குழந்தையின் வாய்முத்தம் உலகில் நாம் அடையும் வேதனைகள், வருத்தங்கள் அத்தனையையும் துடைத்து நீக்கிவிடும் தூய்மையுடையது… பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் திருவாயினுடைய பெருமையைப் பேசுவது பிள்ளைத்தமிழின் முத்தப் பருவம்… அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தாய்தந்தையரோ அல்லது தாத்தா பாட்டியோ தமக்கு மகவாய் வந்து பிறந்துள்ளனர் என்று மகிழ்வுடன் நினைந்து குழந்தைகள் மீது காதல் கொள்வது மக்கள் இயல்பு… ஆபிரகாமிய மதங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு, பரம்பொருளுக்கு மானுடக் குழந்தைகளின் இயல்புகளைக் கற்பித்துக் குழந்தைகளைப் பாராட்டிச் சீராட்டிக் கொஞ்சி வளர்க்கும் தாயன்பையே பத்திநெறியாக தெய்வானுபவமாக மாற்றிக் கொள்ளும் விரகினைப் பிள்ளைத்தமிழ் இலக்கியம் நமக்கு அளித்துள்ளது…
View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]