சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் ஒரு பகுதியாக, அதன் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது குப்புசாமி சாஸ்திரி சம்ஸ்கிருத ஆய்வு மையம்… நூற்றுக்கணக்கான சுவடிகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன; இந்த சுவடிகளில் பல 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை… 1995 வரை இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அளித்து வந்த நிதியுதவி, பிறகு நின்று விட்டது.. முற்றிலும் தனியார் நன்கொடைகளின் உதவியுடனேயே செயல்பட்டு வருகிறது.. நிதியுதவி சீராக இல்லாமல் ஆய்வு மையம் சிரமப் படுகிறது. இந்நிலையில் இந்தியப் பண்பாடு மற்றூம் பாரம்பரியத்தின் மீதும், சம்ஸ்கிருத மொழி மீதும் பற்றுக் கொண்டோர் உதவிட வேண்டுமென இந்த ஆய்வு மையம் கோரிக்கை வைத்துள்ளது….
View More சென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறதுTag: நிதியுதவி
யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை
உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டிடக் குழு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறது.
View More யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை