நமது முஸ்லிம்கள் அமைதியாகவும் மற்ற மதத்தினரோடு இணக்கமாகவும் இதுவரை வாழ்ந்துவந்தார்கள் என்றால், இங்கு பின்பற்றப்பட்ட இஸ்லாம், இப்போது உலகம் முழுவதிலும் ஐ.எஸ். புகுத்த முயலும் இஸ்லாத்திற்கு மாறுபட்டதாக இருந்தது ஒரு முக்கியக் காரணம். ஆனால், சில வருடங்களாக இது மாறிவருகிறது. இந்திய மசூதிகளில் இப்போது போதிக்கப்படும் இஸ்லாம், சையத் குதூப் மற்றும் அப்துல் வஹாப் போன்றவர்களின் போதனைகளைப் பின்பற்றுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பினால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்ற தவறான பிரச்சாரம் தொடர்ந்து இஸ்லாமிய போதகர்களால் செய்யப்பட்டு வருகிறது. மிக அதிக எண்ணிக்கையிலான இந்திய முஸ்லீம்கள் இத்தகைய பொய்களை நம்புகின்றனர்… நபியின் காலம் பொற்காலம் என்றும் அதைநோக்கி இஸ்லாம் திரும்பவேண்டும் என்றும் நினைப்பவர்களுக்கு ஜிகாதி தீவிரவாதம்தான் இஸ்லாத்தின் உண்மை முகம் என்பது புரிபடவில்லை…
View More ஜிகாதி பயங்கரவாதமும் இந்திய முஸ்லிம்களும்: தவ்லீன் சிங்Tag: புனிதப் போர்
வன்முறையே வரலாறாய்… – 20
சிறிய தீவுக் கூட்டங்களில் நெருங்கி வாழும் மக்களின் மீது செலுத்தப்பட்ட கட்டற்ற வன்முறையே இந்தோனேஷியா மற்றும் ஃபிலிப்பைனில் பெருமளவு பழங்குடிகளை வெகு வேகமாக இஸ்லாமியர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தது என்பதே இன்றைய வரலாற்றாசிரியர்களின் முடிவு. சூஃபிக்கள் அமைதியான முறையில் தென் கிழக்கு ஆசியாவில் இஸ்லாமைப் பரவச் செய்தார்கள் என்பது வெறுக் கட்டுக்கதையே அன்றி வேறோன்றுமில்லை. மேலும் அப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான ஷாஃபி இஸ்லாமிய சட்டங்களும் இதற்கு இன்னொரு காரணம். இந்தியாவில் கொடூரங்கள் ஓரளவிற்குக் குறைந்த ஹனீஃபி இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்து காஃபிர்கள் “திம்மி”க்களாக நடத்தப்பட்டார்கள். ஆனால் ஷாஃபி சட்டங்கள் “மதம் மாறு; அல்லது மரணம்” என்னும் கொள்கையை உடையது….
View More வன்முறையே வரலாறாய்… – 20