்பட்டனர்” என்ற முன்னுரையுடன் இந்தத்தொடரை எழுதியிருக்கும் திரு.T.V.ஜெயராமன் ICWA படிப்பில் 1987-ல் இந்திய அளவில் மூன்றாவதாகத் தேர்வு பெற்று Chartered Accountant and a Cost Accountant தொழிலை மேற்கொண்டவர். மேலும் பல தளங்களில் நிபுணத்துவம் பெற்று, தேசிய அளவில் திறன் மேம்பாட்டுத் (Skill Development) துறையில் வேலையில்லா இளைஞர்களுக்குப் பல தளங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் உன்னதப் பணியைத் திறம்படச் செய்து வந்தவர். ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். 2017ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் மறைந்தார்..
View More நம்பிக்கை – 1கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்
ஒருவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐ.சி.யு.வில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருப்பது, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்கள், அறிஞர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையை அளித்துக் கொண்டிருந்தது….அந்த அசரீரியான குரலில் திரு வெங்கட்ராமனின் கனவில் அந்த அறிவுரை ஒலித்தது. ஒரு ஆசிரியர் மாணவனுக்கு கட்டளையாக எடுத்துச்சொல்வது போல தமிழில் தெள்ளத்தெளிவாக அந்த அறிவுரை ஒலித்தது… தனக்கு டாக்டர் சார் குடும்பத்தோடு அதிக நெருக்கம் கிடையாது. இதனை எப்படி சொல்வது? சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்களா?… ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியின் ஆசியினால் வறுமையில் வாடும் 11 எழை நோயாளிகளுக்கு சங்கர நேத்ராலயாயில் ஒவ்வொரு வருடமும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை கிடைத்து வருகிறது….
View More கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்வீரமுண்டு… வெற்றியுண்டு!
இந்த நாளில் தான், பாரதத்தின் உயர்வுக்காகப் பாடுபடும் ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நான்கு சிறுவர்களுடன் நாகபுரியில் துவக்கினார் [..] போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் மக்களுக்கு அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் [..] கல்வி பயில்வதற்கான ‘எழுத்தறிவித்தல்’ விஜயதசமியில் துவங்குவது நமது மரபு. வித்யாரம்பம் இந்நன்னாளில் துவங்கினால், நன்மை என்பது நாடு முழுவதுமே பரவலாக காணப்படும் நம்பிக்கை [..] இறை சக்தியும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும். அங்குதான் அமைதி நிலவும் [..]
View More வீரமுண்டு… வெற்றியுண்டு!