சென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறது

சென்னை மயிலாப்பூரில் உள்ள  சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் ஒரு பகுதியாக, அதன் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது குப்புசாமி சாஸ்திரி சம்ஸ்கிருத ஆய்வு மையம். 1927ம் ஆண்டு  சம்ஸ்கிருத அறிஞர் குப்புசாமி சாஸ்திரி அவர்களால் தொடங்கப் பட்ட இந்த ஆய்வு மையம்  இந்தியவியல் (indology) துறையிலும் சம்ஸ்கிருத மொழி குறித்தும் பல குறிப்பிடத் தக்க புத்தகங்களை வெளியிட்டுள்ளது. வேதம், வேதாந்தம், நியாய சாஸ்திரம், மொழியியல், இலக்கணம், யோகம், காவியம், சிற்பம் இசை நடனம் முதலான நுண்கலைகள், சோதிடம், சைவம், வைணவம் தொடர்பான நூல்களும் இதில் அடங்கும்.  முதன்முதலில் தொல்காப்பியத்தின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டதும் இந்த ஆய்வு மையமே.  இன்றும்  நூற்றுக்கணக்கான சுவடிகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன; இந்த சுவடிகளில் பல 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை.

1995 வரை இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வந்தது. பிறகு மத்திய அரசு நியமித்த நிர்வாகக் கமிட்டியினருக்குள் உண்டான கருத்து வேறுபாடு  காரணமாக அது முழுதுமாக நின்று விட்டது. பிறகு, முற்றிலும் தனியார் நன்கொடைகளின் உதவியுடனேயே  இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் “ராஷ்டிரீய சம்ஸ்கிருத சம்மான்” அமைப்பிடம்  நிதியுதவியைத் தொடரக் கோரி  ஆய்வு மையம் சமர்ப்பித்த கோரிக்கை  நிறைவேற்றப் படாமல் இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது.

இந்நிலையில், இந்த ஆய்வு மையத்தை நடத்திச் செல்லவும், இதில் ஆய்வு செய்து வரும் 24 மாணவர்கள், அறிஞர்களது பணிகளைத் தொடரவும், பாரம்பரிய பொக்கிஷங்களான சுவடிகளைப் பாதுகாக்கவும் தேவையான நிதியுதவி சீராக இல்லாமல் ஆய்வு மையம் சிரமப் படுகிறது.

இந்தியப் பண்பாடு  மற்றூம் பாரம்பரியத்தின் மீதும், சம்ஸ்கிருத மொழி மீதும் பற்றுக் கொண்டோர் உதவிட வேண்டுமென இந்த ஆய்வு மையம் கோரிக்கை வைத்துள்ளது. ரூ. 2000 செலுத்து ஆயுட்காக போஷகராகும் நன்கொடையாளர்களுக்கு, ஆய்வுமையம் பதிப்பித்துள்ள சம்ஸ்கிருத  நூல்கள் அனுப்பி வைக்கப் படும் என்றும் அறிவித்துள்ளது.

இது குறித்து டைம்ஸ் ஆஃப் நாளிதழில் வந்த செய்தி

ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கோரிக்கை

ஆய்வு மையம் இணையதளம்

நன்கொடை செலுத்திட விரும்புவோர்  THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE என்ற பெயரில் தங்கள் காசோலை (அ) டிமாண்ட் டிராஃப்டுகளை இந்த முகவரிக்கு அனுப்பலாம் –

Dr. K.S.Balasubramanian , Dy.Director, Kuppuswamy Sastri Research Institute, Sanskrit College, Mylapore, Chennai – 600004.
Phone- 044-24985320
Email: ksrinst@gmail.com

அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் நேரடியாக நன்கொடைகளை செலுத்தி விட்டு   மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம்.

THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE.
Account No. 395702010007408
Union Bank of India – Mylapore Branch
NEFT NO: UBIN0539571
IFSC CODE NO.600026009

10 Replies to “சென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறது”

 1. அறிவிப்பினை தக்க சமயத்தில் வெளியிட்டு உதவிய தமிழ் இந்துவுக்கு மனமார்ந்த நன்றிகள் பல. உங்கள் பணி மேலும் தொடர்ந்து பெருக செல்வ முத்துக்குமரன் அருள் புரிவான்.

