கோவிலுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. கற்களால் கட்டப்பட்ட, தொன்மைவாய்ந்த பழைய கோவில். மேல்தளங்களில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன. சில இடங்களில் தளங்கள் கீழே இறங்க ஆரம்பித்திருந்தன. கருவறை கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு அடி கீழே இருந்தது. சன்னதிக்குள் நுழையும் வழியில் சிமிட்டித்தரை… ஊருக்கு அருகாமையில் இருக்கிறதே, ஏன் யாரும் வருவதில்லை என்று கேட்டதற்கு, ஒரு விரக்திச் சிரிப்பையே பதிலாகத் தந்தார் அர்ச்சகர். முப்பது வயதிற்குள்தான் இருக்கும்.
தினமும் எட்டு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கோவிலுக்கு காலையில் வருபவர், மாலை பூஜை முடிந்து செல்லும்வரை வரை கோவிலிலேயே தங்கி விடுவதாகச் சொன்னார்….