இவரைப்பற்றிய செய்திகள் மற்றும் இவரது ஆங்கில உரைகள், உரையாடல்களைத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பதால் நன்கு அறிந்திருந்தாலும், திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் செய்துள்ள இந்த 2020 நேர்காணல் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது.. காஞ்சிப் பெரியவர் (ஸ்ரீ ஜெயேந்திரர்) “நீ இந்த நாட்டுக்காக பெரிய செயல்களை செய்து இங்கேயே புகழ்பெறுவாய்” என்று சொன்னதை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டதைச் சொல்லி “என்னிடம் பாஸ்போர்ட்டே கிடையாது” என்று மிக இயல்பாக, சிரித்துக்கொண்டே கூறுகிறார்…
View More சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி: ஒரு நேர்காணல்Tag: பொறியியல்
நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3
உயர் கல்வியை பொறுத்தவரையில் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுவதே சரியானது. இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்களே – என்பது உண்மைதான். ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. 20 வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று 6-7ம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். காரணம்? சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது. ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது. இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை. எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும்…..
View More நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3