பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

பறையொலி கீழானதென்றும் பறை இசைப்போர் கீழானவரென்றும் கருதும் சமுதாயமாக நாம் இருந்திருப்பின் பறை இசை கலைஞர் இப்படி கம்பீரமாக இறை வடிவங்களுக்கொப்ப கோவில் மண்டபத் தூண் சிற்பத்தில் ஏன் காட்டப்பட வேண்டும்?… சுசீந்திரத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடந்த போது ஒரு தலைமுறைக்கு முன்னால் பட்டியல் சமுதாய மக்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக பெரும் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே கோவில் தெருவில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வைத்து பாபா சாகேப் அம்பேத்கரின் பரிநிர்வாண நாள் குறித்த உரை நடைபெறுகிறது….

View More பறையர், இந்துத்துவம், தீண்டாமை: சில குறிப்புகள்

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2

ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாகத் தெரிகிறது. ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். அப்படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான். .. தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர்….

View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2

யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்

“விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை […] கிரந்தம் தமிழிலிருந்து தனிப்பட்ட எழுத்துமுறை. அதை தனியாகத்தான் யூனிகோடில் ஏற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. [..] எதுவாகினும், நம்முடைய சாத்திரங்கள், கிரந்தங்கள் முதலியவற்றை மூலபாடம் தவறாது தமிழ் எழுத்து முறையில் எழுதக்கூடிய நுட்பத்தேடல் தொலை தூரத்தில் இல்லை [..]

View More யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்