அபவாதம் பொறுக்காத பிராட்டி, தான் உடனேயே கங்கையில் விழுந்து உயிர்துறக்க விரும்புகிறாள். ஆயினும் ஶ்ரீராமபிரானின் திருவுள்ளத்திற்கு அனுசரணையாக, வால்மீகி ஆஶ்ரமத்தில் உயிர் வாழ்கிறாள். தானும் பரதனைப்போல, ”ஶ்ரீராமபிரானை நேரில் கண்டு, இதுபற்றி விவாதித்துவிட்டு, பிறகு கங்கையில் விழுவதா, அல்லது உயிர்வாழ்வதா என்று முடிவெடுக்கின்றேன்! ம்ம்! லக்ஷ்மணரே! ரதம் அயோத்திக்குத் திரும்பட்டும்!!” என்றெல்லாம் ஆர்பாட்டம்செய்யவில்லை.
View More ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4