 2. தமிழ் நாட்டில் எதற்கு வடமொழி ஆய்வு மையம்?
  அதனால் தானே எங்கள் தாய் மொழி சில நூற்றாண்டுகள் பொழிவின்றி இருந்தது.

  சிவநேசன்

 3. தம்பி சிவநேசன்,

  நமது தாய்மொழி பொலிவின்றி இருந்தது சமஸ்கிருதத்தால் அல்ல. நமது தாய் மொழியில் நமது மக்கள் பேசி எழுதி படித்தால் தான் நம் தாய் மொழி வளரும். தமிழின் எதிரி திராவிடர் கழகமும், திமுகவும் தான். உன் வீட்டு வேலைக்காரியுடன் கூட இங்கிலீஷில் பேசிப்பழகு என்று சொல்லி, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி , தமிழன் ஒரு காட்டுமிராண்டி என்று சொன்ன ஈ வே ரா வை தலைவன் என்று சொன்ன கிறுக்கு இயக்கங்களால் தான் தமிழ் தாழ்ந்தது.

  தமிழை காக்க ஆங்கிலம் ஒரு கேடயம் என்று சொல்லி , ஆங்கில மோகத்தை திருட்டு கழகங்கள் ஊட்டி விட்டதால், தமிழன் ஆங்கில மீடியத்தில் தான் படிக்கவேண்டும் என்று திசை மாறிப்போனான்.இன்று ஆங்கிலம் கேடயமாக இல்லை என்பதும், தமிழின் கழுத்தில் அதுவே கத்தியாக குத்தி வருகிறது என்பதும் உண்மை.. இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு, தமிழ் நாட்டில் யாருமே தமிழ் வழி பள்ளிகளில் கல்வி பயில மாட்டார்கள். ஏனெனில் அதுபோன்ற ஒரு சூழலை திருட்டு கழகங்கள் வளர்த்துள்ளன.

  பண்டிதர் நேரு , பிரதமராக இருந்த போது, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, மாநில மொழிகளில் , மாணவர்களுக்கு தேவையான பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகங்களை மலிவு விலையில் அச்சிட , மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த நிதி உதவியை முழுவதும் பயன்படுத்தாமல் , வருடாவருடம் பெரும் பகுதியை கழகப்போலிகள் வருடம் முடிந்தபின் , மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தில் , கல்லூரிக்கல்வி பிரிவு என்று ஒரு பிரிவு காங்கிரசு அரசாண்ட போதே செயல்பட்டது. அந்த பிரிவு கழகங்கள் ஆட்சியில் தான் செயல்படாமல் மூட வழிவகை செய்தனர். தகவல் அறியும் உரிமை சட்டம் 2005- ன் கீழ் , மத்திய அரசுக்கு மனுச்செய்து, 1967 – முதல் 2011 -வரை நாற்பத்து நாலு வருடங்களில் , எத்தனை வருடம் வருடவாரியாக , எவ்வளவு நிதி உதவியை திருப்பி கொடுத்தார்கள் என்று கேட்டு , வாங்கி படித்துப்பார். கழகத்தலைவர்களின் மோசடி அப்போதாவது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன். தமிழின துரோகிகள் ஆன திராவிடர் கழகம், மற்றும் திமுக போன்ற உதவாக்கரைகளின் பொய் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்த உன்னைபோன்றோர் ஏராளம். இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி சிவிலியன் தமிழர்களை கொல்ல துணை போன திருடர்களை இப்போதாவது புரிந்து கொள். இவர்களை நம்பினால், இனி தமிழ் நாட்டு தமிழனுக்கும் அதே கதி தான் உண்டாகும்.

