முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது….
இரத்தினங்கள் இழைத்த இருக்கை – பனிநீராடல் – திவ்யமான ஆடைகள் – பல்வேறு மணிகளால் அணிகலன்கள் – கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம் – மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள் – தூபம் தீபம் – தேவா தயாநிதி பசுபதி – இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும் ஏற்றிடுக…