இயேசு ஆண்-பெண் கூடலினால் பிறக்கவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டால்கூட, அவர் ஒரு சிறப்பான மனிதர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே அன்றி ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்த அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது
பைபிள் வசனத்திலிருந்து 1890 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு வாழ்ந்தகாலத்தில் உலகின் முடிவு நெருங்கிவிட்டதை அவர் சிலருக்கு உரைத்திருக்கிறார் என்பதும், அவர்களில் சிலர் நியாயத்தீர்ப்பு நாளையும் காண்பதற்கு உயிரோடு இருப்பார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிகிறது.
இயேசு சொன்னதைக் கேட்டவர்கள் ஒருவராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?
இயேசு தான் கடவுள் அல்லர் என்பதை உணர்ந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவரது நாமத்தை கர்த்தர், கர்த்தர், இயேசு, இயேசு என்று சொல்லுவதால் சொர்கத்துக்குப் போகமுடியாது என்பதும் புலப்படுகிறது.