 4. சிவநேசன் போன்றோர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை தமிழ்நாட்டில் இது போன்று மனப்பதிவு (mind set) ஏற்பட்டு விட்டது. நம் மொழியில் இருக்கும் பற்றை காட்ட மற்ற மொழிகளை தூற்ற வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே உள்ளது.
  பண்டைக் காலத்தில் தமிழ் புலவர்களும் வடமொழி புலவர்களும் இணைந்துதான் பல படைப்புகளை அளித்தனர். மற்ற எந்த மாநிலத்திலும் வடமொழி வெறுப்பு கிடையாது. தமிழ்நாட்டில் இது போன்ற நிலைமை ஏற்பட நம்முடைய திராவிட இயக்கங்களே காரணம்.
  .

 5. // தமிழ் நாட்டில் எதற்கு வடமொழி ஆய்வு மையம்? //

  பின் வட நாடு, வெளி நாடு எல்லாவற்றிலும் தமிழர் மட்டும் இருக்கலாமா என்று அவர்கள் கேட்டால்? தமிழை சமஸ்க்ருதம் ஒன்றும் செய்யவில்லை. இது தில்லு முள்ளு கழகத்தின் விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழை இவர்கள் ஒன்றும் வளர்க்கவில்லை. அவ்வையாரும், உ வே சா வும், பாரதியாரும், வள்ளுவரும், கம்பனும் பண்ணாத சேவையை இந்த திருடர் செய்து விட்டாராக்கும்? எண்ணிப் பார்க்கவே கேவலமாக இல்லை?

 6. அன்பு சிவநேசன்
  தமிழ் நாட்டில் எதற்கு சமஸ்கிருதமையம் என்று கேட்கிறீர்கள். உங்கள் பெயரில் சிவ நேச என்பன இரண்டும் வடமொழி என்பதை அறியீரா. தமிழ் நாட்டில் தான் வடமொழியை வளர்த்தவர்கள் இருந்தார்கள் வடமொழிப்பதங்களை எப்படி தமிழாக்கவேண்டுமென்று சொன்ன தமிழ் தாதை தொல்காப்பியரும் இருந்தார். சிவ என்பது சிவன் என்றும் நேஸ என்பது நேசன் ஆனதும் அப்படியே.
  இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருதக்காழ்ப்பு என்பது கிறித்தவ கால்டுவெல் சிந்தனை. அதனை தூக்கிப்பிடிப்பவர்கள் கால்டுவெல்லின் கள்ளப்பிள்ளைகள். தங்கள் முன்னோர்களை மறுதலிப்பவர்கள் போலிதிராவிடர்கள்.

 7. தமிழ் நாட்டுக்கு எதற்கு ஜெர்மனும். பிரஞ்சும் மக்ஸ்முல்லேர் பவனும் . அல்லியான்சே பிரான்சும் கற்பிக்கவில்லையா? நமக்கு பிற நாட்டு
  மொழிகள் வேண்டும் . ஆனால் சமச்க்ரதம் கூடாது .இது எப்படி ?
  .

 8. சமஸ்க்ருதம் வடமொழி, வேற்றுமொழி என்று கருதியதால் வந்த வினையைத்தான் அனுபவித்து வருகிறோம். தாய்மொழியாம் தமிழெமக்குக் கண் போன்றது. அதன் மறுகண் போன்றது சமஸ்க்ருதம். சனாதன தர்மத்தை அறிய முற்படும் எவருக்கும் சமஸ்க்ருதம் இன்றியமையாதது, மேலும், இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஈடான மொழிகள் எம் தாய் மொழியாம் தமிழும் சமஸ்க்ருதமுமே! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவிட வழிவகை செய்திடல் வேண்டுமென்ற முண்டாசுக் கவி சமஸ்க்ருதம் நன்கறிந்தவரே. அவரை விடவா தாய்மொழிப் பற்றுள்ளவரைக் காணமுடியும்?
  இதைப் பாருங்கள் – https://www.gnanaboomi.com/what-do-these-eyes-denote
  தன்னை ஹிந்து என்று அழைத்துக் கொள்ளும் எவரும் வேதங்களை அறிய வேண்டும். அதற்கு ஒரே வழி, சமஸ்க்ருத மொழியைக் கற்பதே. தமிழிலுள்ள நிகரில்லாத பல பொக்கிஷங்களை சமஸ்க்ருதத்திலும் மொழி பெயர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *